உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனுக்கள் இம்மாதம் கோரப்படுமா?

0 461

ஏ.ஆர்.ஏ.பரீல்

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் விவ­காரம் நாட்டில் தற்­போது பேசு பொரு­ளாக மாறி­யுள்­ளது. அரசு உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை பிற்­போ­டுவதற்­கான காய் நகர்த்­தல்­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாக எதிர்க்­கட்சி தொடர்ச்­சி­யாக குற்றம் சாட்டி வரு­கி­றது.
இவ்­வா­றான நிலையில் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் நிமல் புஞ்சி ஹேவா, இம்­மாத இறு­தியில் உள்­ளூ­ராட்சி தேர்­த­லுக்­கான வேட்பு மனுக்கள் கோரப்­ப­டு­மென அறி­வித்­துள்ளார்.

தேர்­தல்கள் ஆணைக்­குழு ஒன்று கூடி இத்­தீர்­மா­னத்தை மேற்­கொண்­ட­தா­கவும் வேட்பு மனுக்கள் கோரும் அர­சாங்க வர்த்­த­மானி இம்­மாத இறு­தியில் வெளி­யி­டப்­ப­டு­மெ­னவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­ மீது
நம்­பிக்கை இல்லை
தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் நிமல் புஞ்சி ஹோவா உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எத்­தனை அறிக்­கைகள் வெளி­யி­ட்­டாலும் உறுதி மொழிகள் வழங்­கி­னாலும் எதிர்க்­கட்சி அவற்றை நம்­பு­வ­தாகத் தெரி­ய­வில்லை. இறுதி நேரத்தில் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு கைவி­ரித்து விடு­மென்றே அவர்கள் நம்­பு­கி­றார்கள்.
இந்­நி­லை­யிலே அர­சி­ய­ல­மைப்பு மற்றும் அடிப்­படைக் கோட்­பா­டு­க­ளுக்கு அமைய உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை விரை­வாக நடத்­து­மாறு தேசிய தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்கு அறி­விக்­கு­மாறு வலி­யு­றுத்தி உயர் நீதி­மன்றில் மனுக்கள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஸ்ரீலங்கா பொது­ஜ­ன­பெ­ர­மு­னவின் தவி­சா­ளரும் சுதந்­திர மக்கள் காங்­கி­ரஸின் உறுப்­பி­ன­ரு­மான ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்­துள்ளார்.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் திக­தியை நிர்­ண­யிக்கும் அதி­காரம் பாரா­ளு­மன்­றத்­துக்குக் கிடை­யாது. சூழ்ச்­சி­களால் தேர்­தலைப் பிற்­போட ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் அவர் தலை­மை­யி­லான இந்த அர­சாங்­கத்­துக்கு மக்­க­ளாணை கிடை­யாது. மக்கள் மத்­தியில் செல்­வ­தற்கு அச்­ச­ம­டைந்து அர­சாங்கம் உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலை பிற்­போ­டு­வ­தற்குப் பல்­வேறு சூழ்ச்­சி­களை மேற்­கொண்­டு­வ­ரு­கி­றது. தேர்­தலை பிற்­போடும் அர­சாங்­கத்தின் முயற்­சிக்கு சட்­டத்தின் ஊடாகப் பதி­லடி கொடுப்போம் என்று தெரி­வித்­துள்ள எதிர்க்­கட்சி நாட்டின் அர­சி­ய­ல­மைப்பு மற்றும் அடிப்­படை கோட்­பா­டு­க­ளுக்கு அமைய உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை விரை­வாக நடத்­து­மாறு தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்கு அறி­விக்­கு­மாறு பிர­தான எதிர்க்­கட்­சிகள் ஒன்­றி­ணைந்து உயர்­நீ­தி­மன்­றத்தில் இரண்டு ரிட்­ம­னுக்களை கடந்த திங்­கட்­கி­ழமை தாக்கல் செய்­துள்­ளன.

முத­லா­வது மனுவை சுதந்­திர மக்கள் காங்­கிரஸ் சார்பில் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸும், ஐக்­கிய மக்கள் சத்­தியின் பொதுச் செய­லாளர் ரஞ்சித் மத்­தும பண்­டா­ரவும் தாக்கல் செய்­துள்­ளனர். இரண்­டா­வது மனுவை ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பொதுச் செய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர, தமிழ் தேசி­யக்­கட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அநு­ர­பி­ரி­ய­தர்­ஷன யாப்பா ஆகியோர் தாக்கல் செய்­துள்­ளனர்.

எதிர்க்­கட்­சியின் குற்­றச்­சாட்டு
நாட்டில் இறு­தி­யாக உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் 2018 பெப்­ர­வரி மாதம் 10 ஆம் திகதி நடை­பெற்­றது. இத்­தேர்தல் 341 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் 340 மன்­றங்­க­ளுக்கே நடை­பெற்­றது. இதன்­படி இந்த உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பதவி 2022 ஆம் ஆண்டு அதா­வது இவ்­வ­ருடம் பெப்­ர­வரி மாதத்­துடன் காலா­வ­தி­யா­கி­விட்­டது. என்­றாலும் நாடு எதிர்­கொண்­டுள்ள பொரு­ளா­தார நெருக்­கடி கார­ண­மாக இத்­தேர்தல் ஒரு வரு­டத்­தினால் பிற்­போ­டப்­பட்­டது.

அடிப்­ப­டையில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எதிர்­வரும் (2023) மார்ச் 20 ஆம் திக­திக்கு முன்பு நடத்­தப்­ப­ட­வேண்டும் என்­பதே எதிர்க்­கட்­சியின் வாத­மாக உள்­ளது. உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் விவ­காரம் தொடர்பில் பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடு­தலை முன்­னணி என்­பன பாரா­ளு­மன்­றத்­துக்­குள்ளும், பாரா­ளு­மன்­றத்­துக்கு வெளி­யிலும் கடந்த நாட்­களில் குரல் எழுப்பி வந்­தன.

அர­சாங்கம் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை காலம் தாழ்த்த முயற்­சிக்­கி­றது. அதற்­கான நகர்­வு­களை முன்­னெ­டுத்து வரு­கி­றது என்று பிர­தான எதிர்க்­கட்சி குற்றம் சுமத்­து­வ­தற்கு பிர­தான காரணம் ஒன்று உள்­ளது. அதா­வது ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த அக்­டோபர் மாதம் 9 ஆம் திகதி ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்தில் தொழில் வல்­லு­னர்­க­ளு­ட­னான சந்­திப்­பொன்­றினை நடத்­தி­யி­ருந்தார். அக்­கூட்­டத்தில் அவர் அறி­விப்­பொன்­றினை வெளி­யிட்டார். ஜனா­தி­பதி இக்­கூட்­டத்தில் பாரா­ளு­மன்றத் தேர்தல் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்ல் முறை­மை­களில் மேற்­கொள்ள வேண்­டிய திருத்­தங்­களை முன்­வைத்தார். இத்­தி­ருத்­தங்­களில் ஒன்றே உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையை 8000 லிருந்து 4000 ஆகக் குறைப்­ப­தாகும்.

நடை­மு­றை­யி­லுள்ள தேர்தல் முறைமை
உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் தற்­போது கலப்பு முறை தேர்தல் முறை­மையே அமுலில் உள்­ளது. இம்­முறை அமு­லுக்கு வந்­ததன் கார­ண­மா­கவே உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பினர் எண்­ணிக்கை 8000 ஆக அதி­க­ரித்­தது. இதற்கு முன்பு விகி­தா­சார தேர்தல் முறை­மையின் கீழ் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பினர் எண்­ணிக்கை 4000 ஆகவே இருந்­தது. தேர்தல் வட்­டா­ரத்தின் அடிப்­ப­டை­யிலும், விகி­தா­சார முறை­மையின் கீழும் உறுப்­பி­னர்கள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­த­னா­லேயே உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையில் அதி­க­ரிப்பு ஏற்­பட்­டது.

எல்லை நிர்­ண­யத்தின் அவ­சியம்
தற்­போது நடை­மு­றை­யி­லு­ள­்ள மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தாது உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பி­னர்­க­ளது எண்­ணிக்­கையைக் குறைக்க வேண்­டு­மென்றால் கட்­டா­ய­மாக உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் அதி­கார எல்­லைக்­குட்­பட்­டுள்ள தேர்தல் வட்­டா­ரங்­களின் எண்­ணிக்கை குறைக்­கப்­பட வேண்டும். அதற்­காக புதி­தாக எல்லை நிர்­ணயம் மேற்­கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

இலங்­கையில் அண்­மைக்­கா­லங்­களில் நடை­பெற்ற எல்லை நிர்­ண­யங்கள் தொடர்பில் பெரும்­பா­லானோர் திருப்­தி­ய­டை­ய­வில்லை. எல்­லை­நிர்­ண­யத்தில் பல்­வேறு குறை­பா­டுகள் இடம்­பெற்­ற­தாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலில் கலப்பு தேர்தல் முறை­மையை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்­கென சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. 2012 ஆம் ஆண்டு இதற்­கான எல்லை நிர்­ணய பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்டு 2017 ஆம் ஆண்­டிலே நிறை­வுற்­றது.

இதே போன்று மாகாண சபைத் தேர்­தலில் கலப்பு முறையை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்­காக 2017 ஆம் ஆண்டு இறு­தியில் சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டது. இத­ன­டிப்­ப­டையில் மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணயம் ஆரம்­பிக்­கப்­பட்டு அப்­ப­ணிகள் 2018 ஆகஸ்ட் மாதத்தில் நிறை­வுக்கு வந்­தது. என்­றாலும் மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்­கையை பாரா­ளு­மன்றம் நிரா­க­ரித்­தது.ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. அத­னை­ய­டுத்து பிர­த­மரின் தலை­மை­யி­லான குழு­வுக்கு மீள் பரி­சீ­ல­னைக்­காக அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டது. அக்­கு­ழுவும் குறிப்­பிட்ட கால எல்­லைக்குள் தனது பணி­யினை நிறைவு செய்­ய­வில்லை. இதன்­கா­ர­ண­மாக 2017 மற்றும் 2018 ல் நடாத்­தப்­பட வேண்­டிய மாகா­ண­சபைத் தேர்தல் இன்­று­வரை நடாத்­தப்­ப­ட­வில்லை.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு உள்­வாங்கும் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை மட்­டுப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். 4000 ஆகக் குறைக்­கப்­பட வேண்டும் என ஜனா­தி­பதி தீர்­மா­னித்­த­தை­ய­டுத்து எதிர்க்­கட்சி குழப்­ப­ம­டைந்­தது. உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் தொடர்­பிலும் எல்லை நிர்­ணயம் ஆரம்­பிக்­கப்­ப­டலாம் என எதிர்­க்கட்சி எதிர்­பார்த்­தது. அதனால் இத்­தேர்­தலும் தாம­திக்­கப்­ப­டலாம் என கரு­தப்­பட்­டது.

எதிர்­க்கட்சி எதிர்­பார்த்­தப்­படி பிர­தமர் தினேஷ் குண­வர்­த­ன­வினால் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்­லை­களை மீள நிர்­ண­யிப்­ப­தற்கு எல்லை நிர்­ணய குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. இக்­கு­ழுவின் தலை­வ­ராக தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய நிய­மிக்­கப்­பட்டார். இவ­ருக்கு எதி­ராக எதிர்க்­கட்சி பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­துள்­ளது. எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 28 ஆம் திக­திக்கு முன்பு எல்லை நிர்­ணய அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வேண்­டு­மென குழு­வுக்கு ஆணை­பி­றப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. என்­றாலும் தேர்­தலை திட்­ட­மிட்­ட­படி நடத்த முடி­யாத நிலைமை உரு­வா­கலாம். பெப்­ர­வரி 28 ஆம் திகதி எல்லை நிர்­ணய அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­டும்­போது அபேட்­ச­கர்­க­ளுக்­கான வேட்பு மனு­கோ­ரப்­பட்டு தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்கும் என்­பதை குறிப்­பிட்­டாக வேண்டும்.

அர­சாங்கம் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை பிற்­போ­டலாம் என்ற சந்­தேகம் வலுப்­பெற்று வரு­கி­றது. நாடு தற்­போது எதிர்­நோக்­கி­யுள்ள பொரு­ளா­தார நெருக்­க­டியை காரணம் காட்டி தேர்­தலை பிற்­போ­டலாம். அத்­தோடு தற்­போ­தைய ஜனா­தி­ப­தியின் கட்சி 2017இல் மாகா­ண­சபைத் தேர்­தலை நடத்­தா­ம­லி­ருப்­ப­தற்கு பல்­வேறு முயற்­சி­களை முன்­னெ­டுத்து வெற்­றியும் கண்­டது. அந்­நி­லைமை உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்கு ஏற்­ப­டலாம்.

உள்­ளு­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பினர் எண்­ணிக்கை கலப்பு முறை தேர்தல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­த­னாலே அதி­க­ரிப்பு ஏற்­பட்­டது.

2018ஆம் ஆண்டு 340 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு தெரிவு செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 8691 ஆகும். இவர்­க­ளுக்கு சம்­ப­ள­மாக மாதாந்தம் 135 மில்­லியன் ரூபாவும், மேலும் வேறு கொடுப்­ப­ன­வு­க­ளுக்­காக மாதாந்தம் 600 மில்­லியன் ரூபாவுக்கும் மேலாக செல­வி­டப்­பட்­டது. இந்த கொடுப்­ப­ன­வு­களை நோக்கும் போது கடந்த 4 வருட காலத்­துக்கும் இவர்­க­ளுக்­காக சுமார் 3500 கோடி ரூபா செல­வி­டப்­பட்­டுள்­ளது.
இத்­தனை பெரும்­நிதி உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை செயற்­ப­டுத்­து­வ­தற்கு செல­வி­டப்­பட்­டுள்­ளது. இத்­தனை நிதி செல­வி­டப்­பட்டும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளினால் பொது­மக்­க­ளுக்கு உரிய சேவை கிடைக்­கப்­பெற்­றதா? என்­பதை ஒவ்­வொ­ரு­வரும் மீட்டிப் பார்க்க வேண்டும். உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­களின் மாத சம்­பளம் 15 ஆயிரம் ரூபா­வாகும். இதே­வேளை மாந­கர சபை உறுப்­பி­னர்­களின் சம்­பளம் 30 ஆயிரம் ரூபா­வாகும்.

நிலைமை இவ்­வாறு இருக்கும் போது உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் உறுப்­பி­ன­ரா­வ­தற்கு தேர்­தலில் போட்­டி­யி­டு­ப­வர்கள் மில்­லியன் கணக்கில் செல­வி­டு­கி­றார்கள். ஏன் என்றால் இந்த உறுப்­பினர் பதவி மூலம் சிறிய தொகையை சம்­ப­ள­மாக பெற்றுக் கொண்­டாலும் அவர்கள் இலஞ்சம் பெறு­வதன் மூலமும், ஒப்­பந்­தக்­கா­ரர்­க­ளி­ட­மி­ருந்து பெருந்­தொகைப் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஒப்­பந்­தங்­க­ளுக்கு அனுமதி வழங்குவதன் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதிப்பதை நடைமுறையில் காண முடிகிறது.

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகரித்துள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையை நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய நிலையில் எம்மால் சுமக்க முடியாது. நாட்டு மக்களின் வரி இதற்காக செலவிடப்படுவதை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.

எனவே உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எண்­ணிக்­கையை குறைக்கும் ஜனா­தி­ப­தியின் தீர்­மா­னத்தை நாம் வர­வேற்க வேண்டும். ஆனால் எல்லை நிர்­ண­யத்தை காரணம் காட்டி உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை பின் தள்­ளு­வ­தற்கு அரசு முயற்­சிக்­கு­மென்றால் அதனை எம்மால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இச்­சந்­தேகம் நாளாந்தம் வலுப்­பெற்று வரு­கி­றது.
தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் நிமல் புஞ்­சி­ஹேவா, ‘உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்­கான வேட்பு மனுக்கள் இம்­மாத இறு­திக்குள் கோரப்­ப­டு­மென’ தெரி­வித்­துள்­ளதை கவ­னத்தில் கொண்டு உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை தொடர்­பான பிரச்­சி­னைக்கு தீர்­வொன்­றினை அரசாங்கம் உடனடியாக பெற்றுக்கொண்டு தேர்தலை நடத்த வேண்டும்.
கலப்பு தேர்தல் முறையிலன்றி முன்னைய விகிதாசார முறையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசினால் முன்னெடுக்க முடியும். தேர்தல் நாட்டு மக்களின் ஜனநாயக அடிப்படை உரிமையாகும். அதனை தொடர்ந்து தாமதப்படுத்துவது ஜனநாயகத்தை மீறும் செயலாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.