எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை: சிறுபான்மை மக்களுக்கு அநீதியிழைக்கக்கூடாது

ரிஷாட் வலியுறுத்து

0 322

எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு அநீ­தி­யி­ழைக்­கப்­படக் கூடாது என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வ­ரு­மான ரிஷாட் பதி­யுதீன் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்­களின் வட்­டார எல்லை நிர்­ண­யத்தை மேற்­கொள்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள தேசிய எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரி­யவை, மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாட் பதி­யுதீன் கடந்த திங்­க­ளன்று கொழும்பில் சந்­தித்துக் கலந்­து­ரை­ய­ாடியபோதே அவர் இவ்­வாறு வலி­யு­றுத்­தினார்.

இதன்­போது அவர் மேலும் தெரி­விக்­கையில், கடந்த முறை இடம்­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின் போது, தேர்தல் முறை­யிலே குள­று­ப­டிகள் இருந்­த­தினால், அந்தத் தேர்தல் முறை­யா­னது பாரிய தோல்­வியை ஏற்­ப­டுத்­தி­யது.

இனி­வரும் காலங்­க­ளிலும் உள்­ளூ­ராட்சி சபை உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையை அரை­வா­சி­யாக குறைக்கும் பட்­சத்தில், சமூக ரீதி­யான மற்றும் இன­ரீ­தி­யான பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை ஏற்­படும். இதன் கார­ண­மாக பாரிய சவால்­க­களை எதிர்­கொள்ள வேண்­டிய சூழல் ஏற்­படும்.
எனவே, பழைய விகி­தா­சார முறைப்­படி தேர்­தலை நடத்த வேண்டும். அவ்­வாறு நடத்­து­கின்ற பட்­சத்தில் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கை­யிலும் எதிர்­பார்க்­கின்ற அள­வி­லான குறைப்பை செய்ய முடியும்.

பழைய விகி­தா­சார தேர்தல் முறையை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்­பதே தமது கட்­சியின் இறுதி நிலைப்­பாடு. அதற்­கு­ரிய சிபா­ரிசை எல்லை நிர்­ணய ஆணைக் குழு அர­சாங்­கத்­திடம் முன்­வைக்க வேண்டும். உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை பிற்­போட அனு­ம­திக்க வேண்டாம் என்றார்.

இதன்­போது, எல்லை நிர்­ணயம் தொடர்பில் நாட­ளா­விய ரீதியில், மக்கள் காங்­கிரஸ் கட்­சி­யினால் நடாத்­தப்­பட்ட கலந்­து­ரை­யா­டல்­களின் பின்னர், பொது­மக்­க­ளி­னாலும் பொது அமைப்­புக்­க­ளி­னாலும் எல்லை நிர்­ணய திருத்தம் சம்­பந்­த­மாக, தமது கட்­சிக்கு வழங்­கப்­பட்ட கோரிக்­கைகள் அடங்­கிய ஆவ­ணத்தை, ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரி­ய­விடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கையளித்தார்.

இந்த சந்திப்பில், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹமீட் மற்றும் மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.