ஐ.தே.க.வை ஐ.எஸ். அமைப்­புக்கு ஒப்­பிடும் டலஸ் அழ­கப்­பெ­ரும

0 767

ஐக்­கிய தேசியக் கட்சி ஜன­நா­யகம் பற்றி பேசு­வது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு குர்ஆன் போத­னை­களைக் கூறிக்­கொண்டு மக்­களின் கழுத்­தினை வெட்டி கொலை செய்­வ­தற்கு சம­மாகும். இதுவே ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜன­நா­ய­க­மாகும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டலஸ் அழகப்பெரும குறிப்­பிட்டார். நிகழ்­வொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். நாம் அர­சி­ய­ல­மைப்பு சூழ்ச்­சிக்­கா­ரர்கள் என்று கூறு­கி­றார்கள். இதனை நாம் உலகில் ஒரு உதா­ர­ணத்­துடன் கூற­வி­ரும்­பு­கிறேன்.

அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ரா­ன­வர்கள் எப்­போது தேர்­த­லொன்­றுக்­காக போரா­டி­னார்கள். ஏகா­தி­பத்­தி­ய­வா­திகள் எப்­போது தேர்­த­லொன்­றினை வேண்டி நின்­றார்கள்.

ஐக்­கிய தேசிய கட்சி ஜன­நா­யகம் பற்றி பேசு­வது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு குர்ஆன் போத­னை­களைக் கூறிக்கொண்டு அப்பாவி மக்களின் கழுத்தை வெட்டி கொலை செய்வதற்கு சமமாகும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.