கொழும்பில் சிறுநீரக வர்த்தகமா? குற்றச்சாட்டுக்கள் உண்மையா? திட்டமிட்ட பிரசாரங்களா?

0 313

எம்.எப்.எம்.பஸீர்

அது கடந்த நவம்பர் 18 ஆம் திகதி. பொரளை – கொட்டா வீதியில் அமையப் பெற்­றுள்ள ‘வெஸ்டேர்ன்’ தனியார் வைத்­தி­ய­சா­லையில் அமை­தி­யற்ற நிலை ஏற்­பட்­டது. தமது சிறு­நீ­ரக நன்கொடை நிதி தொடர்பில் கிடைக்க வேண்­டிய உப­காரத் தொகை கிடைக்­க­வில்லை எனவும் அதனை பெற்றுத் தரு­மாறும் ஒரு குழு முன்­னெ­டுத்த எதிர்ப்­புகள் இதற்கு கார­ண­மாகும்.

வைத்­தி­ய­சாலை நிர்­வா­கத்தின் தக­வல்கள் படி வந்­தி­ருந்­த­வர்கள் வைத்­தி­ய­சாலை மீது கல்­வீச்சு தாக்­கு­த­லையும் முன்­னெ­டுத்­துள்­ளனர். அவர்கள் தமக்கு கிடைக்க வேண்­டிய கொடைப் பணத்தைத் தரு­மாறு கூச்­ச­லிட்­டுள்­ளனர். இவ்­வா­றான கொடுக்கல் வாங்­கல்கள் சட்­ட­வி­ரோ­த­மா­னவை எனவும் யாரும் தமது அவ­ய­வங்­களை பணத்­துக்­காக பரி­மாற முடி­யாது எனவும் வைத்­தி­ய­சாலை நிர்­வா­கத்­தினர் அவர்­க­ளுக்கு எடுத்துக் கூறி­ய­தாக வைத்­தி­ய­சாலை தரப்­பினர் கூறு­கின்­றனர்.

இவ்­வா­றான நிலையில் கடந்த நவம்பர் 21 ஆம் திகதி தனியார் ஊடகம் ஒன்­றூ­டாக சட்ட விரோத சிறு­நீ­ரக வர்த்­தகம் தொடர்­பி­லான விடயம் ஒன்று தொடர்பில் ஒரு வெளிப்­ப­டுத்தல் ஒளி­ப­ரப்பு செய்­யப்­பட்­டுள்­ளது. அதன் பின்னர் நவம்பர் 23 ஆம் திகதி பொரளை பொலிஸ் நிலை­யத்­துக்கு 5 முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ளன.

கொழும்பு 13, புளூ­மெண்டல் வீதி, சிறி­சந்த செவன வீட­மைப்பில் வதியும் வலி­சுந்­தர முதி­யன்­ச­லாகே சுபுன் சஞ்­ஜீவ எனும், பொரளை தனியார் வைத்­தி­ய­சாலை சிறு­நீ­ரக வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்கு தர­க­ராக செயற்­பட்ட நப­ராக கரு­தப்­ப­டு­பவர், 5 பேருடன் சென்று பொரளை பொலிஸில் இந்த முறைப்­பா­டு­களை செய்­தி­ருந்தார்.

கொழும்பு – கொச்­சிக்­க­டையை சேர்ந்த வேல்டிங் தொழி­லாளர் ஒருவர், கொழும்பு 15 பஞ்­ஞா­னந்த மாவத்­தையைச் சேர்ந்த வீதித் துப்­ப­ரவு தொழி­லாளி, புளூ­மெண்டல் – சிரி சந்த செவன குடி­யி­ருப்பில் வசிக்கும் வேல்டிங் தொழி­லாளி, கொழும்பு 13 மீரா­னியா வீதியைச் சேர்ந்த கூலித் தொழி­லாளி, மற்றும் கொழும்பு 15 பஞ்­ஞா­னந்த மாவத்தை, மெத் சிறி செவன வீட­மைப்பில் வசிக்கும் ஒன்­றரை வயது குழந்­தையின் தாயொ­ருவர் இந்த முறைப்­பா­டு­களை செய்­தி­ருந்­தனர். இவர்கள் அனை­வரும் 30 வய­துக்கும் 42 வய­துக்கும் இடைப்­பட்­ட­வர்கள். குறித்த ஐவ­ரி­டமும் மோச­டி­யான முறையில் சிறு­நீ­ர­கங்கள் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர்­களின் முறைப்­பா­டு­களில் கூறப்­பட்­டுள்­ளன. அவர்­க­ளிடம் இருந்து சிறு­நீ­ர­கங்கள் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட பின்னர், சட்­டத்தை விவ­ரித்து அவர்­க­ளுக்கு வாக்­க­ளிக்­கப்­பட்ட பணத் தொகையை வழங்­காமல் அவர்கள் துரத்­தி­ய­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக முறைப்­பா­டு­களில் கூறப்­பட்­டுள்­ளது.

இந் நிலையில் இந்த 5 முறைப்­பா­டுகள் மீதான விசா­ர­ணை­க­ளையும் முன்­னெ­டுக்கும் பொறுப்பு சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வி­ன­ரிடம் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேச­பந்து தென்­ன­கோ­னினால் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

இந் நிலை­யி­லேயே சி.சி.டி.யின் பணிப்­பாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் நெவில் சில்­வாவின் ஆலோ­ச­னைக்கு அமைய பொலிஸ் பரி­சோ­தகர் ரன்­ன­மல்ல உள்­ளிட்ட குழு­வினர் இது குறித்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

முதலில் முறைப்­பா­டு­களில் கூறப்­பட்­டுள்ள தனியார் வைத்­தி­ய­சாலை அமைந்­துள்ள நீதி­மன்ற நியா­யாதிக்க எல்­லை­யான கொழும்பு நீதிவான் நீதி­மன்றம் இலக்கம் 2 இல் பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­த­தாக கூறி முதல் தகவல் அறிக்­கையை சமர்ப்­பித்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

அந்த விசா­ர­ணை­களில் தற்­போது சுமார் 12 வரை­யி­லான வாக்கு மூலங்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது.

நீதி­மன்­றுக்கு விசா­ர­ணை­யா­ளர்கள் தரப்பு அறி­வித்­துள்ள தக­வல்கள் பிர­காரம், பொலிஸில் முறைப்­பாடு செய்த ஐவ­ரி­னதும் வாக்கு மூலங்­களில் வெளிப்­பட்ட தக­வல்கள் பிர­காரம், சந்துன் (முறைப்­பாடு செய்ய உடன் சென்­றவர்) மற்றும் பாய் எனும் இரு தர­கர்கள் ஊடாக 20 -முதல் 150 இலட்சம் ரூபா­வுக்கு அவர்­க­ளது சிறு­நீ­ர­கங்­களைப் பெற்­றுக்­கொள்ள உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. ‘ வெஸ்டர்ன் எனும் தனியார் வைத்­தி­ய­சா­லையில் இந் நட­வ­டிக்­கைகள் நடந்­துள்­ளன.

இந்த பாதிக்­கப்­பட்ட 5 பேரில், 33 வய­தான தொழி­லா­ள­ரிடம் 90 இலட்சம் ரூபா தரு­வ­தாக கூறியே சிறு­நீ­ரகம் பெறப்­பட்­டுள்­ளது. அந்த நபர் அவ­ரது ஒரு சிறு­நீ­ரகத்தை வெஸ்டர்ன் எனும் வைத்­தி­ய­சா­லையின் உரி­மை­யா­ள­ருக்கே வழங்­கி­யுள்ளார்.
இந்த சிறு­நீ­ரக வர்த்­தகம், வலை­ய­மைப்பு ரீதி­யாக சர்­வ­தேச அளவில் முன்­னெ­டுக்­கப்­படும் ஒரு நட­வ­டிக்­கை­யாகும். மனித உறுப்­புகள் இவ்­வாறு பாரிய அளவில் கடத்­தப்­ப­டு­வது தொடர்பில் வெளிப்­ப­டு­வது இது முதல் முறை­யாகும்.

இந்த சட்ட விரோத நட­வ­டிக்கை ஊடாக கிடைக்கும் பணத்தை தர­கரும் வைத்­தி­ய­சாலை அதி­கா­ரி­களும் பெற்­றுக்­கொண்­டுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. இது­வ­ரை­யி­லான விசா­ர­ணையில், இவ்­வ­ரு­டத்தில் மட்டும் சர்ச்­சைக்­கு­ரிய இந்த வைத்­தி­ய­சா­லையில் 52 சிறு­நீ­ரக மாற்று சத்­திர சிகிச்­சைகள் இடம்­பெற்­றுள்­ளன. இது தொடர்பில் மேல­திக விசா­ர­ணைகள் நடக்­கின்­றன.’ என கடந்­த­வாரம் நீதி­மன்­றுக்கு அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.
அத்­துடன் மேல­திக விசா­ர­ணை­க­ளுக்கு எனக் கூறி, வெஸ்டர்ன் வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பா­ளர்கள் 6 பேருக்கு வெளி­நாட்டு பயணத் தடையும் பெற்­றுக்­கொள்­ளப்பட்­டது. வைத்­தியர் பேரா­சி­ரியர் மொஹம்மட் ஹுசைன் றிஸ்வி ஷரீப், வைத்­தியர் அமீனா றிஸ்வி ஷரீப், வைத்­தியர் மொஹம்மட் ரிகாஸ் ஷரீப், வைத்­தியர் பாத்­திமா ஹபீபா ஷரீப், வைத்­தியர் உமர் ஷரீப் மற்றும் அமித்தா கம­லினி கஸ்­தூரி ஆரச்சி ஆகி­யோரின் வெளி­நாட்டு பய­ணங்­களை தடை செய்தே இவ்­வாறு கொழும்பு மேல­திக நீதிவான் ரஜீந்ரா ஜய­சூ­ரிய ஊடாக தடை உத்­த­ரவு பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

இந் நிலையில் இந்த விவ­காரம் தொடர்பில் 1987 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க உடல் உறுப்பு மாற்றுச் சட்­டத்தின் கீழ் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த சட்டமானது, அறி­வியல், கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்­கங்­க­ளுக்­காக மனித உடல்கள் மற்றும் உறுப்­பு­களை தான­மாக வழங்­குதல் மற்றும், உடல் உறுப்­புக்­களை அகற்­றுதல், உயி­ருடன் இருக்கும் ஒரு­வ­ருக்கு அதனை பொருத்­துதல், அத்­த­கை­யவர்­களின் பாது­காப்பு உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்பில் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள சட்­ட­மாகும். தற்­போது அதன்­ கீ­ழேயே விசா­ர­ணைகள் நடப்­ப­தாக சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் இந்த சிறு­நீ­ரக விசா­ரணை நட­வ­டிக்­கை­க­ளுக்­கான ஆலோ­ச­னை­களை வழங்கும் சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் தெரி­விக்­கின்றார்.

இந் நிலையில் ஏழை எளி­ய­வர்­களை ஏமாற்றி இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் சட்டவிரோத சிறு­நீ­ரக வர்த்­தகம் தொடர்­பி­லான விசா­ர­ணையில் தற்­போ­தைக்கு ஒரு சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள, பாய் என அறி­யப்­படும் பிர­தான தர­கரே இவ்­வாறு எதிர்­வரும் 28 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

இந்த சிறு­நீ­ரக வர்த்­தகம் தொடர்பில் கடந்த 6 ஆம் திகதி கைது செய்­யப்­பட்ட பிர­தான தர­க­ராக செயற்­பட்­ட­தாக கூறப்­படும் ‘பாய் ‘ எனும் பெயரால் அறி­யப்­படும் நபர் நீதி­மன்றில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வி­னரால் ஆஜர் செய்­யப்­பட்டு அடை­யாள அணி­வ­குப்­புக்கு உட்­ப­டுத்­து­வ­தற்­காக நேற்று முன் தினம் 13 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்தார்.

அதன்­படி நேற்று முன் தினம் வழக்கு விசா­ர­ணைக்கு வந்த போது அடை­யாள அணி­வ­குப்­புக்காக அவர் ஆஜர் செய்­யப்­பட்ட போதும், அடை­யாளம் காட்ட வேண்­டிய சாட்­சி­யா­ளர்கள் சுக­யீனம் கார­ண­மாக மன்றில் ஆஜ­ரா­க­வில்லை. 6 சாட்­சி­யா­ளர்­களில் 5 சாட்­சி­யா­ளர்கள் இவ்­வாறு சுக­யீனம் அடைந்­துள்­ளதால் இவ்­வாறு அடை­யாள அணி­வ­குப்பு ஒத்தி வைக்­கப்­பட்­டது. இந்த சாட்­சி­யா­ளர்கள் அனை­வரும் தமது சிறு­நீ­ர­கங்­களை வழங்­கி­ய­வர்கள் என கூறப்­ப­டு­கின்­றது.

இத­னை­ய­டுத்து அடை­யாள அணி­வ­குப்பு எதிர்­வரும் 2023 ஜன­வரி 3 ஆம் திக­திக்கு ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னை­விட, வெஸ்டர்ன் தனியார் வைத்­தி­ய­சா­லையின் சிறு­நீ­ரக சத்­திர சிகிச்சை தொடர்­பி­லான அனைத்து ஆவ­ணங்­களும் தற்­போது சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வி­னரால் பொறுப்­பேற்­கப்­பட்­டுள்­ளது. அந்த ஆவ­ணங்கள் தற்­போது ஆரா­யப்­பட்டு வரு­வ­தாக விசா­ரணை அதி­கா­ரிகள் கூறினர்.

இத­னை­விட இந்த சட்டவிரோத சிறு­நீ­ரக வர்த்­தகம் குறித்த விசா­ர­ணை­களில் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஒருவர் குறித்து தீவிர அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரி­வினர் முன்­னெ­டுக்கும் விசா­ர­ணை­களில் தற்­போது கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவில் கட­மை­யாற்றும் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஒருவர் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதால், இந்த விசா­ர­ணைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

சிறு­நீ­ர­கங்­களை தானம் செய்­த­வர்கள் பொரளை பிர­தே­சத்தில் உள்ள குறித்த தனியார் வைத்­தி­ய­சா­லைக்கு சென்று உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட பணம் கிடைக்­காத கார­ணத்­தினால் அதனை கோரி ஆர்ப்­பாட்டம் செய்­துள்­ளனர். அப்­போது, அவர்­களை அங்கு சென்று சந்­தித்­துள்ள பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஒருவர் தலா இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்­துள்­ள­துடன், ‘இனி தொந்­த­ரவு செய்யக் கூடாது. மீறி அப்­படி செய்தால் எலும்­பு­களை உடைத்­து­வி­டுவேன்.’ என மிரட்­டி­யுள்ளார்.

இந் நிலை­யி­லேயே இந்த கடத்­தலின் பின்­ன­ணியில் பொலிஸ் அதி­கா­ரிகள் இருக்­கி­றார்­களா என்­பது குறித்து மேலும் விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­கி­றது.
எனினும் சட்ட விரோத சிறு­நீ­ரக வர்த்­தகம் தொடர்­பி­லான குற்­றச்­சாட்­டுக்­களை அந்த வைத்­தி­ய­சாலை முற்­றாக மறுக்­கின்­றது.

வைத்­தி­ய­சா­­லையின் விளக்­கம்
இல. 218, கொட்டா வீதி பொரள்­ளையில் அமைந்­துள்ள வெஸ்டர்ன் ஹொஸ்­பி­ட­லுடன் சட்­ட­வி­ரோ­த­மான உடல் உறுப்பு கடத்தல் மோச­டியை சம்­பந்­தப்­ப­டுத்தி ஊட­கங்கள் வாயி­லாக பரப்­பப்­படும் செய்­திகள் திட்­ட­மிட்ட, ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட சேறு­பூ­சல்கள் என வர்­ணித்­துள்ள அந்த வைத்­தி­ய­சாலை, அது குறித்து ஊடக அறிக்­கை­யினை வெளி­யிட்டு பதி­ல­ளித்­துள்­ளது.

எவ்­வா­றா­யினும் இந்த விட­யத்தில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு ஒரு­வரைக் கைது செய்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் நிலையில், விசா­ர­ணைகள் நிறை­வ­டையும் வரை காத்­தி­ருப்­ப­தா­கவும், இது தொடர்பில் முறை­யாகச் செய்­யப்­படும் எந்த விசா­ர­ணைக்கும் பூர­ண­மான ஒத்­து­ழைப்பு வழங்­கப்­படும் எனவும் அவ்­வைத்­தி­ய­சாலை அறி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் அவ்­வைத்­தி­ய­சாலை வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில், கடந்த 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் போதும், தற்­கொ­லை­தாரி சஹ்­ரானின் சகோ­தரர் ரில்­வா­னுக்கு அதற்கு முன்­னைய சந்­தர்ப்பம் ஒன்றில் சிகிச்­சை­ய­ளித்­த­தாக வைத்­தி­ய­சாலை மீது குற்றம்சாட்­டப்­பட்­ட­தா­கவும், சி.ஐ.டி. விசா­ர­ணையில் அது அடிப்­ப­டை­யற்ற பொய்­யான விடயம் என்­பது நிரூ­பிக்­கப்­பட்­ட­தா­கவும் அவ்­வைத்­தி­ய­சாலை குறிப்­பிட்­டுள்­ளது.

அதனை ஒத்த பொய்­யான ஒரு விட­யமே இந்த சிறு­நீ­ரக கடத்தல் செய்தி எனக் கூறும் அவ்­வைத்­தி­ய­சாலை உள்­நோக்­கத்­தோடு வேண்­டு­மென்றே வைத்­தி­ய­சாலை மீது முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தற்கு வைத்­தி­ய­சாலை தயா­ராக இருப்­ப­தாக குறிப்­பிட்­டுள்­ளது.

இது தொடர்பில் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் விஷே­ட­மாக கூறப்­பட்­டுள்­ள­தா­வது, ‘உட­லு­றுப்­புக்­களை விற்­பனை செய்­வ­திலோ கடத்­து­வ­திலோ வெஸ்டர்ன் ஹொஸ்­பிடல் ஈடு­ப­டவும் இல்லை. ஈடு­படப் போவதும் இல்லை.

பிர­தான சந்­தேக நபர் எனப்­படும் ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அறி­வித்­துள்­ளது.

எனவே ஊட­கங்கள் முன்­வைத்­துள்ள இந்தக் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில், விசா­ர­ணைகள் உண்­மையை விரைவில் வெளிப்­ப­டுத்தும் என நம்­பு­கிறோம்.
சிறு­நீ­ரக அறுவை சிகிச்சைத் துறையில் வெஸ்டேர்ன் ஹொஸ்­பிடல் முன்­னணி வகிக்­கி­றது. இலங்­கையின் முத­லா­வது சிறு­நீ­ரக மாற்றுச் சிகிச்­சையை நாங்­களே முதன் முதலில் மேற்­கொண்டோம். டய­லஸீஸ் செய்­வ­தற்­கான இயந்­தி­ரங்­களை எமது சொந்த நிதியால் நாட்­டுக்குத் தரு­வித்து 1984 இலே முத­லா­வது டய­லிஸிஸ் சிகிச்­சை­யையும் நாங்­களே மேற்­கொண்டோம்.

எமது மூன்று தசாப்­தங்­க­ளுக்கு மேற்­பட்­ட­காலப் பணியில் எமது சிறப்­பான சேவை மற்றும் தர­மான பணி­யாட்கள் மூல­மாக நாம் தேசிய ரீதி­யிலும் சர்­வ­தேச ரீதியிலும் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறோம்.

எமது சேவைக் காலப்பிரிவில் 1200 க்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்றுச் சிகிச்சைகளைச் செய்திருப்பதோடு 10,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளின் உயிரைப் பாதுகாக்கும் வகையில் டயலிஸிஸ் சிகிச்சை செய்திருக்கிறோம்.
எமது மருத்துவமனைக்குக் கிடைத்த இந்த நற்பெயர் பலருக்குப் பொறாமையை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

கொடை­யா­ளி­க­ளிடம் இருந்து உறுப்­புக்­களைப் பெறு­வ­தற்கு கடு­மை­யான நடை­முறை உள்­ளது. விருப்­பத்­துக்கு மாறாக யாரு­டைய உறுப்பும் பெறப்­ப­டு­வ­தில்லை.
பேரா­சி­ரியர் ரவீந்­திர பெர்­ணான்டோ, மருத்­துவ நிபுணர் ஒருவர், ஒரு சட்­டத்­த­ரணி அடங்­கிய குழு­வொன்றின் மூலம் தானம் கொடுப்­ப­வர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டப்­படும்.
அதன் பின்னர் சுகா­தார அமைச்சின் மூன்று கட்­டங்­க­ளி­லான அங்­கீ­காரம் பெறப்­படல் வேண்டும். எந்­த­வொரு நன்­கொ­டை­யா­ளரும் மாற்று சத்­திர சிகிச்­சைக்கு முன்னர் தமது சம்­ம­தத்தை மீளப் பெற முடியும். அறுவை சிகிச்­சைக்கு நன்­கொ­டை­யா­ளர்கள் தங்கள் உறுப்­பு­களை தானம் செய்ய ஒப்­புக்­கொள்­வ­தற்கு முன் கடு­மை­யான சட்டத் தேவை­க­ளுக்கு அவர்கள் இணங்க வேண்டும். நாட்டில் சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்­சையை மேற்­கொள்ளும் ஏனைய ஐந்து தனியார் மருத்­து­வ­ம­னை­களும் நாம் பின்­பற்றும் அதே நடை­மு­றை­க­ளையே பின்பற்றுகின்றன. ‘ என வைத்தியசாலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.