(ஏ.எஸ்.எம். ஜாவித்)
2022 தேசிய மீலாத் தினத்தை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை ஒன்று நேற்று கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இவ்வருட தேசிய மீலாத் விழா கடந்த ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி களுத்துறை மாவட்டத்தில் உள்ள பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்து.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் இதற்கான ஞாபகார்த்த முத்திரை தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக வெளிவிகார அமைச்சர் அலி சப்ரி கலந்துகொண்டார். அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் மற்றும் புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் உலமாக்கள், கல்விமான்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
தேசிய மீலாத் விழாவின்போது அரசாங்கம் வெளியிடப்படும் ஞாபகார்த்த முத்திரையில் இம்முறை ஜாமிஆ நளீமியா கலாபீட பள்ளிவாசலின் முகப்புத் தோற்றம் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கலாபீட பள்ளிவாசலின் முகப்புத் தோற்றம் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli