இனப்பிரச்சினைக்கு உடன் தீர்வு காண 13ஐ முழுமையாக அமுல்படுத்துங்கள்

சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதியிடம் ஹக்கீம் வலியுறுத்து

0 306

(எஸ்.என்.எம்.சுஹைல்)
மாகாண சபை முறைமை கடந்த காலங்­களில் அமுல்படுத்­தப்­பட்­டி­ருந்­தாலும் அவை முழு­மை­யாக நடை­மு­றைக்கு வர­வில்லை. எனவே, 75 ஆவது சுதந்­திர தினத்­திற்கு முன்னர் இனப்­பி­ரச்­சி­னைக்கு உட­னடி தீர்வை காண வேண்­டு­மாயின் 13 ஆம் திருத்­தத்தை முழு அதி­கா­ரங்­க­ளுடன் முழு­மை­யாக அமுல்­ப­டுத்­துங்கள் என முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் ஜனா­தி­ப­தி­யிடம் வலி­யு­றுத்­தினார்.

இனப்­பிரச்சினை தீர்வு விட­ய­மாக நேற்று முன்­தினம் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்ற சர்­வ­கட்சி மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே ரவூப் ஹக்கீம் மேற்­கண்­டாறு தெரி­வித்தார்.

13 உட­னடி தீர்வு
75 ஆவது சுதந்­திர தினத்­திற்கு முன்னர் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு எமது ஒத்­து­ழைப்பை வழங்­குவோம். புதிய திட்­ட­மொன்றை முன்­வைத்து நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு காலம் போதாமல் இருக்­கி­றது. ஏற்­க­னவே, 13 ஆம் திருத்தம் அமுலில் இருந்­தாலும் முழு அதி­கா­ரங்­க­ளுடன் அவை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. எனவே, தற்­போது 13 ஆம் திருத்­தத்தை முழு அதி­கா­ரங்­க­ளுடன் நடை­மு­றைப்­ப­டுத்­துவதே இனப்­பி­ரச்­சி­னைக்கு உட­னடி தீர்­வாக அமையும். அத்­தோடு, அவற்றை அவ­ச­ர­மாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கும் சாத்­தி­ய­மா­ன­தான இருக்கும்.

இதே­வேளை, 13 ஆம் திருத்­தத்­திற்கு அப்பால் சென்று இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண­வேண்­டி­யி­ருக்­கி­றது. இதற்­கான யோச­னைகளை பல தரப்­பி­னரும் முன்­வைக்­கின்­றனர். அதேபோல், எம்­மிடம் பல்­வேறு முன்­மொ­ழி­வுகள் இருக்­கின்­றன. அதற்­கான விசேட ஆணைக்­கு­ழு­வொன்றை நிய­மித்து ஆராய்ந்து தீர்­வுக்கு வர முடியும். ஆனால், அதற்கு நீண்ட காலம் செல்லும். எனவே, உட­ன­டி­யாக தீர்வைப் பெற்­றுக்­கொள்ள முதலில் 13 முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வதே போது­மா­ன­தாக அமையும்.

காணா­ம­லாக்­கப்­பட்டோர்
30 வரு­ட­கால இன வன்­மு­றை­யின்­போது வடக்கு கிழக்கில் முஸ்­லிம்கள் பலரும் காணா­ம­லாக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­க­ளுக்கு நீதி கிடைக்க வேண்டும். பல்­வேறு இன அழிப்­பு­களும் திட்­ட­மிட்ட தாக்­கு­தல்­களும் இடம்­பெற்­றுள்­ளன, அவற்­றுக்கு நீதி பெற்­றுக்­கொ­டுக்­கப்­ப­டு­வ­தோடு நஷ்­ட­ஈடும் தரப்­படல் வேண்டும்.

காணிப் பிரச்­சினை
இனப்­பி­ரச்­சி­னை­யுடன் தொடர்­பு­டை­யா­தாக வடக்கு கிழக்­கி­லுள்ள காணி அப­க­ரிப்பு விவ­காரம் இருக்­கின்­றது. இரா­ணுவம், படை­யி­னரால் மக்­களின் காணிகள் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன, இதனால் மக்கள் பல்­வேறு இன்­னல்­க­ளுக்கு முகம்­கொ­டுக்­கின்­றனர்.

குறிப்­பாக வடக்கு கிழக்கில், வன பரி­பா­லன திணைக்­களம், தொல்­பொருள் திணைக்­களம், வன­வி­லங்கு திணைக்­களம் என்­ப­வற்றின் கெடு­பி­டுகள் முஸ்லிம் பிர­தே­சங்­களில் அதி­க­மாக இருக்­கின்­றது. இதன் மூலம் காணி உறுதி மற்றும் காணி அனு­ம­திப்­பத்­திரம் உள்ள பலரும் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­கொள்­ள­வேண்­டிய துர்­பாக்­கிய நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இதனால், அவர்­களின் வாழ்­வா­தாரம் பாதிக்­கப்­பட்டு தொடர்ச்­சி­யாக நீண்­ட­காலம் நியாயம் கேட்டு அலைந்து திரி­வ­தனால் அவர்கள் மன உளைச்­ச­லுக்கு ஆளா­கி­யி­ருக்­கின்­றனர். உணவு உற்­பத்­திக்­காக காணி­களை விடு­விக்கும் திட்­டத்தை அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. இந்­நி­லையில், வடக்கு கிழக்கில் கெடு­பி­டு­க­ளுக்கு உள்­ளான காணி­க­ளையும் உட­ன­டி­யாக விடு­விக்க வேண்டும் என ரவூப் ஹக்கீம் ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை விடுத்தார்.

சம்­பிக்­க­வுக்கு ரணில் பதில்
இதன்­போது குறுக்­கிட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சம்­பிக்க ரண­வக்க, 32 வீத வன பாது­காப்பு வலி­யு­றுத்­தப்­ப­ட­வேண்டும். அதனை உதா­­சீ­னப்­ப­டுத்தி காணிப்­ப­கிர்வை மேற்­கொள்ள முடி­யாது. சட்டவிரே­ாத­மாக வன­வி­லங்­குகள் திணைக்­களம் மற்றும் வனப் பாது­காப்பு திணைக்­க­ளத்­தினால் கைப்­பற்­றப்­பட்ட காணி­களை விடு­விக்க முடி­யாது என்றார்.

அதற்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க, வடக்கு கிழக்­கிற்கு வெளி­யேயும் வனப்­பி­ர­தே­சங்கள் அழிக்கப்பட்டிருக்­கின்­றன. ஆற்­றுப்­ப­டுக்கை உரு­வாக்கும் இடத்­திலும் காணிகள் அழிக்­கப்­பட்­டுள்­ளன. அவற்றை சுவீ­க­ரித்து காடுகள் வளர்க்­கப்­பட வேண்டும். 32 வீத வனப்­பா­து­காப்பு அவ­சி­ய­மா­னதே, இருப்­பினும் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட காணி­களை பயிர்ச் செய்­கைக்­காக மக்­க­ளுக்கு வழங்­கு­வதில் சிக்கல் இல்லை. அவற்றை பெற்­றுக்­கொ­டுக்க உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றார்.
அத்­தோடு, இரா­ணு­வத்­துடன் சம்­பந்­தப்­பட்ட காணிகள் தொடர்­பிலும் நான் கவனம் செலுத்­துவேன். மேலும், வன­வி­லங்­குகள் திணைக்­களம், வனப்­பா­து­காப்பு திணைக்­களம் மற்றும் தொல்­பொருள் திணைக்­க­ளங்­க­ளினால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும் காணி­க­ளையும் படிப்­ப­டி­யாக விடு­விக்க நவ­டிக்கை எடுக்­கப்­படும் என ஜனா­தி­பதி உறு­தி­ய­ளித்தார்.

ரிஷாட் பதி­யுதீன் எம்.பி.
இங்கு கருத்து வெளியிட்ட அ.இ.ம.கா. தலைவர் ரிஷாட் பதியுதீன், நீங்கள் பிர­த­ம­ராக இருந்­த­போது நல்­லாட்சி காலத்தில் இது­தொ­டர்­பான விட­யங்கள் ஆரா­யப்­பட்­டது. அப்­போது நாம் பல்­வேறு யோச­னை­களை முன்­வைத்தோம். மீண்டும் இவ்­வி­டயம் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்க முன்­வந்­தி­ருக்­கின்­ற­மைக்கு நன்­றி­களை தெரி­வித்­துக்­கொள்­கிறேன். தற்­போ­தைய சூழ்­நி­லையில் முடி­யு­மா­ன­வரை காணி தொடர்­பான பிணக்­கு­க­ளுக்கு தீர்வை பெற்­றுத்­தர வேண்டும். அதேபோல், வவு­னியா மாவட்­டத்தில் விவ­சாய காணிகள் தொடர்­பாக அதி­க­மான பிரச்­சி­களை வரு­டக்­க­ணக்கில் தீர்த்து வைக்­கப்­ப­டாமல் இருக்­கின்­றது. வனப்­பா­து­காப்பு திணைக்­க­ளத்­துடன் தொடர்­புடன் இந்த விட­யங்கள் தொடர்பில் மக்­க­ளுக்கு நீதியை பெற்றுத் தர வேண்டும். நீங்கள் நிய­மித்­தி­ருக்கும் உணவுப் பாது­காப்பு தொடர்­பான செய­லணி ஊடாக இந்த விட­யத்தை தீர்த்து வைக்க வேண்டும்.

ஏற்­க­னவே குறிப்­பிட்­ட­வாறு, பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் கீழ் அநி­யா­ய­மாக கைது செய்­யப்­பட்­டி­ருக்கும் நபர்­களை கூடிய சீக்­கி­ரத்தில் விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும்.

அனைத்து தரப்­பி­னரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய வகையில் அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் ஒன்றை முன்­வைப்­பது பொருத்­த­மா­ன­தாக அமையும் என்றார்.

அமைச்சர் நஸீர் அகமட்
இக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் நஸீர் அகமட், 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு சில பாதகங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டினார். குறிப்பாக அதில் உள்ளடக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு இணைப்பு, காணி அதிகாரம் போன்ற விடயங்கள் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் அபிப்பிராயத்தைப் பெற்றே தீர்வுக்குச் செல்ல வேண்டியது அவசியம் என அவர் இதன் போது குறிப்பிட்டார்.

அமைச்சர் அலி­ சப்ரி
இங்கு கருத்து வெளி­யிட்ட வெளி­வி­வ­கார அமைச்சர் அலி­சப்ரி, நாம் கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவை அமைத்தோம். பர­ண­வி­தான ஆணைக்­கு­ழு அமைக்­கப்­பட்­டி­ருந்­தது. இன்னும் பல செய­ல­ணிகல் மூலமும் இலங்­கையில் சில அசம்­பா­வி­தங்கள் ஏற்­பட்­டி­ருந்­தமை வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. இருந்­தாலும் எமக்கு வெளி­நாட்டு தலை­யீ­டுகள் இருக்கக் கூடாது என்­பதில் கவ­ன­மாக இருந்தோம். உள்­நாட்டு பொறி­மு­றைக்­க­மைய இந்த விட­யத்­திற்கு தீர்வை பெற்­றுக்­கொள்­ளவே நாம் தீர்­மா­னித்தோம். இதற்­க­மைய உள்­ளக பொறி­மு­றை­யொன்றை அமைப்பதாக சர்வதேசத்திடம் வாக்குறுதியளித்தோம். அதனை நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தவில்லை. இதனை நடைமுறைப்படுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நீதிபதி நவாஸ் தலைமையிலான ஆணைக்குழுவை நியமித்தார்.

முன்னர் அமைக்கப்பட்ட ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை ஆராய்ந்து பார்த்து அடுத்த கட்ட நட­வ­டிக்கை தொடர்பில் முன்­னெ­டுத்து செல்லும் அதி­காரம் நவாஸ் ஆணைக்­கு­ழு­வுக்கு வழங்­கப்­பட்­டது. இது தொடர்பில் எமது பாது­காப்பு தரப்­பிடம் கேட்டால், ஏன் இந்த பொறி­மு­றையை நடை­மு­றைப்­ப­டுத்­த­வில்லை என்­ப­தற்­கான கார­ணத்தை தெளி­வு­ப­டுத்­துவர்.

தென்­னா­பி­ரிக்­காவின் பங்­க­ளிப்­போடு உள்­ளக பொறி­மு­றைக்­க­மைய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான பூர்­வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.