கண்டி முஸ்லிம்­களின் வர­லாற்­றில் தடம்­ப­தித்த ஊட­க­வி­ய­லாளர் குவால்­டீன்

0 350

எம்.எம்.எம். ரம்ஸீன்
கெலி­ஓயா

“வரலாற்றை முதலில் பதிவு செய்பவர்கள் ஊடகவியலாளர்கள்” என்கிறார் பிர­பல அமெ­ரிக்க ஊட­க­வி­ய­லாளர் பிலிப் எல். க்ரஹம். சம­கால நிகழ்­வு­களை செய்­தி­க­ளாக்கி சமூ­கத்­திற்கு உண்­மை­களை எடுத்துச் செல்­ப­வர்கள் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளாவர். இவர்கள் வாழும் போதும் மட்­டு­மன்றி மறைந்த பின்­னரும் மக்கள் மனதில் வாழ்­ப­வர்­க­ளாவர் என்­பதில் ஐய­மில்லை.

இலங்கை வாழ் முஸ்லிம் சமூ­கத்தில் வட கிழக்­குக்கு வெளியில் முஸ்லிம் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் எண்­ணிக்கை மிகக் குறை­வாகும். இதில் பல ஊட­க­வி­ய­லா­ளர்கள் ஊட­கப்­ப­ணி­களில் ஈடு­ப­டு­வ­தில்லை. இதனால் முஸ்லிம் பிர­தேச நிகழ்­வுகள் அறிக்­கை­யி­டப்­ப­டு­வ­தில்லை. உண்­மைகள் சரி­யாக வெளிக்­கெ­ண­ரப்­ப­டு­வ­தில்லை என்ற குறைகள் நீண்­ட ­கா­ல­மாக இருந்து வந்­துள்­ளன.

இப்­பின்­ன­ணியில் கண்­டியில் 50 வரு­டங்­க­ளுக்கு மேல் தொடர்ச்­சி­யாக ஊடகப் பணி­களில் ஈடு­பட்டு வந்­த சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் எஸ்.ஏ.சீ.எம். குவால்­தீனின் திடீர் மறைவு ஊட­கத்­து­றை­யினர் மத்­தியில் கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. கண்­டியில் முஸ்லிம் ஊட­கத்­து­றை­யினர் மத்­தியில் எஸ்.ஏ.சீ.எம். குவால்­தீனின் இழப்பு நிரப்ப முடி­யாத இடை­வெ­ளி­யாகும்.

கண்­டியில் கெங்­கல்ல பகு­தியில் பிர­பல வர்த்­த­க­ராகத் திகழ்ந்த மர்ஹூம் சேகு அப்தல் காதர் – காதர் பீபி தம்­ப­தி­யின் புதல்­வ­ராக 1949 இல் பிறந்த எஸ்.ஏ.சீ.எம். குவால்தீன் யாழ்ப்­பா­ணத்தில் தனது கல்­வியைப் பெற்றுக் கொண்டார்.

ஆக்க இலக்­கி­யங்­களில் ஈடு­பாடு கொண்ட இவர், சிறு­வ­யது முதல் சிறு­க­தைகள், கட்­டு­ரை­களை எழுத ஆரம்­பித்தார். இவரின் ஆக்­கங்கள் வீர­கே­சரி நாளிதழ், வீர­கே­சரி வார வெளி­யீடு, மித்­திரன் என்­ப­வற்றில் பிர­சு­ர­மா­கி­யுள்­ளன. இதன் தொடர்ச்­சி­யாக, எஸ்.ஏ.சீ.எம். குவால்தீன் 1966 ஆம் ஆண்டு தின­பதி பத்­தி­ரிகை மூலம் தனது ஊட­கப்­ப­ணியை ஆரம்­பித்தார். 1970 களில் டைம்ஸ் நிறு­வ­னத்­தினால் வெளி­யி­டப்­பட்ட “ஈழ­மணி” பத்­தி­ரிகை மற்றும் கண்டி மாந­கரில் இருந்து வெளி­யா­கிய “செய்தி” என்ற நாளிதழ் என்­ப­வற்றின் செய்­தி­யா­ள­ரா­கவும் பணி­யாற்­றி­யுள்ள எஸ்.ஏ.சீ.எம். குவால்தீன் வீர­கே­ச­ரியின் கண்டி – செங்­க­ட­கல செய்­தி­யா­ள­ராக தொடர்ச்­சி­யாக தனது பணியைத் தொடர்ந்தார்.

முன்னாள் பிர­தமர் டி. எம். ஜய­ரட்­னவின் ஊடக ஆலோ­ச­க­ரா­கவும் செயற்­பட்டு வந்த எஸ்.ஏ.சீ.எம். குவால்தீன் கண்­டியில் இருந்து சிறிது காலம் பி.பி.சி க்கு விசேட செய்­தி­க­ளையும் வழங்கி வந்­துள்ளார். இவர் தமிழ்­பேசும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுடன் மட்­டு­மன்றி சகோ­தர சிங்­கள ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­டனும் நெருக்­க­மான உறவைப் பேணி வந்தார்.
தமிழ்­பேசும் மக்­களின் சமூக விட­யங்­களில் அதீத ஆர்­வ­மிக்­க­வராகத் திகழ்ந்த எஸ்.ஏ.சீ.எம். குவால்தீன் பிர­தேச செய்­தி­களை அறிக்­கை­யி­டு­வதில் துணிச்­சல்­மிக்­க­வ­ராவார். ஊட­கத்­து­றைக்குள் புதி­தாக நுழையும் இளம் சந்­த­தி­யி­னரை ஊக்­கு­விக்கும் நற்­பண்பும் அமை­தியும் அடக்­கமும் அவ­ரிடம் குடி­கொண்­டி­ருந்­தது.

இவர் சல­னமும் ஆர்ப்­பாட்­ட­மு­மின்றி அமை­தி­யாக ஊட­கப்­பணி செய்த ஊட­க­வி­ய­லாளர் ஆவார். இவரின் சிறு­க­தைகள், கட்­டு­ரைகள் மலே­சியா, சிங்­கப்பூர் முத­லான நாடு­களில் இருந்து வெளி­வரும் சஞ்­சி­கை­களில் மீள் பிர­சு­ர­மா­கி­யுள்­ளன. இவர் விவா­கப் ­ப­தி­வா­ள­ரா­கவும் அகில இலங்கை சமா­தான நீத­வா­னா­கவும் இருந்து ஊட­கத்­து­றைக்கு அப்பால் தனது சமூகப் பணி­களை ஆற்­றி­யுள்ளார். பிர­தேச அர­சி­யல்­வா­திகள் மற்றும் சமூக ஆர்­வ­லர்­களின் உத­வி­க­ளையும் சேவை­க­ளையும் தான் வாழ்ந்து வந்த தென்­ன­கும்­புர பகு­திக்கு பெற்றுக் கொடுத்­துள்ளார்.

இவரின் ஊடகப் பணியை பாராட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், மலை­யக கலை கலா­சார சங்கம், மலை­யக இலக்­கிய பேரவை என்­பன விருது வழங்கி கௌர­வித்­துள்­ளன. மேலும், கலா­சார திணைக்­க­ளத்­தினால் கலா­பூ­சணம் விருது வழங்கி கௌர­விக்­கப்­பட்­டுள்ளார். இவ­ருக்கு இலங்கை பத்­தி­ரிகை ஆசி­ரியர் சங்­கமும் இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாபனமும் இணைந்து வாழ் நாள் சாத­னை­யாளர் விருது வழங்­கி­யுள்­ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ­ரது புத­ல்வர் எம்.கே.எம்.ரசூல் தனது தந்­தையில் வழியில் இன்றும் ஊட­கத்­து­றையில் பய­ணிக்­கிறார்.

கண்டியில் ஐ.ஏ. ரஸ்ஸாக், ஸ்டார் ராசிக், க.ப.சிவம், எஸ்.ஏ.சீ.எம். குவால்தீன் முதலானோரின் இழப்புக்கள் அண்மைக்காலத்தில் ஊடகத்துறையில் நிரப்ப முடியாத இடைவெளியை ஏற்படுத்தியுள்ளன.

எல்லாம் வல்ல அல்லாஹ் இவரின் பிழைகளைப் பொறுத்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும் சுவனத்தில் நுழைய வைப்பானாக ஆமீன்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.