ஜும்ஆப் பள்ளிகளில் மாத்திரமே ஜும்ஆ தொழுகை நடத்த முடியும்

உடன்அமுல்படுத்த திணைக்களம், வக்பு சபை இணக்கம்

0 364

(ஏ.ஆர்.பரீல்)
முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம், வக்பு சபையின் இணக்­கத்­துடன் உட­ன­டி­யாக நடை­மு­றைக்கு வரும் வகையில் கொவிட் 19 தொற்று நோய்க்கு முன்­னைய காலப்­ப­கு­தியில் ஜும்ஆ தொழுகை இடம்­பெற்ற பள்­ளி­வா­சல்­களில் மாத்­திரம் ஜும் ஆ தொழு­கையை நடாத்­து­வ­தற்கு தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்­ளது.

கொவிட் 19 தொற்று கார­ண­மாக பொது­மக்கள் ஒன்று கூடு­வது தொடர்­பாக சுகா­தார அமைச்சின் அதி­கா­ரி­களால் கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­டி­ருந்­தன. இதன் கார­ண­மாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் அனைத்து பள்­ளி­வா­சல்கள், தக்­கி­யாக்கள்,ஷாவி­யாக்­களில் ஜும்ஆ தொழுகை நடாத்­து­வ­தற்கு அனு­மதி வழங்­கி­யி­ருந்­தது. இது தொடர்பில் திணைக்­களம் MRCA/A/06/ Covid/ 19 இலக்க, 2021.06.17 ஆம் திக­தி­யிட்ட சுற்று நிருபம் ஒன்­றி­னையும் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

பள்­ளி­வா­சல்­களில் ஜும்ஆ தொழுகை நடாத்­துதல் தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்சார் அனைத்துப் பள்­ளி­வா­சல்கள், தக்­கி­யாக்கள் மற்றும் ஷாவி­யாக்­களின் நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்­க­ளுக்கு கடிதம் அனுப்பி வைத்­துள்ளார். கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;
திணைக்­க­ளமும்,வக்பு சபையும் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை, தரீக்­காக்­களின் உச்­ச­பீடம், தேசிய சூரா கவுன்ஸில் மற்றும் ஷரீஆ கவுன்ஸில் என்­ப­ன­வற்றின் இணக்­கத்­துடன் கொவிட் 19 தொற்று நோய்க்கு முன்­னைய காலப்­ப­கு­தியில் ஜும்ஆ தொழுகை இடம்­பெற்ற ஜும்ஆ பள்ளி வாசல்­களில் மாத்­திரம் ஜும்ஆ தொழு­கையை நடாத்த முடிவு செய்­துள்­ளது.

தற்­போது கொவிட் கட்­டுப்­பா­டுகள் முழு­மை­யாக தளர்த்­தப்­பட்­டுள்­ளதால் கொவிட்­டுக்கு முன்­னைய நடை­மு­றையின் பிர­காரம் ஜும்ஆ பள்­ளி­வா­சல்­களில் மாத்­திரம் ஜும்ஆ தொழு­கையை நடாத்த வேண்டும் என பல சமய அமைப்­புகள், மற்றும் சில பள்­ளி­வா­சல்­களின் நம்­பிக்­கை­யா­ளர்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

அதனால் கொவிட் கட்­டுப்­பா­டுகள் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு முன்பு ஜும்ஆ தொழுகை இடம்­பெற்ற பள்­ளி­வா­சல்­களில் மாத்­திரம் ஜும்ஆ தொழு­கையை நடத்­து­மாறு அனைத்து பள்­ளி­வா­சல்கள், தக்­கி­யாக்கள் ஷாவி­யாக்­களின் நம்­பிக்­கை­யா­ளர்­களும் நம்­பிக்­கை பொறுப்­பா­ளர்­களும் கேட்டுக் கொள்­ளப்­ப­டு­கி­றார்கள்.

எந்­த­வொரு பள்­ளி­வாசல் நிர்­வா­கமும் தமது பள்­ளி­வா­சல்கள், தக்­கி­யாக்கள், ஷாவி­யாக்­களை ஜும்ஆ பள்­ளி­வா­ச­லாக தர­மு­யர்த்த விரும்­பினால் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள விதி­மு­றை­க­ளுக்கு ஏற்ப அவர்கள் தேவைப்­பா­டு­களை பூர்த்தி செய்ய வேண்டும் எவ்­வா­றா­யினும் பள்­ளி­வா­சல்கள் தக்­கி­யாக்கள், ஷாவி­யாக்­களை ஜும்ஆ பள்­ளி­வா­ச­லாக தர­மு­யர்த்­து­வது கவ­ன­மாக மதிப்­பி­டப்­பட்டு அவர்­களின் கோரிக்­கைக்கு நியா­ய­மான கார­ணங்கள் இருந்தால் மாத்­திரம் முறை­யான ஆய்­வுக்குப் பின்­னரே முடி­வெ­டுக்­கப்­படும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
ஜும்ஆ பள்­ளி­வா­ச­லாக பதிவு செய்­வ­தற்­கான விதி­மு­றைகள் என்ன என்­ப­தையும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் வெளி­யிட்­டுள்­ளது.

  • ஜும்ஆ பள்­ளி­வா­ச­லாக பதிவு செய்ய விண்­ணப்­பிக்கும் பள்­ளி­வா­ச­லுக்கும் அண்­மை­யி­லுள்ள ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்கும் இடையில் குறைந்­தது ஒரு கிலோ மீற்றர் தூரம் இருத்தல் அவ­சியம்.
  • குறித்த பள்­ளி­வா­சலின் ஜமாஅத் அங்­கத்­த­வர்கள் குறைந்­தது 100 குடும்­பங்­க­ளாக இருத்தல் அவ­சியம் (விசேட கார­ணங்­களின் அடிப்­ப­டையில் சில கிரா­மங்­க­ளுக்கு விதி­ வி­லக்­க­ளிக்­கப்­ப­டலாம்).
  • ஜும்ஆ ஆரம்­பிக்­கப்­படும் போது 40 பேருக்கு குறை­யாமல் பிர­சன்­ன­மா­யி­ருத்தல் வேண்டும்.
  • அண்­மித்த ஜும்ஆ மஸ்­ஜிதின் சிபா­ரிசுக் கடிதம் சமர்­ப்பிக்­கப்­படல் வேண்டும். (நியா­ய­மான கார­ணங்கள் இன்றி குறித்த கடிதம் மறுக்­கப்­ப­டும்­போது திணைக்­க­ளத்­துக்கு அனு­ம­தி­ய­ளிக்கும் அதி­காரமுண்டு).
  • ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்­கான பெளதீக வளங்கள் பூரணப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். (தொழுகைக்கான இடவசதி, போதுமான அளவு வுழு செய்தவற்கான வசதி, கழிவறை வசதி, மிம்பர் மேடை)
  • பள்ளிவாசலின் பரிபாலனத்திற்காக வருமானம் போதுமானதாக இருத்தல் வேண்டும்.
  • நகர்ப்புறங்களில் வாகன தரிப்பிட வசதி காணப்படல் வேண்டும்.
  • குறித்த பள்ளிவாசலில் ஜும்ஆ நடத்துவதற்கு தகுதியான இமாம் கடமையில் இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.