மட்டக்குளியை கதிகலங்க செய்த பர்ஹானின் படுகொலை : சந்தேக நபர்கள் யார்? பின்னணி என்ன?

0 326

எம்.எப்.எம்.பஸீர்

மட்­டக்­குளி மெத மாவத்தை பகு­தியில் 38 வய­தான மூன்று பிள்­ளை­களின் தந்தை மொஹம்மட் பதுர்தீன் மொஹம்மட் பர்ஹான் பெரிய கத்­தி­க­ளு­டன் காரில் வந்­தோரால் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம், பிர­தே­ச­மெங்கும் அச்ச நிலையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந் நிலையில் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட சுற்றிவளைப்­பொன்றில் கைது செய்­யப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்ட பர்ஹான், மட்­டக்­கு­ளியில் பட்­டப்­ப­கலில் வெட்டிப் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்பில் சிறப்பு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தரப்பு கூறு­கின்­றது.

கொழும்பு வடக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பி.எம்.ஆர். அம்­பே­பிட்­டி­யவின் நேரடி கட்­டுப்­பாடில் மட்­டக்­குளி மற்றும் கொழும்பு வடக்கு குற்ற விசா­ரணைப் பிரிவின் இரு பொலிஸ் குழுக்­களும், சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் சிறப்புக் குழு­வொன்றும் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது. இந்த விஷேட விசா­ர­ணை­க­ளுக்கு பொலிஸ் உளவுத் துறையின் ஒத்­து­ழைப்பும் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் விசா­ர­ணைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நிஹால் தல்­துவ தெரி­வித்தார்.

மட்­டக்­குளி, சாவியா ஒழுங்­கையைச் சேர்ந்த 38 வய­தான மொஹம்மட் பதுர்தீன் மொஹம்மட் பர்ஹான் என்­பவர், மட்­டக்­குளி மெத மாவத்தை வீதியில் வைத்து கடந்த 28 ஆம் திகதி, முற்­பகல் 11.10 மணி­ய­ளவில் வெட்டிப் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்தார்.
கோட்டை நீதிவான் நீதி­மன்றில், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வினர் தொடுத்­தி­ருந்த கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு சட்­டத்தின் கீழான வழக்­கொன்றில் ஆஜ­ரா­கி­விட்டு, தனது காரில் வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்த போது பர்ஹான் இந்த சம்­ப­வத்­துக்கு முகம் கொடுத்­திந்தார்.

பர்ஹான், மட்­டக்­குளி மெத மாவத்­தையில் இருந்து, சாவியா ஒழுங்­கைக்குள் தனது காரை திருப்ப முற்­பட்ட வேளை, அவரை பின் தொடர்ந்து வந்த கார் மூலம் சிறு விபத்­தொன்றை ஏற்­ப­டுத்தி பர்­ஹானை காரி­லி­ருந்து கீழே இறங்கச் செய்த பின்னர், கூரிய ஆயு­தங்­களால் அவரை சர­மா­ரி­யாக வெட்­டி­யுள்­ளமை இது­வ­ரை­யி­லான விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. காரி­லி­ருந்து இறங்­கிய ஆயு­த­தா­ரிகள், பர்­ஹானை பெரிய கத்­திகள் கொண்டு சர­மா­ரி­யாக வெட்­டி­யுள்­ளனர். இதனால் பர்ஹான், காரை கைவிட்டு, மெத மாவத்தை வழியே தப்­பி­யோ­டி­யுள்ளார். வெட்டுக் காயங்­க­ளுடன் ஓடி­யுள்ள அவர் ஒரு கட்­டத்தில் வீதி ஓர­மாக விழுந்­துள்ளார். அதன் பின்­னரும் துரத்தி வந்­துள்ள ஆயு­த­தா­ரிகள் அவரை வெட்­டி­விட்டு தப்பிச் சென்­றுள்­ளனர். கழுத்து மற்றும் இரு கைகள் கடு­மை­யாக வெட்­டப்பட்­டி­ருந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் பர்ஹான் அனு­ம­திக்­கப்­படும் போதும் உயி­ரி­ழந்­தி­ருந்தார்.

பர்­ஹானை பின் தொடர்ந்து வந்த காரின் விப­ரங்­களை சி.சி.ரி.வி. உள்­ளிட்ட சான்­றுகள் பிர­காரம் சேக­ரித்­துள்ள பொலிஸார் உளவுத் துறையின் உத­வி­யுடன் சந்­தேக நபர்­களை தேடி வரு­கின்­றனர்.

கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் பல்­வேறு சுற்றி வளைப்­புக்கள் நாடெங்கும் பொலி­ஸாரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. அவ்­வாறு ஜா எல பொலிஸார் முன்­னெ­டுத்த சுற்றி வளைப்­பொன்றில் பர்­ஹானும் மேலும் நால்­வரும் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர். இரு டெட்­ட­னேட்­டர்கள், 2 கிலோ அமோ­னியா நைற்றேட், ஜெலிக் நைட் 2 கூறுகள், இரா­ணுவ சீரு­டை­யினை ஒத்த இரு இரா­ணுவ சீருடை தொகு­திகள் அவர்­க­ளி­ட­மி­ருந்து கைப்­பற்­றப்­பட்­ட­தாக அப்­போது பொலிஸார் கூறினர்.

குறித்த விசா­ர­ணை­களின் கோவை சட்ட மா அதி­ப­ருக்கு அனுப்­பப்பட்ட பின்னர், சான்­றுகள் இல்­லா­மையால் கைது செய்­யப்­பட்­டோரில் மூவரை விடு­தலை செய்ய சட்ட மா அதி­பர்­ ஆ­லோ­சனை வழங்­கி­யி­ருந்தார். அவ்­வாறு விடு­தலை செய்­யப்­பட்­ட­வர்­களில் பர்­ஹானும் அடங்­கின்றார்.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு, கோட்டை நீதி­மன்றில் தாக்கல் செய்­துள்ள கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு வழக்­கா­னது, பர்ஹான் உண்­டியல் மற்றும் ஹவாலா முறைகள் ஊடாக பணப் பரி­மாற்று நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­த­தாக சந்­தே­கத்தில் தொடுக்­கப்­பட்ட வழக்கு என பொலிஸ் தரப்பு கூறுகின்றது.

இந் நிலையில் பர்ஹானின் கொலைக்கான காரணம், அவரை கொலை செய்தவர்கள் தொடர்பில் எந்த தகவலும் வெளிப்படுத்தப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

எவ்வாறாயினும் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள அறிவியல் தடயங்களை வைத்து குற்றவாளிகளை நெருங்கி வருவதாக பொலிஸ் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.