கொவிட் தொற்று காலத்தில் வெளியிட்ட ஜும்ஆத் தொழுகை தொடர்பான சுற்று நிருபத்தை இரத்து செய்க

திணைக்களத்திடம் வக்பு சபை வேண்டுகோள்

0 265

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொவிட் 19 தொற்று காலத்தில் வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழு­கையை ஜும்ஆ பள்­ளி­வா­சல்­களில் மாத்­தி­ர­மன்றி ஏனைய பள்­ளி­வா­சல்கள் மற்றும் தக்­கி­யாக்­க­ளிலும் தொழ­மு­டியும் என்று முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் வெளி­யிட்­டுள்ள சுற்று நிரு­பத்தை இரத்துச் செய்து ஜும்ஆ தொழுகையை ஜும்ஆ பள்­ளி­வா­சல்­களில் மாத்­தி­ரமே தொழ­மு­டியும் என்­பதை பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அறி­விக்­கும்­படி வக்பு சபை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தைக் கோரி­யுள்­ளது.

ஜும்ஆ தொழுகை ஜும்ஆ பள்­ளி­வா­சல்­களில் மாத்­திரமே தொழ­மு­டியும். ஜும்ஆ பள்­ளி­வாசல் அல்­லாத பள்­ளி­வா­சலில் ஜும்ஆ தொழுகை நடாத்­து­வ­தென்றால் அதற்­கான கார­ணங்­களைக் கூறி வக்­பு­ச­பை­யிடம் அனு­மதி பெற்­றுக்­கொள்­ள­வேண்டும் என்ற தீர்­மானம் ஏற்­க­னவே திணைக்­க­ளத்­துக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

கொவிட் 19 தொற்றுக் காலத்தில் மக்கள் ஜும்ஆ தொழு­கைக்­காக பெரு­ம­ளவில் கூடு­வதைத் தவிர்க்கும் வகையில் ஏனைய பள்­ளி­வா­சல்கள், தக்­கி­யாக்­களில் ஜும்ஆ தொழுகை நடாத்­து­வ­தற்கு வக்­பு­ சபை மற்றும் திணைக்­க­ளத்­தினால் அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இது தொடர்பில் சுற்று நிரூபம் ஒன்றும் வெளி­யி­டப்­பட்­டது.

ஜும்ஆ தொழுகை தொடர்பில் அண்­மையில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளப் ­பணிப்­பாளர் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா, சூரா­ க­வுன்ஸில், ஷரீஆ கவுன்சில் மற்றும் சூபி தரிக்­காக்­களின் உயர்­பீடம் என்­ப­வற்றின் பிர­தி­நி­தி­களை அழைத்து கலந்­து­ரை­யா­ட­லொன்­றினை நடத்­தி­யி­ருந்தார். அக்­க­லந்­து­ரை­யா­டலின் பின்பு குறிப்­பிட்ட நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­திகள் வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழுகை ஜும்ஆ பள்­ளி­வா­சல்­களில் மாத்­தி­ரமே நடாத்­தப்­ப­ட­வேண்டும் என ஏக­ம­ன­தாக தீர்­மா­னித்­தி­ருந்­தனர்.

இத­னை­ய­டுத்து சில தினங்­க­ளுக்கு முன்பு புத்­த­சா­சன சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்­ச­ருக்கும் அகில இலங்கை ஜம்இய்­யத்துல் உலமா சபை, ஷரீஆ கவுன்ஸில் மற்றும் சூபி தரிக்­காக்­களின் உயர்­பீட உறுப்­பி­னர்­க­ளுக்­கு­மி­டையில் அமைச்சில் கலந்­து­ரை­யா­ட­லொன்று இடம்பெற்­றது. திணைக்­கள பணிப்­பா­ளரும் கலந்­து­ரை­யா­ட­லுக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்தார். இக்­க­லந்­து­ரை­யா­ட­லின்­போது அமைச்சர் குறிப்­பிட்ட சுற்று நிரு­பத்தை இரத்துச் செய்­யு­மாறு திணைக்­கள பணிப்­பா­ளரைப் பணித்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் திணைக்­க­ளத்தின் கீழ் பணி­யாற்றும் மாவட்ட அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­களின் அறிக்­கையும் மாவட்ட ரீதியில் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.
ஜும்ஆ தொழுகை தொடர்பில் வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தொடர்ந்தும் தெரி­விக்­கையில் ‘கொவிட் காலத்தில் வெளி­யிட்ட சுற்று நிரு­பத்தை ரத்துச் செய்து ஜும்ஆ பள்­ளி­வா­சல்­களில் மாத்­திரம் ஜும்ஆ தொழுவதற்கான உத்தரவினை வழங்குமாறும், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கு இதனை அறிவிப்புச் செய்யுமாறும் திணைக்களத்தைக் கோரியுள்ளோம் என்றார். எனினும் இந்தச் செய்தி எழுதப்படும்வரை இதுதொடர்பில் திணைக்களத்திடமிருந்து உத்தியோகப்பூர்வ அறிவிப்பு எதுவும் கிடைக்கவில்லை.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.