காணாமல் போன 4 வாழைச்சேனை மீனவர்கள் 64 நாட்களின் பின் அந்தமானில் கண்டுபிடிப்பு

0 241

(எச்.எம்.எம்.பர்ஸான்)
செப்­டம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆழ்­க­ட­லுக்குச் சென்று காணாமல் போன வாழைச்­சேனை பகு­தியைச் சேர்ந்த நான்கு மீன­வர்­களும் அந்­தமான் தீவில் கண்டுபிடிக்­கப்­பட்­டுள்­ளனர்.

காணாமல் போன மீன­வர்கள் தொடர்­பான தகவல் 64 நாட்­களின் பின்னர் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 4.30 மணி­ய­ளவில் கிடைத்­துள்­ள­தாக மீன­வர்­களின் உற­வி­னர்கள் தெரி­வித்­தனர்.

அந்­தமான் தீவி­லி­ருந்து தமது தொலை­பே­சிக்கு அழைப்­பொன்று வந்­த­தா­கவும் அதில், மீன­வர்கள் பட­குடன் மீட்­கப்­பட்டு தற்­போது கடல் பாது­காப்பு படையின் பாது­காப்பில் இருப்­ப­தா­கவும் தமக்கு தகவல் கிடைத்­த­தாக காணாமல் போன மீனவர் உமர்தீன் அசன் அலி என்­ப­வரின் மகன் முஜாஹித் கூறினார்.

குறித்த தகவல் தொடர்பில், மீனவர் சங்கம் மற்றும் துறை­முக அதி­கா­ரி­களின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­துள்­ள­தா­கவும் மீட்­கப்­பட்ட மீன­வர்­களின் புகைப்­படம் மற்றும் வீடியோ காட்சி போன்றவை தமக்கு கிடைத்துள்ளதாகவும் முஜாஹித் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.