கபூரியா விவகாரம் : நாளை கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

0 268

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
மஹ­ர­கம – கபூ­ரியா அர­புக்­கல்­லூ­ரியின் வக்பு சொத்­து­க­ளுக்கும், கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்கும் கபூ­ரியா நிர்­வா­கத்­தினால் சவால்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­ற­மைக்கு எதி­ராக பொது­மக்­களால் கவ­ன­யீர்ப்பு போராட்டம் ஒன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

கபூ­ரியா அர­புக்­கல்­லூ­ரியின் பழைய மாணவர் சங்­கத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள இந்த கவ­ன­யீர்ப்பு போராட்டம் நாளை வெள்­ளிக்­கி­ழமை கொழும்பு –14,கிரேண்ட் பாஸ் வீதியில் அமைந்­தி­ருந்த, கபூ­ரியா வக்பு சொத்­தான முன்னைய சுலைமான் வைத்­தி­ய­சா­லைக்கு முன்­பாக ஜும் ஆ தொழு­கை­யை­ய­டுத்து இடம்­பெ­ற­வுள்­ளது.

கபூ­ரியா வக்பு சொத்து தொடர்பில் வக்பு சபையில் வழக்கு விசா­ர­ணையின் கீழ் உள்ள நிலையில் இப்­பி­ரச்­சி­னையை சமூக மயப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும், வக்பு சொத்து தொடர்பில் மக்­களின் ஒத்­து­ழைப்­பு­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கா­கவும் இந்த ஆர்ப்­பாட்டம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக கல்­லூ­ரியின் பழைய மாணவர் சங்க செய­லாளர் ஐ.எல்.டில்சாட் மொஹமட் தெரி­வித்தார்.

இதே வேளை கபூ­ரியா அர­புக்­கல்­லூ­ரியின் நிர்­வா­கிகள் கல்­லூ­ரிக்கு புதி­யவோர் அதி­பரை நிய­மித்துக் கொள்­வ­தற்­காக மாவட்ட நீதி­மன்றின் உத்­த­ர­வொன்­றினைப் பெற்று புதிய அதிபர் ஒருவர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. ஏற்­க­னவே இருந்த அதிபர் பதவி விலக்­கப்­ப­டா­விட்­டாலும் அவ­ரது அதி­கா­ரங்கள் பறிக்­கப்­பட்டு புதிய அதி­ப­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன.

அத்­தோடு கடந்த 18 ஆம் திகதி மாலை கபூ­ரியா கல்­லூரி பள்­ளி­வா­சலில் பழைய அதிபர் மற்றும் மாண­வர்கள் குர்ஆன் ஓதிக்­கொண்­டி­ருந்­த­போது நிர்­வா­கத்­துடன் தொடர்­பு­டைய ஒரு­வ­ருக்கும் பழைய அதி­ப­ருக்கும் இடையில் வாக்­கு­வாதம் ஏற்­பட்­டுள்ள நிலையில் அதனை மாணவர் ஒருவர் வீடியோ பதிவு செய்­துள்ளார். அப்­போது சில மாண­வர்கள் தாக்­கப்­பட்­டனர். ஒரு மாணவர் காயங்­க­ளுக்­குள்­ளாகி களு­போ­வில வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு மறு­தினம் வெளி­யே­றினார். இது தொடர்பில் குறிப்­பிட்ட மாண­வ­ரினால் மஹ­ர­கம பொலிஸ் நிலை­யத்தில் வாக்­கு­மூலம் அளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பழைய மாணவர் சங்­கத்தின் செய­லாளர் விடி­வெள்­ளிக்குத் தெரிவித்தார்.
கபூரியா அரபுக்கல்லூரியில் தற்போது சுமார் 65 மாணவர்கள் பயில்வதாகவும் கல்லூரியின் கல்விக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் விலகிச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.