ஜனாஸா எரிப்புக்கு ஆலோசனை வழங்கிய சுகாதார அதிகாரிகளிடம் விசாரணை நடத்துங்கள்

அமைச்சர் சிசிர ஜயகொடி உண்மையை வெளிப்படுத்தியதாகவும் சுட்டிக்காட்டினார் முஜிபுர் ரஹ்மான்

0 273

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொவிட் தொற்றின் கார­ண­மாக உயி­ரி­ழந்­த­வர்­களின் ஜனா­சாக்­களை பல­வந்­த­மாக எரிக்க வேண்டும் என வலி­யு­றுத்தி சுகா­தார அமைச்­சுக்கு ஆலோ­சனை வழங்­கி­ய­வர்கள் குறித்து உட­னடி விசா­ரணை நடத்தி, இவ்­வாறு ஆலோ­சனை வழங்­கிய அதி­கா­ரிகள் யார் என்­பதை அவ­ச­ர­மாக வெளிப்­ப­டுத்த வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

கொரோனாவில் மர­ணித்­தோரின் இறு­திக்­கி­ரி­யைகள் விட­யத்தில் சுகா­தார அமைச்சின் சில அதி­கா­ரிகள் வழங்­கிய தவ­றான ஆலோ­ச­னைகள் கார­ண­மாக நாட்டில்  இனங்­க­ளுக்­கி­டையில் பிரச்­சி­னைகள் உரு­வா­கி­ய­தாக சுதேச வைத்­தி­யத்­துறை இரா­ஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்­கொடி பாரா­ளு­மன்­றத்தில் கருத்து வெளி­யிட்­ட­தை­யடுத்து உரை­யாற்­றியபோதே ஐக்­கிய மக்கள் சக்தி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் இவ்­வாறு தெரி­வித்தார்.

வரவு செலவு திட்­டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான விவா­தத்தில், நேற்­று­முன்­தினம் சுகா­தார அமைச்­சுக்­கான நிதி ஒதுக்­கீடு தொடர்­பான விவாதம் இடம்­பெற்­றது.
இதன்­போது, சுதேச வைத்­திய துறை இரா­ஜாங்க அமைச்சர் சிசிர ஜய­கொடி உரை­யாற்­று­கையில்,

கொவிட் தொடர்பில் மர­ணித்­த­வர்­களின் இறு­திக்­கி­ரி­யைகள் தொடர்பில் சுகா­தார அமைச்சின் சில அதி­கா­ரிகள் வழங்­கிய தவ­றான ஆலோ­சனை கார­ண­மாக நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் பிரச்­சி­னைகள் உரு­வா­கின. இவர்கள் தான் உடல்­களை தகனம் செய்ய வேண்டும் என ஆலோ­சனை வழங்­கி­னார்கள். முஸ்­லிம்கள் மீது எமக்கு வெறுப்­பினை உரு­வாக்­கி­னார்கள். சுகா­தார அமைச்சின் ஒரு சில விசேட நிபு­ணர்­களின் ஆலோ­சனை கார­ண­மா­கவே இனங்­க­ளுக்­கி­டையில் குரோதம் ஏற்­பட்­டது. கல­கங்கள் ஆரம்­ப­மா­கின.

இவ்­வா­றான விசேட வைத்­திய நிபு­ணர்கள் இளை­ஞர்­களின் போராட்ட (அர­க­லய) களத்­துக்குச் சென்று இனங்­க­ளுக்­கி­டையில் சம­நிலை பேணப்­ப­ட­வேண்டும் என்று கூறி­னார்கள். ஆனால் இந்த 225 உறுப்­பி­னர்கள் மீது குற்றம் சுமத்­தி­யி­ருக்­கி­றார்கள் என்றார்.
சுதேச வைத்­தி­யத்­துறை இரா­ஜாங்க அமைச்­சர் உரை­யாற்­றிய பின்னர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் பேசு­கையில்; சுதேச வைத்­தி­யத்­துறை இரா­ஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்­கொடி இங்கு உண்­மையைக் கூறினார்.

கடந்த காலத்தில் கொவிட்­டினால் இறந்­த­வர்­க­ளது இறுதிக் கிரியை தக­னமா? அல்­லது அடக்­கமா? என்ற பிரச்­சி­னையில் சுகா­தார அமைச்சின் சில அதி­கா­ரிகள் எமக்கு தவ­றான ஆலோ­சனை வழங்­கி­னார்கள். அவர்கள் சட­லங்கள் எரிக்­கப்­ப­ட­வேண்டும் என்று தீர்­மானம் நிறை வேற்­றி­னார்கள் என்று இரா­ஜாங்க அமைச்சர் இங்கு கூறியுள்ளார்.
நான் சுகா­தார அமைச்­ச­ரிடம் கேட்­கிறேன், உலக சுகா­தார ஸ்தாபனம் அவ்­வா­றான சட­லங்கள் தகனம் அல்ல அடக்கம் செய்­வ­தற்கு இட­ம­ளி­யுங்கள் என்று சிபா­ரிசு செய்­தி­ருந்­தது. இவ்­வா­றான சிபா­ரிசினை உலக சுகா­தார ஸ்தாபனம் வழங்­கி­யி­ருந்தும் உங்­க­ளது அர­சாங்கம் ஓர் இனத்­துக்கு முறை­யற்ற விதத்தில் ஜனா­ஸாக்கள் தகனம் செய்­யப்­ப­ட­வேண்டும் என்று கூறி பலாத்காரமாக உத்தரவிட்டது. யார் இவ்வாறான தவறான ஆலோசனையினை சுகாதார அமைச்சுக்கு வழங்கினார்கள் என்பது தொடர்பில் உடனடியாக விசாரணை ஒன்றினை நடத்தி அந்த அதிகாரிகளின் பெயர் விபரங்களை பகிரங்கப்படுத்த வேண்டுமென நான் வேண்டிக்கொள்கிறேன் என்றார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.