பெளத்த பிக்குகள் முன்னுள்ள பொறுப்பு

0 446

கல்கந்தே தம்மானந்த தேரர்
சிரேஷ்ட விரிவுரையாளர்,
களனி பல்கலைக்கழகம்

இலங்­கையின் இன்­றைய நிலை­யா­னது சர்­வ­தேச ரீதியில் பல­ராலும் கேலி செய்­யப்­படும் அள­விற்கு நலி­வ­டைந்­தி­ருக்­கின்­றது. இந்­தி­யாவின் ஒரு தேசியப் பத்­தி­ரி­கையில் இலங்­கையின் தேசியக் கொடி­யா­னது கேலிச் சித்­தி­ர­மாக காட்­டப்­பட்­டி­ருந்­த­தனை இதற்கு உதா­ர­ண­மாகக் குறிப்­பி­டலாம். கொடியில் இருக்­கின்ற சிங்கம் மிகவும் மெலிந்து ஒடுங்கி இருப்­ப­தாக சித்­தி­ரத்தில் காட்­டப்­பட்­டி­ருந்­தது. அது மாத்­தி­ர­மல்ல வெளி­நா­டு­களில் கடன் கேட்கும் போது அந்த நாடு­களில் தொழி­லுக்­காக சென்­றி­ருக்­கின்ற இலங்­கை­யர்கள் தாங்கள் தொழில் புரியும் நாட்டில் நீங்கள் கடன் கேட்டால் அவற்றை எங்­க­ளி­ட­மி­ருந்து இந்­நாட்டு அர­சாங்கம் அற­விட்டுக் கொள்­ளலாம் எனவே கடன் வாங்­கா­தீர்கள் என்­ப­தாக சமூக ஊட­கங்கள் வழி­யாக குறிப்­பி­டு­கின்­றனர். இலங்கை சர்­வ­தேச ரீதியில் மிகவும் கேலிக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என்­ப­தற்கு இவை சிறந்த உதா­ர­ணங்­க­ளாகும்.

உள்­நாட்டு ரீதி­யிலும் சர்­வ­தேச ரீதி­யிலும் பின்­தங்­கிய நிலையில் காணப்­ப­டு­கின்ற இலங்­கை­யினை மீட்­டெ­டுப்­ப­தற்­காக இலங்­கையில் வாழ்­கின்ற அனைத்து மக்­களும் சுய­வி­சா­ரணை ஒன்­றினை மேற்­கொள்­வது காலத்தின் தேவை­யாகும். நாம் வாழ்­கின்ற நாடு முன்­னேற்­றத்தை நோக்கிச் செல்­லாமல் அதல பாதா­ளத்தை நோக்கிச் செல்­வ­தற்கு நான் எப்­போ­தா­வது கார­ண­மாக இருந்­தி­ருக்­கின்­றேனா என்­பதை இந்த சுய விசா­ர­ணையின் ஊடாக கண்­ட­றி­வ­தற்கு முயற்­சிக்க வேண்டும்.

* யாரை­யேனும் ஆட்சி பீடத்தில் ஏற்­று­வ­தற்­காக நாம் மத­வாதம் இன­வாதம் என்­ப­வற்றை பயன்­ப­டுத்­தி­யுள்­ளோமா?
* இது போன்ற செயற்­பா­டு­க­ளுக்கு நாம் அனு­ச­ரணை வழங்­கி­யுள்­ளோமா?
குறித்த சுயமதிப்­பீடு மேலே குறிப்­பி­டப்­ப­டு­கின்ற தலைப்­புக்­களின் அடிப்­ப­டையில் அமை­வது சிறந்­தது.

பொது­வா­கவே ஒரு சமூ­கத்தில் சுய பாது­காப்பு பற்­றிய பய உணர்வு ஏற்­படும் போது தம்மைப் பாது­காத்­துக்­கொள்ள வேண்­டு­மென்ற பேசு பொருள் அந்த மக்கள் மத்­தியில் உரு­வா­கி­றது. கிரா­மப்­பு­றங்­களில் விவ­சாய நிலங்­களில் தங்­க­ளது விவ­சாய அறு­வ­டை­களை திருடிச் செல்­வ­தற்கு ஒரு சிறு குழு­வினர் இருக்­கின்­றனர் என்ற பயம் ஏற்­படும்போது ஒட்டு மொத்த கிரா­மத்­த­வர்­களும் எமது கிரா­மத்தை பாது­காப்போம் என்ற தொனிப்­பொ­ருளில் ஒன்­றி­ணை­கின்­றனர். அவ்­வாறு ஒன்­றி­ணை­கின்­ற­வர்கள் அந்த திருட்டுக் கும்­ப­லி­லி­ருந்து தங்­களைப் பாது­காத்­துக்­கொள்ள பலம் பொருந்­திய ஒரு­வரை நாடு­கின்­றனர் அல்­லது பலம் பொருந்­திய ஒரு­வரே தங்­களைப் பாது­காப்பார் என நம்­பிக்கை கொண்டு அத்­த­கைய ஒரு­வ­ரிடம் தங்­க­ளது கிரா­மத்­தையே ஒப்­ப­டைத்து விடு­கின்­றனர்.

இலங்­கைக்கு சுதந்­திரம் கிடைத்­தது முதற்­கொண்டே இத்­த­கைய பயத்தைப் பயன்­ப­டுத்தி அனைத்து அர­சி­யல்­வா­தி­களும் ஆட்­சி­யினைப் பிடித்­துக்­கொள்ள முயன்­றி­ருக்­கின்­றனர். அதா­வது நாட்டில் ஒரு குழு­வி­னரால் நாடு ஆக்­கி­ர­மிக்­கப்­படப் போகின்­றது என்­ப­தாக ஒரு கருத்­தாடல் மக்கள் மத்­தியில் உரு­வாக்­கப்­ப­டு­வதும் பின்னர் நாட்டை ஆக்­கி­ர­மிக்கப் போகின்ற குழு­வாக ஒரு இனம் அடை­யா­ளப்­ப­டுத்தி அதனைத் தொடர்ந்து நாட்டின் அனைத்து மக்­களும் அந்தக் குழு தொடர்பில் அச்சம் கொள்ளத் தொடங்­குவர். பின்னர் தங்­களால் இயன்ற அளவில் எதிர்ப்­புக்­க­ளையும் வெளிக்­காட்டத் தொடங்­குவர். இந்த சந்­தர்ப்­பத்தில் அகன்ற மார்பும் அடர்த்­தி­யான மீசையும் கொண்ட ஒருவர் சமூ­கத்தில் மிகவும் பலம் பொருந்­திய நப­ராக அறி­முகம் செய்­யப்­ப­டுவார். அத்­துடன் நாட்டை தீய சக்­தி­க­ளிடம் இருந்து பாது­காக்கும் பலம் இவ­ரிடம் மாத்­தி­ரமே காணப்­ப­டு­கி­றது என்­ப­தாக மக்கள் நம்ப வைக்கப்படு­வார்கள்.

இந்த அடிப்­ப­டையில் தான் மக்­க­ளிடம் காணப்­ப­டு­கின்ற பயத்­தினை ஆட்­சி­யா­ளர்கள் பயன்­ப­டுத்தி காலா கால­மாக ஆட்சி பீடம் ஏறி வரு­கின்றனர்.

இந்த நாட்டில் இன­வாதம் என்­பது அனைத்து காலங்­க­ளிலும் காணப்­பட்­டது. எனினும் எத்­த­கைய காலங்­களில் இந்த இன­வாதம் அதி­க­மாக காணப்­ப­டு­கி­றது என்­பதை ஆராய்ந்து பார்க்க முயற்­சித்தோம். இதற்­காக சமூக ஊட­கங்கள் அச்சு ஊட­கங்கள் என்­ப­வற்றில் பகி­ரப்­ப­டு­கின்ற விட­யங்­களை வைத்து ஆராய்ந்து பார்த்தோம். நாட்டில் நெடு­கி­லுமே இன­வாதம் என்­பது அதிக அளவில் தலை­வி­ரித்­தா­டு­கின்ற கால­மாக தேர்­தல்கள் நடை­பெ­று­வ­தற்கு அண்­மித்த காலங்கள் அடை­யாளம் காணப்­பட்­டன. இந்த தர­வு­களின் அடிப்­ப­டையில் நோக்கும் போது அனைத்து பிரி­வினை வாதங்­களும் அர­சியல் நோக்­கங்­க­ளுக்­கா­கவே உரு­வாக்­கப்­பட்­டது என்­பது தெளி­வா­கின்­றது.

இன்று நாட்டு மக்கள் அனை­வ­ரி­டமும் ஒரு எழுச்சி ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. நாட்டை தீய அர­சி­யல்­வா­தி­க­ளி­ட­மி­ருந்து பாது­காக்க வேண்டும் என்ற எதிர்­பார்ப்பு மக்கள் மத்­தியில் உரு­வாகத் துவங்­கி­யுள்­ளது. நாட்டு மக்கள் அனை­வ­ருமே நாட்டை மீட்­டெ­டுக்­கின்ற நோக்கில் சாதி இன மொழி பேதம் மறந்து அனை­வரும் ஓர­ணி­யாக நின்று போரா­டத்­து­வங்­கி­யி­ருக்­கின்­றனர். நாட்டில் இவ்­வ­ளவு காலமும் காணப்­பட்டு வந்த இன மத மொழி ரீதி­யி­லான வேறு­பா­டு­களை நாட்டு மக்­க­ளி­ட­மி­ருந்து களை­வ­தற்கு இந்த சந்­தர்ப்­பத்தை மிகவும் சிறப்­பாக பயன்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­கான முயற்­சிகள் வர­வேற்­கப்­ப­டு­கின்­றன. இதற்­காக நமது புத்த பிக்­குகள் தங்­க­ளது இருக்­கை­க­ளி­லி­ருந்து இறங்கி வர­வேண்டும். அத்­துடன் புத்த மதம் என்­பது சிங்­க­ள­வர்­க­ளுக்கு மாத்­திரம் சொந்­த­மான ஒன்­றல்ல என்­ப­துடன் அது அனைத்து உலக மக்­க­ளுக்­கு­மான ஒரு வாழ்க்கை நெறி என்ற அடிப்­ப­டையில் அதன் போத­னைகள் அனைத்து மக்­க­ளையும் சென்­ற­டையச் செய்­வ­துடன் அவற்றின் ஊடாக இன மத பேதங்­களை நீக்­கு­வ­தற்கு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும்.

தற்­போது இலங்கை பாரிய பொரு­ளா­தார பிரச்­சி­னை­யினை எதிர்­நோக்­கிய நிலையில் காணப்­ப­டு­கின்­றது. இந்த நிலையில் உணவு உடை உறையுள் போன்ற அத்­தி­யா­வ­சிய தேவை­களைப் பூர்த்தி செய்ய சிர­மப்­ப­டு­கின்ற நிலை­யி­லேயே புதிய இலங்கை என்­ப­தனை நோக்கி பய­ணிப்­ப­தற்கு ஆயத்­த­மா­கின்றோம். ஒரு குழந்­தையைப் பிர­ச­விப்­ப­தற்­காக தாய் ஒருவர் பிர­ச­வ­வே­த­னை­யினை பொறுத்துக் கொள்­வது எவ்­வாறோ அதே போன்று புதிய இலங்கை ஒன்­றினைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக மக்கள் பல சிர­மங்­களை எதிர்­நோக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

பேதங்­களை ஒழிப்­பதில் புத்த பிக்­கு­களின் பங்கு
மிக முக்­கி­ய­மா­ன­தாகும்
காலி முகத்­திடல் போராட்­டத்தின் போது அதில் பங்­கு­பற்­றிய ஒருவர் காண்­பித்துக் கொண்­டி­ருந்த பதாதை ஒன்று எனது நினைவில் அடிக்­கடி வந்து போவ­துண்டு. ‘நாட்­டுக்கு வேலிகள் இடு­வ­தற்கு போது­மான அளவு தூண்­களும் கம்­பி­களும் எம் வச­முள்ளன. புத்த பிக்­குகள் வேலி­யாக இருக்கத் தேவை­யில்லை” என்­ப­தாக அந்தப் பதா­தையில் பொறிக்­கப்­பட்­டி­ருந்­தது. எனவே இந்த நாட்டின் மக்கள் புத்த பிக்­கு­க­ளிடம் இருந்து ஏதோ ஒன்றை எதிர்­பார்க்­கின்­றனர். நாட்டை பிரித்து ஆள்­வ­தற்கு புத்த பிக்­கு­களும் துணை போகின்­றார்கள் என்­ப­தாக அவர்கள் நினைத்துக் கொண்­டி­ருக்­கலாம். நாட்டைப் பாது­காப்­ப­தற்கு ஹிட்லர் ஒருவர் வர­வேண்டும் என்­ப­தாக எந்த ஒரு பிக்­குவும் குறிப்­பிட முடி­யாது. அனை­வ­ருக்கும் அன்பு காட்­டு­மாறு போதிக்­கின்ற புத்த தர்­மத்தில் வாழ்­கின்ற பிக்கு ஒருவர் ஒரு­போதும் வன்­மு­றை­க­ளுக்கு துணை நிற்க முடி­யாது.

புத்த தர்­மத்­தினைப் போதிப்­பதன் ஊடாக நாம் வேற்­று­மையில் ஒற்­றுமை காண்­கின்ற நிலையை ஏற்­ப­டுத்த முயற்­சிக்க வேண்டும்.

இன பேதம் மத­வாதம் என்­பன இல்­லாத புதிய இலங்­கை­யினைக் கட்­டி­யெ­ழுப்­புதல் என்ற நோக்­கத்­தினை நிறை­வேற்­று­வ­தற்­காக புத்த பிக்­கு­களின் சமூகம் புனர்­நிர்­மாணம் செய்­யப்­பட வேண்டும். கிறிஸ்­தவ மதம் வத்­திக்­கானில் ஒன்று சேர்க்­கப்­பட்டு இருப்­பது போன்று புத்த பிக்­கு­களும் தங்­களை புனர்­நிர்­மாணம் செய்து கொள்ள வேண்டும். இந்த நோக்­கத்தை அடைந்து கொள்­வ­தற்­காக நாம் சுய விசா­ரணை முறைமை ஒன்றை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும்.

சாதி வேறு­பாடு காட்­டு­வது என்­பது மிக­வுமே வெட்­கப்­ப­டக்­கூ­டிய செயற்­பா­டொன்­றாகும். பிக்­குகள் மத்­தியில் காணப்படுகின்ற சாதி வேறுபாடுகள் ஒழிக்கப்பட வேண்டும்.

அன்பு காட்டுதல் என்பதன் அடிப்படையில் மத்தியஸ்த செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபட வேண்டும்.

நாம் பிறக்கும் போது இந்த நாடு நலிவடைந்த ஒரு நாடாக இருப்பது எமது குற்றமல்ல. ஆனால் நாங்கள் இறந்து போகின்ற போதும் எமது நாடு ஏழ்மையானதாக நலிவடைந்த நிலையில் இருக்குமாயின் அது எமது இயலாமையினால் ஏற்பட்ட ஒன்றாகும். எனினும் இவ்வாறான ஏழ்­மை­யான நாட்டை நாம் எமது அடுத்த தலை­மு­றைக்கு ஒப்­ப­டைப்­ப­தாயின் அது அடுத்த தலை­மு­றைக்கு செய்­கின்ற பாரிய ஒரு துரோ­க­மாகும். இது எமக்கு அவ­மா­னத்­தினை தரு­கின்ற ஒன்­றா­கவும் காணப்­ப­டு­கின்­றது. எனவே அனைத்­தையும் துறந்­து­விட்டு உலக சாந்­திக்­காக அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டு­கின்­ற­வர்கள் என்ற அடிப்­ப­டையில் இலங்­கை­யினை இந்த நிலை­யி­லி­ருந்து மீட்­ப­தற்­காக அனைத்து புத்த பிக்குகளுக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.