ஜும்ஆ பள்ளிகளில் மாத்திரமே ஜும்ஆ தொழுகை நடாத்துவதா?

தீர்மானத்தை அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளது வக்பு சபை

0 282

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஜும்ஆ பள்­ளி­வா­சல்­களில் மாத்­தி­ர­மே ஜும்ஆ தொழு­கைகள் நடாத்­தப்­பட வேண்டும் எனும் ஆலோ­ச­னை தொடர்பில் வக்பு சபை அடுத்த வாரம் தனது தீர்­மா­னத்தை அறி­விக்­க­வுள்­ள­தாக அதன் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்­தார்.
நாட்டில் இயங்­கி­வரும் ஜும்ஆ பள்­ளி­வா­சல்­களில் மாத்­தி­ரமே வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழுகை நடாத்­தப்­ப­ட­ வேண்­டு­மென அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா சபை, சூரா­க­வுன்ஸில், ஷூரீஆ கவுன்ஸில், சூபி தரீக்­காக்­களின் உயர் பீடம் (Scot) என்­பன ஏக­ம­ன­தாக தீர்­மா­னித்­துள்­ளன. இத்­தீர்­மானம் அண்­மையில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ளரின் தலை­மையில் திணைக்­க­ளத்தில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டலின் போதே அறி­விக்­கப்­பட்­டது.

இதே­வேளை நேற்று முன்­தினம் நடை­பெற்ற வக்­பு­சபைக் கூட்­டத்தில் இத்­தீர்­மானம் தொடர்பில் ஆரா­யப்­பட்­டது. அத்­தோடு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் மாவட்ட அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­த­ரி­க­ளி­ட­மி­ருந்து இது தொடர்­பான அறிக்­கை­களை வக்பு சபையினால் பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

‘வக்பு சபை இது தொடர்பில் ஆராய்ந்து, அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­களின் அறிக்­கை­க­ளையும் பரி­சீ­லித்து அடுத்த வாரம் உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்­பொன்­றினை வெளி­யிடும்’என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

கொவிட் 19 தொற்று பர­விய காலத்தில் சுகா­தார வழி­காட்­டல்கள் அடங்­கிய விதி­மு­றைகள் பள்­ளி­வா­சல்களில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டன. இதன் பின்­ன­ணியில் ஜும்ஆ பள்­ளி­வா­சல்கள் அல்­லாத பள்­ளி­வா­சல்கள் தக்­கி­யாக்கள்,ஸாவி­யாக்­களில் ஜும்ஆ தொழு­கைக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். கொவிட் 19 தொற்­றி­லி­ருந்து நாடு மீட்சி பெற்­றதும் அவ்­வா­றான பள்­ளி­வா­சல்கள், தக்­கி­யாக்கள், ஸாவி­யாக்­களில் ஜும்ஆ தொழுகை நிறுத்­தப்­பட்­டது என்­றாலும் சில பள்­ளி­வா­சல்­களில் தொடர்ந்தும் ஜும்ஆ தொழுகை நடாத்­தப்­ப­டு­கி­றது.

இத­னை­ய­டுத்தே முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் கடந்த வாரம் குறிப்­பிட்ட நான்­கு­ முஸ்லிம் நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­தி­களை அழைத்து கலந்­து­ரை­யா­டி­யது. இக்­க­லந்­து­ரை­யா­டலின் பின்பு நான்கு நிறு­வ­னங்­களும் ஜும்ஆ பள்­ளி­வா­சல்­களில் மாத்­தி­ரமே ஜும்ஆ தொழுகை நடாத்­தப்­ப­ட­வேண்டும் என்று ஏகோ­பித்து தீர்­மா­னித்­தன.

இத்­தீர்­மானம் திணைக்­கள பணிப்­பா­ள­ரினால் வக்பு சபைக்கு அனுப்பிவைக்­கப்­பட்­டது. உலமா சபையின் பத்வா குழுவும் ஏற்­க­னவே வக்பு சபை­யுடன் கலந்­து­ரை­யா­ட­லொன்­றினை நடாத்தியிருந்தது.- Vidvelli

Leave A Reply

Your email address will not be published.