ஆஜர்ன்டீனா சவூதியிடம் வீழ்ந்தது எப்படி?

0 335

போட்டி தொடங்­கு­வ­தற்கு சில நிமி­டங்­க­ளுக்கு முன்பு எந்த அணி வெற்றி பெறும், இறுதிக் கோல் கணக்கு எப்­ப­டி­யி­ருக்கும் என்ற கேட்­ட­போது, தொலைக்­காட்­சியில் பேசிக் கொண்­டி­ருந்த போர்ச்­சு­கலின் முன்னாள் வீரர் ஒருவர் 4-க்கு பூஜ்­ஜியம் என்ற கணக்கில் ஆஜர்ன்­டீனா வெல்லும் என்றார். உட­னி­ருந்த இங்­கி­லாந்தின் முன்னாள் வீரர்கள் இன்­னொ­ரு­படி மேலே போய் 5-க்கு பூஜ்­ஜியம் என்ற கணக்கில் ஆஜர்ன்­டீனா வெல்லும் என்றனர்.

அவர்கள் மாத்­தி­ர­மல்ல போட்­டிக்கு முன்பு யாருமே ஆஜர்ன்­டீனாவுக்கு எதி­ராக சவூதி அரே­பியா வெற்றி பெறும் என்று கரு­தி­யி­ருக்க மாட்­டார்கள். ஏன், ஒரு கோல் அடிப்­ப­து­கூட சாத்­தி­ய­மில்லை என்­றுதான் நினைத்­தி­ருப்­பார்கள். ஆனால் உலகக் கோப்பை வர­லாற்றில் மிகப்­பெ­ரிய அதிர்ச்­சி­யாக முடிந்­து­விட்­டது ஆஜர்ன்­டீ­னா­வுக்கு எதி­ரான போட்டி.

சவூதி அரே­பியா தர­வ­ரி­சையில் 51-ஆவது இடத்தில் இருக்­கி­றது. ஆஜர்ன்­டீனா அணி தர­வ­ரி­சையில் 3 ஆவது இடத்தில் இருக்­கி­றது. இந்த ஒரு புள்ளி விவ­ரமே கணிப்­புகள் எப்­ப­டி­யி­ருக்கும் என்று கூறி­விடும். கூடு­த­லாக கால்­பந்து உலகில் ஜாம்பவானாக கருதப்படும் லியோனல் மெஸ்ஸி இருக்கும் அணி என்­பதால் யாருக்கும் அந்த அணியின் வெற்றி மீது சந்­தே­கமே எழ­வில்லை.

சர்­வ­தேசப் போட்­டி­களில் தொடர்ச்­சி­யாக 36 போட்­டி­களில் தோல்­வியைச் சந்­திக்­காத அணி, அடுத்­த­தாக 37 ஆவது போட்­டியில் வெற்­றியைப் பெற்று இத்­தாலி அணியின் முந்­தைய சாத­னையைச் சமன் செய்யும் என்­றுதான் எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால் மெஸ்­ஸியின் அணிக்கு அதிர்ச்­சி­ய­ளித்­து­விட்­டது சவூதி அரே­பியா.

சவூதி அரே­பிய கால்­பந்து வர­லாற்றில் இது மிகவும் மகிழ்ச்­சி­க­ர­மான நாளாக அமைந்­து­விட்­டது. தேசிய விடு­முறை அளித்துக் கொண்­டாடும் அள­வுக்கு சௌதி அரே­பி­யாவில் மகிழ்ச்சி வெள்ளம் பாய்­கி­றது என்றே சொல்­லலாம்.

மெஸ்ஸி பறி­கொ­டுத்த பந்து!
போட்டி முழு­வதும் சவூதி அரே­பி­யாவின் கை ஓங்­கி­யி­ருந்­தது என்று சொல்ல முடி­யாது. ஆனால் 48 ஆவது நிமி­டத்­துக்கும் 53-ஆவது நிமி­டத்­துக்கும் இடைப்­பட்ட ஆறு நிமி­டங்­களில் மெஸ்­ஸியின் அணி­யி­னரை நிலை­கு­லைய வைத்­து­விட்­டது சவூதி அரே­பியா.
48-ஆவது நிமி­டத்தில் மைதா­னத்தின் மையத்தில் இருந்து சவூதி அரே­பிய வீரர்கள் கடத்தி வந்த பந்து, பெரிய அளவில் ஆஜர்ன்­டீனா வீரர்­களின் எதிர்ப்­பின்றி பத்துப் பதி­னைந்து நொடி­க­ளி­லேயே கோல் வலைக்குள் சென்­றது. சவூதி வீரர்­க­ளிடம் மெஸ்ஸி பந்தைப் பறி­கொ­டுத்­த­தில்தான் அது கோல் வரை சென்­றது. அல் சேஹ்ரி துல்­லி­ய­மாக அதைச் செய்து முடித்தார். அடுத்த 5-ஆவது நிமி­டத்தில் கிட்­டத்­தட்ட அதே­போன்ற இடத்தில் இருந்து சலேம் அல்-­தாவ்­சாரி மற்­றொரு கோலை அடித்தார்.

ஆ­ஜர்ன்­டீனா அணி சறுக்­கி­யது எங்கே?
போட்­டியில் விசில் ஊதப்­பட்ட தரு­ணத்தில் இருந்தே ஆஜர்ன்­டீ­னாவின் கால்­கள்தான் பந்தைக் கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருந்­தன. சில நிமி­டங்­க­ளி­லேயே கோலை நோக்­கிய அதி­ர­டி­யான ஷாட்­களை காண முடிந்­தது. 10-ஆவது நிமி­டத்தில் பெனால்ட்டி முறையில் மெஸ்ஸி எந்தப் பதற்­றமும் இல்­லாமல் கோல் அடித்து அணியின் நம்­பிக்­கையை உயர்த்­தினார்.

மெஸ்ஸி அடித்த பந்து ஒரு­பக்­க­மாகச் சென்­ற­போது, மற்­றொ­ரு­பக்­க­மாகப் பாய்ந்து விழுந்தார் சவூதி அரே­பி­யாவின் கோல் கீப்பர். அதன் பிறகும் அடுத்­த­டுத்து இரண்டு முறை சவூதி அரே­பி­யாவின் கோல் வளைக்குள் பந்தைத் திணித்து ஆ­ஜர்ன்­டீனா அணி. அப்­போ­தும்­கூட திகைத்து நின்­றி­ருந்தார் சவூதி கோல்­கீப்பர். அவை ஆப்­சை­டாக அறி­விக்­கப்­பட்­ட­துதான் சவூதிக்கு பலம் தந்­தது.

ஆனால் ஆட்­டத்தின் பிற்­ப­கு­தியில் அதே சவூதி அரே­பிய கோல் கீப்பர் கோலை நோக்கி வந்த பந்­து­களை 5 முறை தடுத்தார். ஆட்டம் முழு­வதும் ஆ­ஜர்ன்­டீனா அணி 69 சத­வி­கிதம் பந்தைக் கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருந்­தது. சவூதி அரே­பி­யா­விடம் 31 சத­வித நேரம்தான் பந்து இருந்­தது.

ஆஜர்ன்­டீனா அணி கோலை நோக்கி 15 முறை அடித்­தி­ருக்­கி­றது. அவற்றில் 6 ஷாட்கள் துல்­லி­ய­மா­னவை. சவூதி அணியால் மூன்று முறைதான் கோலை நோக்கி அடிக்க முடிந்­தி­ருக்­கி­றது. அதில் இரண்டு துல்­லி­ய­மான ஷாட்­களும் கோல் கீப்­பரால் தடுக்­கப்­ப­டாமல் கோலாக மாறி­ய­துதான் சிறப்பு. அவ்­வி­ரண்டும் கிட்­டத்­தட்ட ஒரே­மா­தி­ரி­யான ஷாட்கள். ஒரே மாதிரி அடிக்­கப்­பட்­டவை.

ஆஜர்ன்­டீனா அணியை உலகக் கோப்பை போட்டி ஒன்றில் ஆசிய அணிகள் வீழ்த்­திய வர­லாறு இல்லை. இதற்கு முன் ஆசிய அணிகள் பெரிய அணி­களை வீழ்த்தி வெற்றி பெற்­றி­ருக்­கின்­றன.

கடந்த உலகக் கோப்பை போட்­டியில் தென் கொரிய அணி, அப்­போ­தைய சாம்­பி­ய­னான ஜெர்­ம­னியை இரண்­டுக்கு பூஜ்­ஜியம் என்ற கோல் கணக்கில் வீழ்த்­தி­யது. ஜெர்­மனி போட்­டியை விட்டு வெளி­யே­று­வ­தற்கு அந்தத் தோல்­வியே கார­ண­மாக அமைந்­தது. இதே சவூதி அரே­பிய அணி 1994-ஆம் ஆண்டு பெல்­ஜியம் அணியை வீழ்த்­தி­யி­ருக்­கி­றது.
ஆனால் அவை எல்­லா­வற்­றையும் விட ஆஜர்ன்­டீனாவின் தோல்வி மிக மோச­மா­ன­தா­கவே கரு­தப்­ப­டு­கி­றது. ஏனென்றால் இதற்கு முன் எந்த அணியும் 36 முறை தோல்­வி­களைச் சந்­திக்­காத பிறகு மோச­மான தோல்­வியைச் சந்­திக்­க­வில்லை.

இனி ஆ­ஜர்ன்­டீனா­வுக்கு என்ன வாய்ப்பு?
கத்தார் உலகக் கோப்பை சி பிரிவில் ஆஜர்ன்­டீனா, சவூதி அரே­பியா, போலந்து, மெக்­சிகோ ஆகிய அணிகள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. இவற்றில் இரு போட்­டிகள் முடிந்­தி­ருக்­கின்­றன. இதில் ஆஜர்ன்­டீனா – சவூதி அரே­பியா போட்­டியைத் தவிர போலந்து – மெக்­சிகோ அணி­க­ளுக்கு இடை­யே­யான போட்­டியும் நடந்து முடிந்­தி­ருக்­கி­றது. இந்தப் போட்­டியில் இரு அணி­களும் கோல் அடிக்­காமல் சம­நி­லையில் முடி­கி­றது.

போட்­டியில் வெல்லும் அணி­க­ளுக்கு மூன்று புள்­ளி­களும், சம­நிலை செய்யும் அணி­க­ளுக்கு தலா ஒரு புள்­ளியும் வழங்­கப்­படும். 4 அணி­களும் ஒரு போட்­டியில் மோதி­யி­ருக்கும் நிலையில் சவூதி அரே­பிய அணி மூன்று புள்­ளி­க­ளுடன் முத­லி­டத்தில் இருக்­கி­றது. போலந்தும், மெக்­சி­கோவும் தலா ஒரு புள்­ளி­யுடன் அடுத்­த­டுத்த இடங்­களில் இருக்­கின்­றன. தோல்­வி­ய­டைந்த ஆஜர்ன்­டீனா அணி கடைசி இடத்தில் இருக்­கி­றது.

ஆஜர்ன்­டீனா அணி எதிர்வரும் சனிக்கிழமை நள்ளிரவில் மெக்சிகோ அணியுடன் மோதுகிறது. அந்த அணி தர வரிசையில் 13-ஆவது இடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்த போட்டியில் டிசம்பர் 31-ஆம் திகதி நள்ளிரவில் போலந்து அணியுடன் மோத வேண்டும். அந்த அணி தர வரிசையில் 26-ஆவது இடத்தில் இருக்கிறது.
அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற வேண்டுமானால் இவ்விரு போட்டிகளிலும் ஆஜர்ன்டீனா அணி வெற்றி பெற்றாக வேண்டும். தோல்வியடைவது அல்லது சமநிலை செய்வது ஆகியவை அடுத்த சுற்றுக்குச் செல்வதைப் பாதிக்கும். (பிபிசி)

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.