கொழும்பில் சர்வதேச பலஸ்தீன ஒருமைப்பாட்டு தின கருத்தரங்கு

0 361

சர்­வ­தேச பலஸ்தீன் ஒரு­மைப்­பாட்டு தினம் வரு­டாந்தம் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி அனுஷ்டிக்­கப்­ப­டு­கி­றது. இதனை முன்­னிட்டு இலங்கை பலஸ்தீன் ஒரு­மைப்­பாட்டு இயக்கம் கொழும்பில்; கருத்­த­ரங்கு ஒன்றை ஏற்­பாடு செய்­துள்­ளது.

பலஸ்­தீ­னுக்கு நீதி எனும் தொனிப் பொருளில் பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­டப வளா­கத்­தி­லுள்ள சர்­வ­தேச கற்­கை­க­ளுக்­கான பண்­டா­ர­நா­யக்க நிலை­யத்தின் ஒலிம்பஸ் மண்­ட­பத்தில் நவம்­பவர் 29 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை மாலை 4.30 மணிக்கு இக் கருத்­த­ரங்கு இடம்­பெ­ற­வுள்­ளது.

இலங்கை பலஸ்தீன் ஒரு­மைப்­பாட்டு இயக்­கத்தின் தலை­வரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பிமல் ரத்­நா­யக்க தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள இந் நிகழ்வில் இலங்­கைக்­கான பலஸ்­தீன தூதுவர் கலா­நிதி சுஹைர் ஹம்­தல்லா சைத், வெளி­வி­வ­கார இரா­ஜாங்க அமைச்சர் தாரக பால­சூ­ரிய, இலங்­கைக்­கான ஐ.நா. வதி­விட பிர­தி­நிதி ஹனா சிங்கர், சர்­வ­தேச உற­வுகள் தொடர்­பான நிபுணர் குசும் விஜே­தி­லக, இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் முன்னாள் ஆணை­யாளர் சட்­டத்­த­ரணி அம்­பிகா சற்­கு­ண­நாதன் ஆகியோர் உரை நிகழ்த்­த­வுள்­ளனர். இலங்கை பலஸ்தீன் ஒரு­மைப்­பாட்டு இயக்­கத்தின் செய­லாளர் பௌசர் பாரூக் நன்­றி­யுரை நிகழ்த்­துவார். இந் நிகழ்வில் சகலரையும் கலந்து கொண்டு பலஸ்தீனு விடுதலைக்காக குரல் கொடுக்குமாறு ஏற்பாட்டுக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.–Vidivelli

Leave A Reply

Your email address will not be published.