இறக்குமதி செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சிடமிருந்து இஸ்லாமிய நூல்களுக்கு மட்டுமே அனுமதி தேவை

ஏனைய சமய நூல்களுக்கு அவசியமில்லை: தகவலறியும் சட்டம் மூலம் தெரிய வந்தது.

0 400

(றிப்தி அலி)
சமயப் புத்­த­கங்­களை இலங்­கைக்கு இறக்­கு­மதி செய்யும் போது புனித அல்­குர்ஆன் மற்றும் இஸ்­லா­மிய சமயப் புத்­த­கங்­க­ளுக்கு மாத்­திரம் பாது­காப்பு அமைச்சின் அனு­மதி பெறப்­பட வேண்டும் எனப் பாகு­பாடு காட்­டப்­ப­டு­கின்ற விடயம் தக­வ­ல­றியும் விண்­ணப்­பத்தின் ஊடாக வெளி­யா­கி­யுள்­ளது. ஏனைய சமய நூல்­க­ளுக்கு இவ்­வா­றா­ன­தொரு அனு­மதி பெறப்­பட வேண்­டிய அவ­ச­ியம் இல்லை என்­பதும் தெரிய வந்­துள்­ள­து.
சமூக செயற்­பட்­டா­ள­ரான முஹம்மத் ஹிசாம், புத்­த­சா­சன, மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஆகி­ய­வற்­றுக்கு சமர்ப்­பித்த தக­வ­ல­றியும் விண்­ணப்­பங்­களின் ஊடா­கவே இந்த விடயம் தெரி­ய­வந்­தது.

பேரு­வ­ளையில் இயங்­கி­வரும் நப­வியா இஸ்­லா­மிய இளைஞர் அமைப்­புக்கு கட்டார் நாட்­டி­லி­ருந்து ஒரு தொகுதி புத்­த­கங்கள் கடந்த 2020 ஆம் ஆண்டில் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளன. இந்தப் புத்­த­கங்­களை சுங்க பிரி­வி­லி­ருந்து விடு­விப்­ப­தற்­கான அனு­மதி முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் 2020.06.15 ஆம் திகதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன், இந்­நூல்­களில் ஏனைய மதங்­களை விமர்சிக்­கவோ, கண்­டிக்­கவோ இல்லை எனவும் திணைக்­க­ளத்­தினால் குறித்த கடிதத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இக்­க­டிதம் கண்­கா­ணிப்­பிற்­காக சுங்கத் திணைக்­க­ளத்­தினால் பாது­காப்பு அமைச்­சிற்கு அனுப்­பப்­பட்­டி­ருந்­தது.

இதன்­போது, குறித்த புத்­த­கங்­களில் நான்கு புத்­த­கங்கள் சமய நல்­லி­ணக்­கத்­துக்கு சவால்­களை ஏற்­ப­டுத்தும் சலபி மற்றும் வஹாபி அதி­தீ­விர இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத கொள்­கை­களை உள்­ள­டக்கி இருந்­த­தாக 2020.07.21 ஆம் திகதி பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் ஓய்­வு­பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குண­ரத்­ன­வினால் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கு அறி­விக்­கப்­பட்­டது.

அத்­துடன், குறித்த புத்­த­கங்­களை இறக்­கு­மதி செய்­வ­தற்­கான அங்­கீ­கா­ரத்­தினை வழங்­கிய நபர்கள் தொடர்­பிலும் விசா­ரணை மேற்­கொள்­ளு­மாறு பாது­காப்பு அமைச்­சினால் கோரப்­பட்­டி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து, வெளி­நா­டு­களில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் அனைத்து இஸ்­லா­மிய சமய புத்­த­கங்­களும் பாது­காப்பு அமைச்­சினால் பரி­சீ­லனை செய்­யப்­பட்டு அனு­மதி வழங்­கினால் மாத்­தி­ரமே இலங்கை சுங்க திணைக்­க­ளத்­தி­லி­ருந்து விடு­விக்­கப்­படும் என்ற அறி­வித்தல் 2021.03.05 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டது.

இதனால், இஸ்­லா­மிய சமய புத்­த­கங்கள் மற்றும் புனித அல்­குர்ஆன் ஆகி­ய­வற்­றினை நாட்­டுக்குள் இறக்­கு­மதி செய்­வ­தற்கு தேவை­யான சிபா­ரி­சு­களை வழங்­கு­வ­தற்­காக ஒன்­பது பேரைக் கொண்ட “புத்­தக விமர்­சன மற்றும் வெளி­யீட்டுக் குழு” முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் 2021.04.19 ஆம் திகதி நிய­மிக்­கப்­பட்­டது.

திணைக்­க­ளத்தின் பிரதிப் பணிப்­பாளர் அன்வர் அலி, அஷ்ஷெய்க் கலா­நிதி ஏ.எம். அப்­வர்தீன், அஷ்ஷெய்க் கலா­நிதி அஸ்வர் அஸாஹீம், அஷ்ஷெய்க் அர்கம் நூராமித், அஷ்ஷெய்க் ஸகி அஹமட், அஷ்ஷெய்க் முப்தி முஸ்­தபா ராசா ஸபர், அஷ்ஷெய்க் ஏ.எச். இஹ்­ஸா­னுத்தீன், அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். ஸில்மி மற்றும் அஷ்ஷெய்க் முர்ஸித் முழப்பர் ஆகி­யோரே இக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­க­ளாவார்.

இதற்கு மேல­தி­க­மாக இஸ்­லா­மிய சமய புத்­த­கங்கள் மற்றும் புனித அல்­குர்ஆன் ஆகி­ய­வற்­றினை நாட்­டுக்குள் இறக்­கு­மதி செய்­வ­தற்கு எட்டு அம்­சங்­களைக் கொண்ட வழி­காட்­டி­யொன்றும் திணைக்­க­ளத்­தினால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

திணைக்­க­ளத்தின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்ள இந்த வழி­காட்டி, புத்­த­சா­சன, மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சு, பாது­காப்பு அமைச்சு மற்றும் சுங்கத் திணைக்­களம் ஆகி­ய­வற்­றுடன் கலந்­தா­லோ­சித்த பின்­னரே அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது என திணைக்­களம் கூறு­கின்­றது.

புத்­த­கங்கள் இறக்­கு­மதி செய்­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்கும் இந்த குழுவின் சிபா­ரிசு புத்­த­சா­சன, மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சின் ஊடாக பாது­காப்பு அமைச்­சிற்கு அனுப்­பி­வைக்­கப்­படும். பின்னர், பாது­காப்பு அமைச்சின் ஊடாக சுங்கத் திணைக்­க­ளத்­திற்கு இறக்­கு­மதி செய்­வ­தற்­கான அனு­மதி அனுப்­பி­வைக்­கப்­படும்.

எவ்­வா­றா­யினும், இந்த அறி­ஞர்கள் குழு நிய­மிக்­கப்­பட்­டதன் பின்னர் இறக்­கு­ம­திக்கு சிபா­ரிசு செய்­யப்­பட்ட எந்­த­வொரு நூல்­களும் அர­சாங்­கத்­தினால் தடை விதிக்­கப்­ப­ட­வில்லை எனவும் திணைக்­களம் குறிப்­பிட்­டது.

எனினும் பௌத்த, இந்து மற்றும் கிறிஸ்தவம் ஆகிய ச­மயங்­களில் சமயப் புத்­தங்­களை நாட்­டுக்குள் இறக்­கு­மதி செய்­வ­தற்கு பாது­காப்பு அமைச்சின் அனு­மதி பெறப்­ப­டு­வ­தில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­காகும்.

அது மாத்­தி­ர­மல்­லாமல் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட வழி­காட்டல் போன்ற எதுவும் ஏனைய சமய திணைக்­க­ளங்­களால் வெளி­யி­டப்­ப­ட­வில்லை என்­பதும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

எவ்­வா­றா­யினும் கிறிஸ்­தவ சமய நூல்கள் இறக்­கு­ம­தியின் போது தேவை­யேற்­படின் தேசிய திருவழி­பாடு கலாசார ஆணைக்குழு மற்றும் தேசிய கிறிஸ்­தவ சபை ஆகி­ய­வற்றின் ஆலோ­ச­னைகள் பெறு­வது வழமை என கிறிஸ்­தவ சமய விவ­கார திணைக்­களம் தெரி­வித்­தது.

புத்­த­சா­சன, மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்­சிற்கு சமர்ப்­பிக்­கப்­பட்ட தக­வ­ல­றியும் விண்­ணப்­பத்தின் ஊடா­கவே இந்த விடயம் ஊர்­ஜி­தப்­ப­டுத்­தப்­பட்­டது.
இந்த விடயம் தொடர்பில் புத்­த­சா­சன, மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்­சிற்கு 2022.06.02ஆம் திகதி சமர்ப்­பிக்­கப்­பட்ட தக­வ­ல­றியும் விண்­ணப்­பத்­திற்கு 2022.07.06ஆம் திகதி பதில் வழங்­கப்­பட்­டது. எனினும், இந்த அமைச்சின் கீழுள்ள முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் தகவல் அதி­காரி மற்றும் குறித்­த­ளிக்­கப்­பட்ட அதி­காரி ஆகி­யோ­ருக்கு சமர்ப்­பிக்­கப்­பட்ட தகவலறியும் கோரிக்கைக்கும், மேன் முறையீட்டுக்கும் எந்தவித பதிலும் கிடைக்கப் பெறவில்லை.

இதற்கு எதிராக 2022.07.25ஆம் திகதி தகவலறியும் ஆணைக்குழுவிடம் மேற்கொள்ளப்பட்ட மேன் முறையீட்டின் விசாரணை கடந்த நவம்பர் 17ஆம் திகதி இடம்பெற்றது.

ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேயவர்த்தன, ஆணையாளர்களான கிஷாலி பிண்டோ ஜயவர்த்தன, ஜகத் லியனாராச்சி மற்றும் ஏ.எம். நஹ்யா ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்ற இந்த விசாரணையின் போது சமூக செயற்பட்டாளரான முஹம்மத் ஹிசாமினால் கோரப்பட்ட தகவல்கள் அனைத்தும் திணைக்கள பணிப்பாளர் இப்றாஹீம் அன்சாரினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.