மாகொல முஸ்லிம் அநாதை நிலையம் : வளங்களும், சொத்துக்களும் சூறையாடப்படுகின்றதா?

0 445

எம்.எப்.எம்.பஸீர்

மாகொல முஸ்லிம் அநாதை நிலையம். இலங்­கையில் அநா­த­ர­வா­ன சிறு­வர்­களை பரா­ம­ரிக்கும் முன்­னணி நிறு­வ­னங்­களில் ஒன்றே அது. கடந்த 1962 ஆம் ஆண்டு ஒக்­டோபர் 14 ஆம் திகதி 30 மாண­வர்­க­ளோடு இந் நிலையம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. முஸ்லிம் தன­வந்­தர்கள் சிலரின் முயற்­சியின் பல­னாக இவ்­வாறு ஆரம்­பிக்­கப்­பட்ட அநாதை நிலையம், இன்று 60 வரு­டங்­களை பூர்த்தி செய்து, இலங்­கையில் முஸ்லிம் அநாதை சிறு­வர்­க­ளுக்­கான கல்விச் சேவையை தொடர்­கி­றது எனலாம்.

இவ்­வாறு 60 வருட வர­லாற்றைக் கொண்ட இந்த அநா­தைகள் நிலையம் தொடர்பில் இன்று பேசப்­படும் சில விட­யங்கள் அதிர்ச்­சி­யூட்­டு­வ­தா­கவும் கவ­லை­ய­ளிப்­ப­தா­கவும் அமைந்­துள்­ளன.

மாகொல முஸ்லிம் அநா­தைகள் நிலையம் எனும் போது, அன்­வாருல் உலூம் அரபுக் கல்­லூரி மற்றும் மள்­வானை -யதாமா பாட­சாலை ஆகிய இரண்­டையும் உள்­ள­டக்­கி­ய­தா­கவே பர­வ­லாக அறி­யப்­ப­டு­கின்­றது. இந் நிலையில் இன்று அதில் மள்­வானை யதாமா பாட­சாலை வளாகம் மற்றும் அநா­தைகள் நிலை­யத்­துக்கு சொந்­த­மான ஏனைய சொத்­துக்கள் தொடர்பில் சர்ச்­சைக்­கு­ரிய விட­யங்கள் சமூ­கத்தில் பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது.

நாடெங்கும், வக்பு சொத்­துக்­களை தனி நபர்கள் கைய­கப்­ப­டுத்தும் ஒரு போக்கு அவ­தா­னிக்­கப்­படும் பின்­ன­ணி­யி­லேயே இந்த தக­வல்கள் மிக்க அவ­தா­னிப்­புக்கு உள்­ளா­கி­யுள்­ளன.

குறிப்­பாக, மாகொல முஸ்லிம் அநா­தைகள் நிலை­யத்தின் பழைய மாண­வர்கள் சங்கம் இது தொடர்பில் மிகப் பெரும் குற்­றச்­சாட்­டுக்களை, அவ்­வ­நாதை நிலைய நடப்பு நிர்­வாக சபை மீது முன் வைத்­துள்­ளது.

இவ்­வா­றான நிலையில் கடந்த 6 ஆம் திகதி ஞாயி­றன்று, யதாமா பாட­சாலை வளாகம் அமைந்­துள்ள மள்­வானை உல­ஹிட்­டி­வ­லவில் பாரிய ஆர்ப்­பாட்டம் ஒன்றும் அச்­சங்­கத்­தினால் நிர்­வாக சபைக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

மள்­வானை அல் முபாரக் தேசிய பாட­சா­லைக்கு முன்­பாக இருந்து ஆரம்­பிக்­கப்­பட்ட இந்த ஆர்ப்­பாட்டப் பேரணி, கரா­புகஸ் சந்தி ஊடாக உல­ஹிட்­டி­வ­லவில் அமைந்­துள்ள, மாகொல முஸ்லிம் அநா­தைகள் நிலை­யத்தின் மள்­வானை கிளை வரை பேர­ணி­யாக சென்­றது. குறித்த அநா­தைகள் நிலை­யத்தில் கல்வி கற்ற பழைய மாண­வர்கள் இந்த ஆர்ப்­பாட்டத்­தை ஏற்­பாடு செய்­தி­ருந்­தனர்.

‘இலங்கை முஸ்லிம் அநா­தை­களின் எதிர்­கா­லத்தை வள­மாக்­குவோம்’ எனும் தொனிப் பொருளின் கீழ் இவ்­வார்ப்­பாட்டம் இடம்­பெற்­ற­துடன், குறித்த நிலை­யத்தின் தற்­போ­தைய நிர்­வாக சபை, குறித்த நிலை­யத்தின் சொத்­துக்­களை விற்­பனை செய்து, அந் நிலை­யத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்­வ­தாக பழைய மாண­வர்­களால் இதன்­போது குற்றம் சுமத்­தப்­பட்­டது.

குறிப்­பாக ஆயிரக் கணக்­கான மாண­வர்கள் தங்­கி­யி­ருந்து கல்வி கற்க தேவை­யான அனைத்து வலங்­க­ளையும் உள்­ள­டக்­கிய மள்­வானை – யதாமா பாட­சாலை தற்­போது மூடப்­பட்­டுள்­ளதை சுட்­டிக்­காட்டும் அதன் பழைய மாண­வர்கள் அந்த முழு வளங்­க­ளையும் வர்த்­தகர் ஒரு­வ­ருக்கு குத்­த­கைக்கு வழங்க முயற்­சிக்­க­ப்­டு­வ­தாக குற்றம் சாட்­டு­கின்­றனர். அதனால் அநா­தை­களின் சொத்­துக்­களை விற்­காதே, குத்­த­கைக்கு கொடுக்­காதே போன்ற வாச­கங்கள் ஆர்ப்­பாட்டப் பேர­ணியில் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது.

இந்த ஆர்ப்­பாட்­டதை அடுத்து ஒரு மகஜர், பழைய மாண­வர்­களால், நிர்­வாக சபைக்கு கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது. அந்த மக­ஜரில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த முக்­கிய விட­யங்­களை நாம் தரு­கின்றோம்.

‘இந் நிலையம் மாகொல, மள்­வானை என இரு கிளை­க­ளாக இயங்­கி­ய­துடன் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகும் போது சுமார் 800 மாண­வர்கள் அங்கு கல்வி நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். எனினும் துர­திஷ்­ட­வ­ச­மாக கடந்த 2008 ஆம் ஆண்டு மாகொல முஸ்லிம் அநாதை நிலை­யத்தின் அப்­போ­தைய தலை­வரும் ஸ்தாப­க­ரு­மான மர்ஹூம் ஜாபிர் ஹாஜியார் மர­ண­ம­டைந்தார். அதனைத் தொடர்ந்து இந்த அநாதை நிலைய நிர்­வாக சபையின் தலை­வ­ராக தற்­போ­தைய தலைவர் தாஸ் மொஹம்மட் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்தார்.

இந் நிலையில் புதிய நிர்­வாக சபையின் வினைத் திற­னற்ற, வெளிப்­படைத் தன்மையற்ற நிர்­வாக நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக, இன்று இந்த முன்­னணி அநா­தைகள் பரா­ம­ரிப்பு நிலை­யத்தில் வெறு­மனே 70 மாண­வர்கள் மட்­டுமே கல்வி கற்­கின்­றனர்.

அத்­துடன் 1200 இற்கும் மேற்­பட்ட மாண­வர்கள் ஒரே தட­வையில், கல்வி நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க தேவை­யான அனைத்து வச­தி­க­ளையும் கொண்ட மள்­வானை கிளை ( யதாமா பாட­சாலை) இழுத்து மூடப்­பட்­டுள்­ளது.

அதன்­படி, நாட்டில் முஸ்லிம் அநாதை சிறு­வர்­களின் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­கான மிகப் பெரும் சொத்து அழிவின் விளிம்பில் இருப்­பதை, அந் நிலை­யத்தில் கல்­வி­கற்ற பழைய மாண­வர்­க­ளா­கிய நாம் அவ­தா­னித்து கவ­லை­ய­டை­கின்றோம்.

உங்­க­ளிடம் அமா­னி­த­மாக ஒப்­ப­டைக்­கப்­பட்ட முஸ்லிம் அநா­தை­களின் கல்விச் சொத்­துக்­களை உரிய வகையில் நிர்­வாகம் செய்ய நீங்­களும் உங்கள் நிர்­வா­கமும் தவ­றி­யுள்­ள­தாக, குறித்த அநா­தைகள் நிலை­யத்தின் பழைய மாண­வர்­க­ளா­கிய நாம் உறு­தி­யாக நம்­பு­கின்றோம்.

அவ்­வா­றான நிலையில், இலங்கை முஸ்லிம் அநாதை சிறு­வர்­களின் கல்விச் சொத்தை வினைத் திற­னா­கவும், நம்­பிக்­கை­யா­கவும் வெளிப்­படைத் தன்­மை­யு­டனும் நிர்­வாகம் செய்­வ­தற்­கான புதிய நிர்­வாக குழு­வொன்றின் தேவை தற்­போது பெரிதும் உண­ரப்­பட்­டுள்­ளது.’ என அந்த மக­ஜரில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இத­னை­விட, அநாதை நிலை­யத்தின் சொத்­துக்கள் தனி நபர்­களின் பெயர்­க­ளுக்கு மாற்­றிக்­கொள்ள மிகத் திட்­ட­மிட்ட வகையில் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக பழைய மாண­வர்­களால் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. இத­னை­விட பல கோடி ரூபாக்கள், நிர்­வாக சபையில் இருந்த சிலரால் மோச­டி­யான முறையில் தமது சொந்த தேவைகள், வர்த்­தக நட­வ­டிக்­கைக்­காக பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை, அநாதை நிலை­யத்­துக்கு வரு­மானம் ஈட்டும் நோக்கில் ஆரம்­பிக்­கப்­பட்ட, கொழும்பு ஹைட் பார்க்கில் கட்­டப்­படும் கட்­டிடம் தொடர்­பிலும் சர்ச்­சைக்­கு­ரிய விட­யங்கள் தற்­போது பேசப்­ப­டு­கின்­றன. அந்த கட்­டிடம் இது­வரை கட்டி முடிக்­கப்­ப­டாத நிலையில், அதனை கட்டி முடித்து செல­வு­களை ஈடு செய்யும் வரையில் தனியார் நிறு­வனம் ஒன்­றுக்கு கைய­ளிப்­பது தொடர்பில் பேசப்­பட்­டுள்­ள­தா­கவும் பழைய மாண­வர்கள் குற்றம் சுமத்­து­கின்­றனர்.

இவ்­வாறு அநாதைச் சிறு­வர்­களின் சொத்­துக்கள், தனி நபர்­களின் தேவைக்­காக கைமாற்­றப்­ப­டு­கி­றது என்­பதே பழைய மாண­வர்­களின் மிகப் பெரும் குற்­றச்­சாட்­டாகும்.
இது தொடர்பில் விடி­வெள்ளி, மாகொல முஸ்லிம் அநா­தைகள் நிலை­யத்தின் தற்­போ­தைய நிர்­வாக சபை தலைவர் தாஸ் மொஹம்­மட்­டிடம் வின­வி­யது.

அதற்கு பதி­ல­ளித்த அவர், ‘குற்­றச்­சாட்­டுக்கள் முழு­மை­யாக ஆதா­ர­மற்­றவை. மாண­வர்கள் குறைந்­ததன் விளை­வாக நாம், முதலில் மாகொல அன்­வாருல் உலூம் அரபுக் கல்­லூ­ரியில் இருக்கும் மாண­வர்­களை மள்­வா­னைக்கு அழைத்து வந்து, அரபுக் கல்­லூ­ரி­யையும் மள்­வா­னை­யி­லேயே நடத்த திட்­ட­மிட்டோம். எனினும் அதற்கு எதிர்ப்­புகள் உரு­வா­கின. எனவே பேச்சுவார்த்தை ஊடாக இறு­தியில் மள்­வா­னையில் இருந்த மாண­வர்­களை மாகொ­லைக்கு அழைத்து சென்றோம். அங்கு கற்றல் நட­வ­டிக்­கைகள் உரி­ய­வாறு நடக்­கி­றது.

அத்­துடன் மள்­வானை யதாமா பாட­சாலை வளா­கத்தை குறைந்த தொகை­யொன்­றுக்கு குத்­த­கைக்கு விட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. இது உண்­மைக்கு புறம்­பா­னது. மூன்றாம் தரப்­புடன் இணைந்து பாட­சா­லையை மீள ஆரம்­பித்து வெற்­றி­க­ர­மாக நடாத்தும் நோக்கில் பேச்­சுக்கள் நடைபெறு­கின்­றன. இன்னும் இறுதித் தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வில்லை.

அநாதை சிறு­வர்­க­ளுக்­காக என கொடுக்­கப்­பட்­டுள்ள சொத்­துக்­களில் எவ்­வாறு, மூன்றாம் தரப்­பையும் இணைத்­த­வாறு நவீனமயப்­ப­டுத்­தப்­பட்ட பாட­சாலை கட்­ட­மைப்பை உரு­வாக்கி முன்­னெ­டுத்துச் செல்ல முடியும் என்­ப­தற்கு மார்க்க அடிப்­ப­டை­யி­லான ஆலோ­ச­னை­களைப் பெற்­றுக்­கொள்ள நாம் அகில இலங்கை ஜம்இய்­யதுல் உலமா சபையை நாடி இருக்­கின்றோம். அவர்­களின் ஆலோ­சனை இன்னும் கிடைக்­க­வில்லை. அந்த ஆலோ­சனை கிடைக்கும் வரையில் நாம் அவ்­வா­றான திட்­ட­மொன்­றினை செயற்­ப­டுத்தப் போவ­தில்லை.

அத்­துடன் பழைய மாண­வர்கள் சங்­கத்­துக்கும் நிர்­வாக சபைக்கும் இடையே போது­மான தொடர்­பா­டல்கள் இல்­லா­மையால், தவ­றான தக­வல்கள் அவர்­க­ளி­டையே பர­வி­யுள்­ளன. தவ­றான தக­வல்­களை அடிப்­ப­டை­யாக கொண்டு அவர்கள் குற்றம் சுமத்­து­கின்­றனர். எனினும் இந்த அனைத்து விட­யங்கள் தொடர்­பிலும் அவர்­க­ளுடன் முழு­மை­யாக பேச நான் தயா­ரா­கவே இருக்­கின்றேன்.

அத்­துடன் நிர்­வாக சபையில் இருந்த எவ­ராலும் பணம் மோசடி செய்­யப்­பட்­ட­தாக கூறப்­படும் சம்­பவம் உண்­மைக்கு புறம்­பா­னது. எனினும் நிர்­வாக சபையின் முடி­வுக்கு அமைய, முத­லீடு செய்­யப்­பட்ட ஒரு தொகை பணம் வர்த்­தகர் ஒரு­வரால் மோசடி செய்­யப்­பட்­டுள்­ளது. அந்த பணத்தை மீளப் பெற்­றுக்­கொள்ள நட­வ­டிக்­கைகள் தொடர்ந்தும் இடம்­பெ­று­கின்­றன.

அத்­துடன், இந்த நிர்­வாக சபையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்­கப்­பட்­டுள்­ளது. எவ்­வா­றா­யினும் நானும் சில நாட்க­ளாக இது விட­ய­மாக சிந்­தித்து வரு­கின்றேன். நிர்­வாக சபை­யி­லி­ருந்து செல்­வ­தானால், இதன் நிர்­வா­கத்தை பொருத்­த­மான ஒரு­வ­ரிடம் நான் ஒப்­ப­டைக்க வேண்டும். என்­னிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட அமா­னி­தத்தை பாது­காக்கும் ஒரு­வ­ரிடம் ஒப்­ப­டைக்க வேண்டும். எனவே பொருத்­த­மான நிர்­வாக சபை­யினை தெரிவு செய்யும் வித­மாக, ஜம் இய்­யதுல் உல மா சபை, ஏனைய பிர­பல முஸ்லிம் சமூக அமைப்­புக்­களை ஒன்று திரட்டி அவர்­களின் பங்­க­ளிப்­போடு ஒரு நிர்­வாக சபையை தெரிவு செய்­வது தொடர்­பிலும் நான் அவ­தானம் செலுத்தி அது குறித்து சிந்­தித்து வரு­கின்றேன்.

எனினும் அநா­தை­களின் எந்த சொத்தும் யாருக்கும் விற்­கப்­ப­ட­வில்லை என்­பதில் நான் உறு­தி­யாக இருக்­கின்றேன்.

நாம் மள்­வானை பாட­சா­லையை அநாதை சிறு­வர்­க­ளுக்கு முத­லிடம் அளித்தே, சிறந்த முறையில் நடாத்திச் செல்ல திட்­ட­மிட்டு இஸ்­மாயீல் ஹாஜி­யாரை அணுகினோம். இது நிர்­வாக சபை­யி­னரின் முடி­வுக்கு அமைய எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்கை. எனினும் அந்த திட்டம் குறித்த ஒப்­பந்தம் கூட இன்னும் பூர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை.. ‘ என தெரிவித்தார்.
இந் நிலையில், மள்­வானை – யதாமா பாட­சா­லையை, குத்­த­கைக்கு பெற்­றுக்­கொள்ளப் போவ­தாக பழைய மாண­வர்­களால் குற்றம் சாட்­டப்­படும், யதாமா பாட­சாலை வளா­கத்­துடன் ஒட்­டி­ய­தாக வசிக்கும் இஸ்­மாயில் ஹாஜி­யா­ரி­டமும் விடி­வெள்ளி இது தொடர்பில் வின­வி­யது.

இதன் போது விடி­வெள்­ளி­யிடம் பேசிய அவர், யதாமா பாட­சாலை அண்மைக் கால­மாக மூடப்­பட்­டுள்ள நிலையில், அப்­பா­ட­சா­லையை ஆங்­கில மொழி மூல­மான சர்­வ­தேச பாட­சா­லை­யாக முன்­னெ­டுத்து செல்லும் நோக்கில், மாகொல முஸ்லிம் அநாதை நிலைய நிர்­வாக சபை­யுடன் இணைந்து செயற்­ப­ட­வுள்­ள­தாக இதன்­போது குறிப்­பிட்டார்.

‘மாகொல அநாதை நிலைய நிர்­வாக சபை கேட்­டுக்­கொண்­ட­தற்­க­மை­யவே நாம் இவ்­வி­வ­கா­ரத்தில் தலை­யீடு செய்தோம். எமது தரப்பில் ஐந்து பேரும் மாகொல முஸ்லிம் அநா­தைகள் நிலைய நிர்­வாக தரப்பில் 3 பேரும் இருக்கும் வண்­ண­மான ஒரு குழு ஊடாக இந்த பாட­சாலை நிர்­வாகம் செய்­யப்­படும். இது­வரை ஒப்­பந்தம் கைச்சாத்­தி­டப்­ப­ட­வில்லை. ஒப்­பந்­ததில் உள்­ள­டக்க வேண்­டி­ய­ வி­ட­யங்கள் தொடர்பில் பேசப்­ப­டு­கின்­றன. இப்­பா­ட­சா­லையில், அநாதை சிறு­வர்­க­ளுக்கே முன்­னி­ரிமை அளிக்­கப்­படும். மேல் மிச்சமாகவே ஏனையோர் சேர்க்கப்படுவர், இவ்வாறு ஆரம்பிக்கபப்டும் பாடசாலையில் இருந்து கிடைக்கும் வருமானத்தை நாம் எவரும் பெற்­றுக்­கொள்­வ­தில்லை என முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அந்த வரு­மானம் பாட­சா­லையின் அபி­வி­ருத்தி மற்றும் இத­னை­யொத்த மேலும் சில பாட­சா­லை­களை அமைப்­ப­தற்­காக பயன்­ப­டுத்­தப்­படும். இவ்­வாறு நாடெங்கும் ஆங்­கில மொழி மூல­மாக 10 முதல் 15 பாட­சா­லை­களை அமைப்பதே எமது இலக்காகும்.’ என தெரிவித்தார். அத்துடன் மாகொல முஸ்லிம் அநாதை நிலைய பழைய மாணவர்களின் எதிர்ப்பு, அதன் நிர்வாக சபையுடனான விவகாரத்தை மையப்படுத்தியது என சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அநாதை நிலைய நிர்வாக சபை மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளுக்கு செல்ல முடியும் என்றும் குறிப்பிட்டார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.