ஐக்கிய நாடுகள் சபை மற்றும் கட்டார் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து

0 660

கட்­டாரில் நான்கு புதிய ஐக்­கிய நாடுகள் சபையின் அலு­வ­ல­கங்­களை தாபிப்­பது உள்­ளிட்ட உலக நிறு­வ­னத்­திற்கும் மத்­திய கிழக்கு நாட்­டிற்கும் இடை­யே­யான ஒத்­து­ழைப்பைப் பலப்­ப­டுத்தும் வகையில் தோஹா போரத்­திற்கு ஒருங்­கி­சை­வாக ஐக்­கிய நாடுகள் சபையின் பங்­கு­டை­மை­களில் இணைந்து கட்டார் கைச்­சாத்­திட்­டுள்­ளது.

கனிஷ்­ட­நிலை தொழில்­வாண்மை நிகழ்ச்­சித்­திட்ட உரு­வாக்கம், ஐக்­கிய நாடுகள் சபையின் முக­வ­ர­கங்­க­ளுக்கு குறித்­து­ரைக்­கப்­ப­டாத செயற்­பா­டு­க­ளுக்கு ஐநூறு மில்­லியன் அமெ­ரிக்க டொலர் நிதிப் பங்­க­ளிப்­பினை பல ஆண்­டு­க­ளுக்கு வழங்­குதல் உள்­ளிட்ட இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்­புக்­கான புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை ஐக்­கிய நாடுகள் சபைக்கும் கட்­டா­ருக்கும் இடையே கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

இது தவிர ஐக்­கிய நாடுகள் அபி­வி­ருத்தி நிகழ்ச்சித் திட்­டத்­துடன்; (யூ.என்.டி.பி.) ஒரு உடன்­ப­டிக்­கை­யி­னையும், ஐக்­கிய நாடுகள் சபையின் பயங்­க­ர­வாத ஒழிப்பு அலு­வ­ல­கத்­துடன் ஒரு உடன்­ப­டிக்­கை­யி­னையும் தோஹா செய்­து­கொண்­டுள்­ளது. கட்­டாரில் யுனிசெப் அமைப்பின் அலு­வ­லகம், புலம்­பெ­யர்­வுக்­கான சர்­வ­தேச அமைப்­பிற்­கான அலு­வ­லகம், ஐக்­கிய நாடுகள் அக­தி­க­ளுக்­கான உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யத்­திற்­கான அலு­வ­லகம், ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமை விவ­கா­ரங்­க­ளுக்­கான இணைப்பு அலு­வ­லகம் ஆகிய நான்கு அலு­வ­ல­கங்­களும் திறக்­கப்­ப­ட­வுள்­ளன.

இவ்­வொப்­பந்­தங்கள் தோஹா போரத்­திற்கு ஒருங்­கி­சை­வாக கட்டார் வெளிநாட்டமைச்சர் செய்க் மொஹமட் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் ஆகியோருக்கிடையே கைச்சாத்திடப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.