(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை முன்னாள் நீதியமைச்சர் அலிசப்ரியினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி சப்ரி ஹலீம் தீன் தலைமையிலான குழுவிற்கு அறிக்கையொன்றினைச் சமர்ப்பித்துள்ளது.
மாற்றுக்கொள்கைகளைக் கொண்டுள்ள உலமாக்களும் இவ்வறிக்கைக்கு உடன்பட்டுள்ளனர். எனவே காலம் தாழ்த்தப்படாது சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளப்படவேண்டும் என அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் தெரிவித்தார்.
மேலும் இத்திருத்தங்கள் தொடர்பில் சட்ட ஆக்கம் தொடர்பாக விசேட அறிவு மற்றும் அனுபவமுள்ளவர்களே கருத்துகளை வெளியிடவேண்டும் அன்றி சமூக வலைத்தளங்களில் எவ்வித அனுபவம், அறிவு இல்லாதவர்கள் விரும்பியபடி கருத்து தெரிவிப்பது தவிர்க்கப்படவேண்டுமென அவர் கூறினார்.
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பிலான உலமா சபையின் நிலைப்பாடு பற்றி வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் விபரிக்கையில்,
முஸ்லிம் பெண்களின் திருமண வயது 18 ஆக அதிகரிக்கப்படவேண்டும். 16 –18க்கும் இடைப்பட்ட பெண்களின் திருமணம் காதிநீதவானின் அனுமதி பெற்றே பதிவு செய்யப்படவேண்டும். பெண்கள் நியாயசகாயர்களாக நியமிக்கப்பட வேண்டும். மத்ஹபுகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
திருமணப்பதிவு கட்டாயமாக்கப்பட வேண்டும். நிக்காஹ் மாத்திரம் செய்து கொண்டு தாமதித்து விவாக பதிவு மேற்கொள்ளும்போது அபராதமும் அறவிடப்படவேண்டும். மணப்பெண்ணின் கையொப்பம் திருமணப்பதிவில் கட்டாயமாக்கப்படவேண்டும். வொலியின் அனுமதி அவசியம் என்றாலும் மணப்பெண் விரும்பினால் வொலியின் அனுமதி தேவையற்றதாக்கப்படலாம்.
பலதார திருமணம் நிபந்தனைகளுடன் அனு-மதிக்கப்படவேண்டும். அனுமதியின்போது காதிநீதவான் மணமகனின் பொருளாதார வசதியினைக் கருத்திக்கொள்ள வேண்டும். மத்தாஹ் கொடுப்பனவு உள்ளடக்கப்பட வேண்டும் எனும் திருத்தங்களுக்கு அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையும்,மாற்றுக் கொள்கைகளைக் கொண்ட உலமாக்களும் அனுமதி வழங்கியிருக்கிறார்கள் என்றார்.- மேற்கொள்ளப்படவேண்டும் என அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் தெரிவித்தார்.
மேலும் இத்திருத்தங்கள் தொடர்பில் சட்ட ஆக்கம் தொடர்பாக விசேட அறிவு மற்றும் அனுபவமுள்ளவர்களே கருத்துகளை வெளியிடவேண்டும் அன்றி சமூக வலைத்தளங்களில் எவ்வித அனுபவம், அறிவு இல்லாதவர்கள் விரும்பியபடி கருத்து தெரிவிப்பது தவிர்க்கப்படவேண்டுமென அவர் கூறினார்.
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பிலான உலமா சபையின் நிலைப்பாடு பற்றி வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் விபரிக்கையில்,
முஸ்லிம் பெண்களின் திருமண வயது 18 ஆக அதிகரிக்கப்படவேண்டும். 16 –18க்கும் இடைப்பட்ட பெண்களின் திருமணம் காதிநீதவானின் அனுமதி பெற்றே பதிவு செய்யப்படவேண்டும். பெண்கள் நியாயசகாயர்களாக நியமிக்கப்பட வேண்டும். மத்ஹபுகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
திருமணப்பதிவு கட்டாயமாக்கப்பட வேண்டும். நிக்காஹ் மாத்திரம் செய்து கொண்டு தாமதித்து விவாக பதிவு மேற்கொள்ளும்போது அபராதமும் அறவிடப்படவேண்டும். மணப்பெண்ணின் கையொப்பம் திருமணப்பதிவில் கட்டாயமாக்கப்படவேண்டும். வொலியின் அனுமதி அவசியம் என்றாலும் மணப்பெண் விரும்பினால் வொலியின் அனுமதி தேவையற்றதாக்கப்படலாம்.
பலதார திருமணம் நிபந்தனைகளுடன் அனு-மதிக்கப்படவேண்டும். அனுமதியின்போது காதிநீதவான் மணமகனின் பொருளாதார வசதியினைக் கருத்திக்கொள்ள வேண்டும். மத்தாஹ் கொடுப்பனவு உள்ளடக்கப்பட வேண்டும் எனும் திருத்தங்களுக்கு அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையும்,மாற்றுக் கொள்கைகளைக் கொண்ட உலமாக்களும் அனுமதி வழங்கியிருக்கிறார்கள் என்றார்.- Vidivelli