உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய 81 பேர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் தடுத்து வைப்பு

0 275

(றிப்தி அலி)
சர்ச்­சைக்­கு­ரிய பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் 125 பேர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பயங்­க­ர­வாத தடுப்புப் பிரிவு அறி­வித்­துள்­ளது. இதில் 81 பேர் கடந்த 2019ஆம் ஆண்டு நடை­பெற்ற ஈஸ்டர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­த­லு­டனும், 44 பேர் விடு­தலைப் புலி­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற குற்­றச்­சாட்டில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர் என அப்­பி­ரிவு தெரி­வித்­தது.
49 பேர் நீதவான் நீதி­மன்­றத்தின் உத்­த­ரவின் பேரிலும், 76 பேர் மேல் நீதி­மன்­றத்தின் உத்­த­ரவின் பேரிலும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இதற்கு மேல­தி­க­மாக, பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 9 ஆவது பிரிவின் 1ஆவது உப பிரிவின் கீழ் ஈஸ்டர் தற்­கொலை தாக்குதல் மற்றும் விடு­தலைப் புலி­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற குற்­றச்­சாட்டில் இருவர் மாத்­தி­ரமே தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர் என பயங்­க­ர­வாத தடுப்புப் பிரிவு குறிப்­பிட்­டது.

சர்ச்­சைக்­கு­ரிய பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்து­ வைக்­கப்­பட்­டுள்ள மற்றும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களின் எண்­ணிக்­கை­யினை வெளி­யி­டு­மாறு மனித உரி­மைகள் ஆர்­வ­ல­­ரான அம்­பிகா சற்­குணநாதன் தகவல­றியும் விண்­ணப்­ப­மொன்­றினை 2021.07.19ஆம் திகதி பொலிஸ் திணைக்­க­ளத்­திற்கு சமர்ப்­பித்­தி­ருந்தார்.
எனினும் குறித்த விண்­ணப்பம் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­மை­யினால் கடந்த ஜன­வரி 24ஆம் திகதி தக­ல­றியும் உரி­மைக்­கான ஆணைக்­கு­ழுவில் மேன் முறை­யீடு செய்­தி­ருந்தார்.
இந்த மேன் முறை­யீட்­டினை ஆராய்ந்த ஆணைக்­குழு, குறித்த தக­வலை நவம்பர் 3 ஆம் திக­திக்கு முன்னர் வழங்­கு­மாறு உத்­த­ர­விட்­டி­ருந்­தது. இதற்­க­மைய, பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையினை பொலிஸ் திணைக்களத்தின் கீழுள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.