உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விவகாரம்: கைது செய்யப்பட்டோர் சட்டமா அதிபரின் ஆலோசனையில் விடுவிப்பு

பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

0 263

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழு­வினால் முன்­வைக்­கப்­பட்ட பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­தாமல், சட்­டமா அதிபர் திணைக்­க­ள­மா­னது அரச அதி­கா­ரிகள் தேவைக்கு ஏற்ப செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது. இது சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் சுயா­தீன தன்­மைக்கு அவ­மா­ன­மாகும் என்று பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் ஆண்­டகை தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள அறிக்­கையின் ஏனைய தொகு­தி­க­ளையும் மக்­க­ளுக்கு பகி­ரங்­கப்­ப­டுத்­து­மாறும் , அதில் பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்ள நபர்­க­ளுக்கு எதி­ராக சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறும் அர­சாங்­கத்­தையும் , சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தையும் மீண்டும் வலி­யு­றுத்­து­வ­தா­கவும் பேராயர் குறிப்­பிட்­டுள்ளார்.
கொழும்பு – பொர­ளை­யி­லுள்ள பேராயர் இல்­லத்தில் நேற்று செவ்­வாய்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் , அருட்­தந்தை சிறில் காமி­னி­யினால் பேரா­யரின் விசேட அறி­வித்தல் வாசிக்­கப்­பட்­டது. அந்த அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. அதில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டி­ருப்­ப­தா­வது :

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்பில் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் சட்­டமா அதி­பரின் ஆலோ­ச­னைக்­க­மைய விடு­தலை செய்­யப்­ப­டு­கின்­றமை மக்­களை முட்­டாள்­க­ளாக்கும் செயற்­பா­டாகும். சட்­டமா அதிபர் திணைக்­க­ள­மா­னது , உயிர்த்த ஞாயிறு தொடர்­பான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை செயற்­ப­டுத்­து­வ­தற்கு பதி­லாக, அர­சாங்­கத்தின் தேவைக்கு ஏற்ப செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­ற­மையை கண்­டிக்­கின்றோம்.

இந்த நிலை­மை உண்­மையில் துர­திஷ்­ட­வ­ச­மா­ன­தாகும். இது சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் நீதிக்கும் , அதன் சுயா­தீனத் தன்­மைக்கும் அவ­மா­ன­மாகும். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்பில் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டி­ய­வர்கள் தொடர்பில் ஆணைக்­குழு பரிந்­து­ரைத்­துள்­ள­வற்றை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தி­லி­ருந்து சட்­டமா அதிபர் திணைக்­களம் ஒதுங்­கி­யுள்­ளமை ஏற்றுக் கொள்ள முடி­யா­த­வொரு விட­ய­மாகும்.

அதே போன்று முன்னாள் ஜனா­தி­ப­தி­யிடம் வழங்­கப்­ப­ட­வி­ருந்த சாட்­சிகள் அடங்­கிய ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை பொது மக்­க­ளிடம் மறைக்­கப்­ப­டு­வ­தா­னது , உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்­பான உண்­மை­க­ளையும் மறைக்கும் செயற்­பா­டாகும். இவ்­வாறு மறைக்­கப்­பட்­டுள்ள அறிக்­கையின் ஏனைய தொகு­தி­களை உட­ன­டி­யாக மக்­க­ளுக்கு பகிரங்கப்படுத்துமாறும், இந்த தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை நிலைநாட்டுமாறும் அரசாங்கத்திடமும் , சட்டமா அதிபர் திணைக்களத்திடமும் கேட்டுக் கொள்கின்றோம்.’ என்று இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.