அவ்லியா மலைப் பள்ளியில் நடந்தது என்ன?

0 624

ஏ.ஆர்.ஏ.பரீல்

முஸ்­லிம்கள் நாம் சமா­தா­னத்தை விரும்­பு­ப­வர்கள். நாட்டின் ஏனைய இன மக்­க­ளுடன் புரிந்­து­ணர்­வு­டனும் நல்­லி­ணக்­கத்­து­டனும் வாழு­ப­வர்கள் என்று நமக்கு நாமே மார்­தட்­டிக்­கொள்­கிறோம்.

இவை­யெல்லாம் வெறும் கண்­து­டைப்பா? என்று இப்­போது எண்ணத் தோன்­று­கி­றது. அண்­மைக்­கால சில நிகழ்­வுகள் இதனை நிரூ­பிக்­கின்­றன.
சமா­தா­னத்­தையும் கரு­ணை­யையும் சகோ­த­ரத்­து­வத்­தையும் போதிக்கும் இவற்­றுக்கு சின்­ன­மாகத் திகழும் பள்­ளி­வா­சல்­களில் கம்பு, தடிகள், இரும்புக் கம்­பிகள் கொண்டு எம்­ம­வர்­களே ஒரு­வ­ருக்­கொ­ருவர் தாக்­கிக்­கொள்ளும் துர்ப்­பாக்­கிய நிலை சமூ­கத்­துக்குள் உரு­வா­கி­யி­ருக்­கின்­றமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

இவ்­வா­றான ஒரு நிலைமை கடந்த ஒக்­டோ­பர் 26 ஆம் திகதி இரவு சுமார் 7.30 மணி­ய­ளவில் காலி, கிந்­தோட்­டையில் அமைந்­துள்ள அவ்­லியா மலைப்­பள்­ளி­வா­சலில் ஏற்­பட்­டுள்­ளது. கடற்­க­ரைக்கு அண்­மித்து அழ­கான சூழலில் அமை­யப்­பெற்­றி­ருப்­பதே அவ்­லியா மலைப்­பள்­ளி­யாகும். இங்கு முஹம்மத் வலி­யுல்­லாஹ்வின் ஸியாரம் அமையப் பெற்­றுள்­ளது. இந்த ஸியாரம் சுமார் 1700 வருட காலம் பழை­மை­யா­னது எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அவ்­லியா மலைப்­பள்­ளி­வா­சலின் நிர்­வாகம் அப்­பள்­ளி­வா­ச­லுக்கு சுமார் 800 மீற்­றர்­க­ளுக்கு அப்பால் இருக்கும். மீரான் ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தி­னா­லேயே நிர்­வ­கிக்­கப்­பட்­டு வரு­கி­றது.

அண்­மையில் அவ்­லியா மலைப்­பள்­ளி­வா­சலில் மசூரா மூலம் தீர்த்­துக்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய கருத்து முரண்­பா­டு­க­ளுடன் கூடிய பிரச்­சி­னை­யொன்று அப்­ப­கு­தி­யி­லுள்ள பன்­ச­லை­வரை சென்று தற்­கா­லி­க­மாக சமா­தானம் செய்து வைக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இரு­த­ரப்­பு­க­ளுக்­கி­டையில் கைக­லப்பு
இந் நிலை­யில்தான் கடந்த ஒக்­டோ­பர் மாதம் 26 ஆம் திகதி இரவு சுமார் 7.30 மணி­ய­ளவில் அவ்­லியா மலைப்­பள்­ளி­வா­சலில் இரு தரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் உரு­வான மோதல் கைக­லப்பில் முடிந்து 12 பேர் காலி கரா­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்­சை­களின் பின்பு வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்தும் வீடு­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டனர். இச்­சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் எனச் சந்­தே­கிக்­கப்­படும் நால்வர் காலி பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்டு காலி நீதவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டனர். நீதவான் குறிப்­பிட்ட நால்­வ­ரையும் சரீர பிணையில் விடு­வித்தார்.

இரு­த­ரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் கைக­லப்பு இடம்­பெற்ற வேளை பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கப்­பட்­ட­தை­ய­டுத்து ஸ்தலத்­துக்கு விஜயம் செய்த பொலி­ஸாரே சந்­தேக நபர்கள் நால்­வ­ரையும் கைது செய்­தனர்.

கடந்த 26ஆம் திகதி இரவு சுமார் 7.30 மணி­ய­ளவில் சூபி முஸ்­லிம்கள் பள்­ளி­வாசல் வளா­கத்தில் கொடி­யேற்­றி­ய­போது அங்கு வருகை தந்­தி­ருந்த பெரும் எண்­ணிக்­கை­யி­லான தெளஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்­த­வர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரி­வித்­தார்கள். கொடி­யேற்ற வேண்டாம் என்­றார்கள். நாங்கள் ஏற்­றிய கொடியை இறக்­கு­வ­தற்கு மறுத்தோம். இந்­நி­லையில் இரு­த­ரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் கைக­லப்பு ஏற்­பட்­டது. நாங்கள் சிறிய எண்­ணிக்­கை­யா­னோரே இருந்தோம். நாங்கள் 7 பிள்­ளைகள் உட்­பட 12 பேரும் பெண்கள் சுமார் 20 பேரும் இருந்தோம். தெளஹீத் ஜமா அத்தைச் சேர்ந்­த­வர்கள் சுமார் 100 பேர் வரை இருந்­தார்கள் என கொடி­யேற்­றத்தில் ஈடு­பட்­ட­ தரப்பைச் சேர்ந்த முஸ்லிம் அப்­துல்லாஹ் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

மேலும் அவர் தெரி­விக்­கையில், நானும் தாக்­கப்­பட்டு காயங்­க­ளுக்கு உள்­ளானேன். எனது மகன் உட்­பட உற­வி­னர்கள் காயங்­க­ளுக்­குள்­ளாகி கராப்­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டார்கள். அவர்கள் இரு தினங்­களில் சிகிச்­சையின் பின்பு வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்தும் வெளி­யே­றி­னார்கள் என்றார்.

தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் இரு தரப்­பி­னரும் ஒருவ­ருக்­கொ­ரு­வர் குற்றம் சுமத்திக் கொள்­கின்­றனர். யார் தாக்­குதல் மேற்­கொண்­டார்கள்? யார் தாக்­கப்­பட்­டார்கள்? என்­பதை பாது­காப்பு பிரி­வி­னரே விசா­ர­ணையின் பின்பு கண்­ட­றிய வேண்டும்.

முஸ்லிம் அப்துல்லாஹ் தொடர்ந்தும் தெரிவிக்கையில், இப்­பள்­ளி­வா­சலில் நாங்கள் 18 வரு­ட­கா­ல­மாக கொடி­யேற்றி வரு­கிறோம். தற்­போது கொடி­யேற்­றத்­துக்கு தடை­வி­திக்­கி­றார்கள். முஸ்­லிம்கள் எங்­க­ளுக்கு பிரி­வுகள் தேவை­யில்லை. சம்­பி­ர­தாய முஸ்­லிம்­க­ளான சூபி முஸ்­லிம்கள் எங்கள் பள்­ளியைப் பிடிப்­ப­தற்கு வரு­கி­றார்கள் என அவர்கள் எங்கள் மீது குற்றம் சுமத்­து­கி­றார்கள். நாங்கள் பள்­ளியை பிடிப்­ப­தற்கு செல்­ல­வில்லை. எமது சம்­பி­ர­தாய மார்க்கக் கட­மை­களை நிறை­வேற்­று­வற்­கா­கவே பள்­ளி­வா­ச­லுக்குச் செல்­கிறோம். இந்த தாக்­கு­தலில் எமது வேனும் தாக்­கப்­பட்­டுள்­ளது. அதற்­கான சேதம் 2 ½ இலட்சம் ரூபா என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது என்றார்.

பன்­ச­லையில் ஏற்­க­னவே தீர்த்­து­வைக்­கப்­பட்ட பிணக்கு
அவ்­லியா மலைப்­பள்­ளி­வா­சலில் இரு தரப்­பி­ன­ரி­டையே நிலவி வந்த பிணக்கு ஏற்­க­னவே அப்­பி­ர­தேச பன்­ச­லையில் தீர்த்து வைக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.
கொடி­யேற்றம் மற்றும் சம்­பி­ர­தாய நிகழ்­வுகள் தொடர்பில் பள்­ளி­வா­சலில் இரு தரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் பிரச்­சி­னைகள் உரு­வா­கி­ய­போது அது ஏற்­க­னவே கிந்­தோட்டை துன்­மஹல் விகா­ரையில் விகாராதி­பதி வீர­கெட்­டிய சஞ்­சய தேர­ரினால் தீர்த்து ­வைக்­கப்­பட்­டி­ருந்­தமை கவ­னத்­திற்­கொள்­ளப்­பட வேண்­டி­ய­தாகும். வீரக்­கெட்­டிய சஞ்­சய தேரர் இரு தரப்­பி­ன­ரையும் பன்­ச­லைக்கு அழைத்து பிரச்­சினை தொடர்பில் விசா­ரணை நடத்தி இரு­த­ரப்­பி­ன­ருக்கும் அறி­வுரை வழங்­கி­யி­ருந்தார்.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் அவ்­லியா மலைப்­பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் முன்னாள் உறுப்­பினர் ஒருவர் தெரி­விக்­கையில், ‘ஒரு பிரி­வினர் சில காலங்­க­ளுக்கு முன்பு அவ்­லியாமலைப் ­பள்ளிவாச­லுக்கு வந்து தமது சமய வழி­பா­டு­களை நடாத்­து­வ­தற்கு அனு­மதி கேட்­டார்கள்.

அவர்­க­ளுக்கு கிழ­மைக்கு ஒரு நாள் அனு­மதி வழங்­கப்­பட்­டது. பின்பு அதனை அவர்­க­ளா­கவே கிழ­மைக்கு இரண்டு நாட்­க­ளாக அதி­க­ரித்­துக்­கொண்­டார்கள். ஒவ்­வொரு மாதமும் கொடி­யேற்­று­வார்கள். இதனால் முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன. பிணக்­குகள் பல தட­வைகள் தீர்த்து வைக்­கப்­பட்­டுள்­ளன. காலி பொலிஸ் நிலை­யத்­திலும் பல தட­வைகள் முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

இரு தரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைக்க நாம் பன்­ச­லைக்கு அழைக்­கப்­பட்டோம். அக்­கு­ழு­வி­னரும் வருகை தந்­தி­ருந்­தார்கள். பெண்­களும் வந்­தி­ருந்­தார்கள். இரு தரப்­பி­னரும் சண்­டை­யிட்டுக் கொள்­வ­தில்லை என்று புனித குர்­ஆனை சாட்­சி­யாக வைத்து உறுதி பூணுங்கள் என்று பன்­ச­லையின் பிர­தம குரு வீர­கெட்­டிய சஞ்­சய தேரர் சமா­தா­னப்­ப­டுத்தி வைத்தார்.

இவ்­வாறு சமா­தானம் செய்து வைக்­கப்­பட்டு இரு­வா­ரங்­களின் பின்பே இரு தரப்­பி­னரும் பள்­ளி­வா­சலில் கொடி­யேற்றும் விவ­கா­ரத்தில் முரண்­பட்டுக் கொண்டு அடி­த­டியில் ஈடு­பட்­டுள்­ளனர். இவ்­வா­றான நிலைமை இன்­றைய சூழலில் முஸ்லிம் சமூ­கத்­துக்குப் பெரும் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது. பள்­ளி­வா­சல்­களை மையப்­ப­டுத்தி மீண்டும் அடிப்­ப­டை­வாதம் தலை தூக்­கு­வ­தாக உள­வுப்­பி­ரிவு கருதும் அள­வுக்கு நிலைமை மோச­மா­கி­யுள்­ளது.

வக்பு சபை­யிலும் விசா­ரணை
அவ்­லியா மலைப்­பள்­ளி­வா­சலில் சமய நிகழ்­வுகள் தொடர்­பான விசா­ர­ணைகள் வக்பு சபை­யிலும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. பள்­ளி­வா­சலில் தமது பாரம்­ப­ரிய சமய வழி­பா­டு­க­ளுக்கு பள்­ளி­வாசல் நிர்­வாக சபை தடை­வி­திப்­ப­தாக பாரம்­ப­ரிய முஸ்­லிம்கள் வக்பு சபையில் முறை­ப்பாடு செய்­துள்­ளனர்.

கடந்த 27 ஆம் திகதி இப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு வழங்­கு­வ­தற்கு வக்பு சபை தீர்­மா­னித்­தி­ருந்­தது. என்­றாலும் பள்­ளி­வா­சலில் இடம்­பெற்ற கைக­லப்­பினைத் தொடர்ந்து ஒரு தரப்பு 27 ஆம் திக­திய விசா­ர­ணையில் கலந்து கொள்­ள­வில்லை. இத­னை­ய­டுத்து விசா­ரணை எதிர்­வரும் 22 ஆம் திக­திக்கு ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.

அவ்­லியா மலைப்­பள்ளி மஹல்­லா­வாசி ஒருவர்
அவ்­லியா மலைப்­பள்­ளி­வாசல் கொடி­யேற்­றத்­தின்­போது ஏற்­பட்ட அசம்­பா­வி­தங்கள் தொடர்பில் அவ்­லியா மலைப்­பள்ளி மஹல்­லா­வா­சி­யொ­ரு­வரைத் தொடர்பு கொண்டு விடி­வெள்ளி தக­வல்­களைச் சேக­ரித்­தது. பெயர் குறிப்­பி­ட­வி­ரும்­பாத மஹல்­லா­வாசி விளக்­க­ம­ளிக்­கையில், பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தில் பல்­வேறு கொள்­கை­களைக் கொண்­ட­வர்கள் கலந்து இருக்­கி­றார்கள். இப்­பள்­ளி­வா­சலில் மெள­லூது ஓதுதல், கொடி­யேற்றம் போன்ற விவ­கா­ரங்­களில் தொடர்ந்து முரண்­பா­டுகள் நிலவி வரு­கின்­றன.
முஹர்ரம் மாதத்­திற்­கா­க ஊர் ஜமா அத்­தார்­களே கொடி­யேற்­றி­னார்கள். வைப­வத்தில் பள்­ளி­வாசல் நிர்­வா­கமும் கலந்து கொண்­டது.

கடந்த மாதம் 26 ஆம் திகதி இரவு 7.30 மணி­ய­ளவில் ஊர் மக்கள் ஏற்­றி­யி­ருந்த கொடியை அடுத்­த­த­ரப்­பினர் பல­வந்­த­மாக கழற்றி அவர்­க­ளது கொடியை ஏற்றி விட்­டார்கள். இந்த செய்­தி­ய­றிந்து பள்­ளி­வாசல் நிர்­வாகம் அங்கு சென்­றது. ஊர்­மக்­களின் கொடியை கழற்­றி­விட்டு புதி­தாக கொடி­யேற்­றி­ய­வர்கள் அக்­கொ­டியை கழற்­று­வ­தற்கு அனு­ம­திக்­க­வில்லை. கொடியை அவிழ்க்க வேண்டாம் அடிப்போம் என்­றார்கள். கொடியை கழற்ற முற்­பட்­ட­போது தாக்­கி­னார்கள். கல் எறிந்­தார்கள். பொல்­லு­களால் தாக்­கி­னார்கள். பெண்­களும் தாக்குதலில் ஈடுபட்டார்கள். இந்தக் கைக்கலப்பிற்கும்­ தெளஹீத் ஜமா அத்துக்கு எந்த தொடர்பும் இல்லை.

தெளஹீத் கொள்கை வாதிகள் பள்ளிவாசலை உரிமை கொண்டாடவில்லை. இக்கொள்கைவாதிகளுக்கும் இந்த தர்காவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் எங்களை தெளஹீத்வாதிகளே தாக்கினார்கள் என்றார்கள்.

இது கொடியேற்றத்தில் உருவான பிரச்சினை. இவ்வாறான பிரச்சினைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.

ஒன்று படவேண்டும்
முஸ்லிம் சமூகம் இவ்வாறான சிறிய விடயங்களில் முரண்பட்டுக் கொள்வது நகைப்புக்குரியதாக உள்ளது. கொடியேற்றத்தில் உருவான தாக்குதல்கள் 12 பேரை காயங்களுக்குள்ளாக்கியுள்ளது. பள்­ளி­வா­சலில் பொலிஸார் பாது­கா­ப்புக் கட­மை­யில் ஈடு­பட்­டுள்­ளார்கள்.

இவ்­வா­றான சம்­ப­வங்கள் முஸ்லிம் சமூ­கத்தின் நற்­பெ­ய­ருக்கு களங்கம் விளை­விப்­ப­வை­யா­கவே உள்­ளன. கடந்த காலங்­க­ளில் கொள்­கை ரீதி­யா­ன பிள­வுகள் கார­ண­மாக உயி­ரி­ழப்­புகள் கூட பதி­வா­கி­யுள்­ளன. இவ்­வா­றான சம்­ப­வங்கள் முஸ்­லிம்கள் மீது பிற சமூ­கங்கள் முன்­வைக்கும் குற்­றச்­சாட்­டுக்­களை நிரூ­பிப்­ப­தா­கவே உள்­ளன.
என­வேதான் எம்­மி­டையே நில­வும் கொள்கை முரண்­பா­டுகள் களை­யப்­பட வேண்டும். சகிப்புத் தன்­மை வளர்க்­கப்­பட வேண்டும். வன்­மு­றைகள் ஒரு­போதும் தீர்­வா­காது என்­பதை அனை­வரும் உணர வேண்டும்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.