சாரா உயிருடன்?

3வது டி.என்.ஏ. அறிக்கையும் பொருந்தவில்லை

0 292

(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்­பான விசா­ர­ணை­களில் தொடர்ந்து மர்­ம­மாக உள்ள, நீர்­கொ­ழும்பு -கட்­டு­வ­பிட்டிய­ தேவா­ல­யத்தில் தாக்­குதல் நடாத்­திய மொஹம்­மது ஹஸ்தூன் எனும் குண்­டு­தா­ரியின் மனை­வி­யான புலஸ்­தினி மகேந்ரன் எனும் சாரா­வுக்கு என்ன நடந்­தது என்­பது தொடர்பில் வெளிப்­ப­டுத்த 3 ஆவது தட­வை­யா­கவும் மீண்டும் டி.என்.ஏ. பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்ட நிலையில், அது குறித்த பகுப்­பாய்­வுகள் நிறை­வ­டைந்­துள்­ளன. இந் நிலையில் குறித்த மூன்­றா­வது டி.என்.ஏ. பகுப்­பாய்வு பிர­கா­ரமும் சாரா உயி­ரி­ழந்­துள்­ள­மையை உறுதி செய்ய முடி­யாமல் போயுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.
குறித்த பகுப்­பாய்வு அறிக்கை விசா­ர­ணை­யா­ளர்­க­ளான சி.ஐ.டி.யின­ருக்கும், கல்­முனை நீதி­மன்­றுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள பின்­ன­ணியில், நம்­ப­க­ர­மான தக­வல்கள் ஊடாக மேற்­படி விட­யத்தை அறிய முடி­கி­றது.

கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்­த­ம­ருது – வெலி­வே­ரியன் பகு­தியில் வீடொன்றில் குண்­டினை வெடிக்கச் செய்து தற்­கொலை செய்­து­கொண்­ட­தாக நம்­பப்படும் , சஹ்­ரானின் சகோ­தரர் ரில்வான் தலை­மை­யி­லான குழு­வி­ன­ரு­டைய உடற் பாகங்கள், அம்­பாறை பொது மயா­னத்தில் புதைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், அவை கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி மீள தோண்டி எடுக்­கப்­பட்­டன.

கல்­முனை நீதி­வா­னிடம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட உத்­த­ர­வுக்கு அமைய இவ்­வாறு உடற்­பா­கங்கள்,அம்­பாறை நீதிவான் துஷாரா குமாரி தர்­ம­கீர்த்தி முன்­னி­லையில் இவ்­வாறு தோண்டி எடுக்­கப்­பட்­டன.

பின்னர் சட்ட வைத்­திய அதி­கா­ரிகள் தேவை­யான மாதி­ரி­களைப் பெற்­றுக்­கொண்­டுள்­ள­துடன், தற்­போது உடற்­பா­கங்கள் அம்­பாறை பொலிஸ் தட­ய­வியல் பிரி­வி­னரின் (சொகோ) பொறுப்பில் வைக்­கப்­பட்­டுள்­ளன. இந் நட­வ­டிக்­கைகள் அனைத்தும் பொலிஸ் ஸ்தல தட­ய­வியல் பிரி­வி­னரின் பங்­கேற்­புடன் இடம்­பெற்­றன. இந் நிலை­யி­லேயே இந்த உடற் பாகங்கள் மூன்­றா­வது டி.என்.ஏ. பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக கொழும்­புக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டன. அதன்­படி அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் திணைக்­க­ளத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட டி.என்.ஏ. பரி­சோ­த­னைகள் நிறை­வ­டைந்து அதன் பெறு­பேறு அடங்­கிய பகுப்­பாய்வு அறிக்கை, நீதி­மன்­றுக்கும், விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அரச இர­சா­யன பகுப்­பாய்வு திணைக்­கள தக­வல்கள் தெரி­வித்­தன.

உயிர்த்த ஞாயிறு தின குண்­டு­வெ­டிப்பு தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளி­லேயே சாரா தொடர்பில் முதலில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன. குறிப்­பாக கட்­டு­வா­பிட்­டிய தேவா­லய குண்­டு­வெ­டிப்பு சம்­ப­வத்தின் குண்­டு­தா­ரியின் மனைவி என அடை­யாளம் காணப்­பட்ட சாரா, அந்த குண்­டு­தா­ரியை காத­லித்து மதம் மாறி திரு­மணம் செய்­தி­ருந்தார்.

இந் நிலையில், 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்­கு­தல்­களை நடாத்­திய குண்­டு­தா­ரி­க­ளான சஹ்ரான் ஹஸீமின் மனை­வி, ஹஸ்­தூனின் மனை­வி உட்­பட மேலும் பலர் சாய்ந்­த­ம­ருது -வெலி­வே­ரியன் பகு­தியில் வீடொன்றில் மறைந்­தி­ருப்­பது தெரி­ய­வ­ரவே, அதனை சுற்றி வளைத்த போது, அங்கு இருந்த தற்­கொலை குண்­டு­தா­ரிகள் குண்­டு­களை வெடிக்கச் செய்து தமது உயிர்­களை மாய்த்­துக்­கொண்­டி­ருந்­தனர். அத­னை­ய­டுத்து இரா­ணு­வத்­தினர் முன்­னெ­டுத்த தேடு­தலில், சஹ்­ரானின் மனைவி ஹாதி­யாவும், அவ­ரது மகளும் படு­கா­ய­ம­டைந்த நிலையில் உயி­ருடன் மீட்­கப்­பட்­டி­ருந்­தனர். இந் நிலையில் சிகிச்­சை­க­ளி­டையே சஹ்­ரானின் மனை­வி­யிடம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் சி.ஐ.டி. சிறப்புக் குழு பல்­வேறு தக­வல்­களை வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டி­ருந்­தது.

இவ்­வா­றான பின்­ன­ணியில், சட்டத் தேவைக்­காக சாய்ந்­த­ம­ருது வீட்டில் தற்­கொலை செய்­து­கொண்டு உயி­ரி­ழந்த பயங்­க­ர­வாத கும்­ப­லைச்­சேர்ந்­த­வர்­களின் ஆள் அடை­யா­ளத்தை நிரூ­பிக்க, சஹ்­ரானின் மனைவி ஹாதி­யாவின் வாக்குமூலத்­தினை அடிப்­ப­டை­யாக கொண்டு டி.என்.ஏ. பரி­சோ­த­னைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. அதா­வது, சம்­பவ இடத்­தி­லி­ருந்து ஸ்தல தட­ய­வியல் பிரி­வி­னரால் அடை­யாளம் காணப்­பட்டு மீட்­கப்­பட்ட உயி­ரியல் கூறுகள், குண்டு வெடிக்கச் செய்யும் போது வீட்டில் இருந்­த­வர்கள் என சஹ்­ரனின் மனைவி ஹாதி­யாவின் வாக்கு மூலத்தில் குறிப்­பி­டப்­பட்­ட­வர்­களின் இரத்த உற­வு­க­ளிடம் பெறப்­பட்ட உயி­ரியல் கூறு­க­ளுடன் ஒப்­பீடு செய்­யப்­பட்­டன.

இதன்­போது ஹாதி­யாவின் வாக்கு மூலத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த அனை­வ­ரி­னதும் டி.என்.ஏ.க்கள் கண்­ட­றி­யப்­பட்டு அவர்­க­ளது இறப்பு அறி­வியல் ரீதியில் உறுதி செய்­யப்­பட்ட போதும், ஹாதியா பெயர் குறிப்­பிட்ட சாரா தொடர்பில் மட்டும் டி.என்.ஏ. பரி­சோ­த­னைகள் தோல்­வி­ய­டைந்­தன. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.