குழு மோதல்கள், அசம்பாவிதங்கள் இடம்பெற்ற பள்ளிவாசல்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவு ஆராய்வு

0 423

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டின் சில பகு­தி­க­ளி­லுள்ள பள்­ளி­வா­சல்­களில் அண்­மைக்­கா­ல­மாக இடம்­பெற்­று­வரும் குழுக்­க­ளுக்­கி­டை­யி­லான மோதல் சம்­ப­வங்கள் மற்றும் அசம்­பா­வித நிகழ்­வு­க­ளை­ய­டுத்து அரச புல­னாய்­­வுப் பிரிவு அவ்­வா­றான பள்­ளி­வா­சல்கள் தொடர்­பி­லான தக­வல்­களைச் சேக­ரிக்கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ள­தாகத் தெரிவிக்கப்ப­டு­கி­றது.
பள்­ளி­வா­சல்­களின் இவ்­வா­றான பிரச்­சி­னைகள் தொடர்­பாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம், வக்பு சபை என்­பன விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாயின் அப்­பள்­ளி­வா­சல்­களின் பெயர்­பட்­டி­யலை வழங்­கு­மாறு திணைக்­க­ளத்­தினைக் கோரி­யுள்­ள­தா­கவும் அறிய முடி­கி­றது.

அண்­மையில் கிந்­தோட்டை அவ்­லியா மலைப் பள்­ளி­வா­சலில் இடம்­பெற்ற அசம்­பா­வித சம்­ப­வங்­களின் பின்பே அரச புல­னாய்­வுப் பிரிவு இந்­ந­ட­வ­டிக்­கையில் இறங்­கி­யுள்­ளது. அண்­மைக்­கா­ல­மாக கிந்­தோட்டை, அநு­ரா­த­புரம், புல்­மோட்டை பள்­ளி­வா­சல்­களில் குழுக்­க­ளுக்­கி­டையில் முரண்­பா­டுகள் உரு­வா­கி­யுள்­ள­மையை அரச புல­னாய்­வுப்­பி­ரிவு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

அநு­ரா­த­புரம், அச­ரி­கம ஜும்ஆ பள்­ளி­வா­சலில் இடம்­பெற்ற உழ்­ஹிய்யா இறைச்சி விநி­யோ­கத்தில் முரண்­பாடு கார­ண­மாக பள்­ளி­வா­சலின் முன்னாள் நிர்­வாக சபை உறுப்­பினர் ஒருவர் தாக்­கப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. இக்­கொலைச் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய நால்வர் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டனர். இவர்­களில் ஒருவர் பள்­ளி­வா­சலின் நிர்­வாக சபை உறுப்­பி­ன­ராவார்.

புல்­மோட்டை பள்­ளி­வாசல் பிரச்­சினை தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் புல்­மோட்டை கிளைத்­த­லைவர் அபுல் கலாம் மெள­ல­வியை விடி­வெள்ளி தொடர்­பு­கொண்டு வின­வி­ய போது ‘புல்­மோட்டை முஹி­யத்தீன் ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாக சபை தொடர்பில் பிரச்­சினை நிலவி வரு­கி­றது. வக்பு சபை இடைக்­கால நிர்­வாக சபை­யொன்­றினை ஒரு­வ­ருட காலத்­துக்கு நிய­மித்­துள்­ளது. தற்­போது இச்­ச­பையின் பத­விக்­கா­லமும் கால­வ­தி­யா­கி­யுள்­ளது. இந்­நிர்­வாக சபை 65 பேரின் பெயர்­களை ஜமா அத்தார் பட்­டி­யலில் உள்­வாங்க மறுக்­கி­றது. இவர்­களை உள்­வாங்­கினால் புதிய நிர்­வாக சபை தேர்வின் போது தங்­க­ளுக்கு எதி­ராக வாக்­க­ளிப்­பார்கள் என்றே அவர்­களை உள்­வாங்க மறுக்­கி­றார்கள். இப்பிரச்சினையை வக்பு சபையே தீர்த்து வைக்க வேண்டும்’ என்றார்.

இதே­வேளை அவ்­லியா மலைப்­பள்ளி விவ­கா­ரத்தில் இரு தரப்­பினர் ஈடு­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இவ்­வா­றான நிலை­மை­களே அரச புல­னாய்­வுப் பிரி­வி­னரின் கவனம் பள்­ளி­வா­சல்­களின் பக்கம் ஈர்க்­கப்­ப­டு­வ­தற்கு காரணமாய் அமைந்துள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.