முஸ்லிம் சமூகம் பாடம் படிக்கவில்லையா?

0 479

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்­கொண்ட சவால்கள் ஏராளம் ஏராளம். தனி நபர்கள், நிறு­வ­னங்கள் மற்றும் சமூகம் என பல்­வேறு தரப்­பி­னரும் பாரிய சிக்­கல்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­தனர். நூற்றுக் கணக்­கானோர் அநி­யா­ய­மாக கைது செய்­யப்­பட்டு பல வரு­டங்­களை சிறையில் கழிக்க வேண்­டிய துர­திஷ்டம் ஏற்­பட்­டது. இவர்­களில் இன்னும் சிலர் அநி­யா­ய­மாக தொடர்ந்தும் சிறையில் வாடு­கின்­றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் ஏற்­ப­டுத்­தி­விட்டுச் சென்ற கசப்­பான அனு­ப­வங்­க­ளி­லி­ருந்து முஸ்லிம் சமூகம் பாடம் ­ப­டித்­தி­ருக்கும் என்­பதே அனை­வ­ரதும் எதிர்­பார்ப்­பாக இருந்­தது. இத் தாக்­கு­தலின் பின்­ன­ரா­வது முஸ்லிம் சமூகம் தனக்குள் ஊடு­ரு­வி­யுள்ள மார்க்க ரீதி­யான கொள்கை முரண்­பா­டு­க­ளி­லி­ருந்து வில­கி­யி­ருக்கும் என்றும் எதிர்­பார்க்­கப்­பட்­டது. துர­திஸ்­ட­வ­ச­மாக, அந்த எதிர்­பார்ப்­புகள் தவி­டு­பொ­டி­யாகி வரு­வ­தையே அண்­மைக்­கால சம்­ப­வங்கள் உணர்த்தி நிற்­கின்­றன.

கடந்த வாரம் காலி, கிந்­தோட்­டையில் அமைந்­துள்ள அவு­லியா மலைப் பள்­ளி­வா­சலை மையப்­ப­டுத்தி தோற்றம் பெற்ற முரண்­பாட்­டினால் இரு குழுக்­க­ளுக்­கி­டையில் மோதல்கள் இடம்­பெற்று 12 பேர­ளவில் காய­ம­டைந்­துள்­ளனர். இச் சம்­ப­வத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் புகைப்­ப­டங்கள் சமூக வலைத்­த­ளங்­களில் அதிகம் பகி­ரப்­பட்ட போது முஸ்லிம் சமூகம் இன்னும் திருந்­த­வில்லை என பலரும் கருத்­துக்­களை வெளி­யிட்­ட­தையும் நாம் கண்டோம்.

அதே­போன்­றுதான் கடந்த ஹஜ் பெருநாள் உழ்­ஹிய்யா இறைச்சி விநி­யோ­கத்­தினால் தோற்றம் பெற்ற பள்­ளி­வாசல் நிர்­வாக சபை முரண்­பாடு கார­ண­மாக அநு­ரா­த­புரம், அச­ரிக்­கம பிர­தே­சத்தில் ஒருவர் அடித்துக் கொலை செய்­யப்­பட்ட துர­திஷ்ட சம்­ப­வமும் அரங்­கே­றி­யது. இது போன்ற பல சம்­ப­வங்கள் ஆங்­காங்கே பதி­வா­கி­யுள்­ளன. இவை தொடர்பில் அரச புல­னாய்வுப் பிரி­வினர் கூர்­மை­யாக அவ­தா­னித்து வரு­வ­தா­கவும் இவ்­வா­றான முரண்­பா­டுகள் நிலவும் பள்­ளி­வா­சல்கள் பற்­றிய பட்­டி­யலை முஸ்லிம் சமய திணைக்­களம் மற்றும் வக்பு சபை­யி­ட­மி­ருந்து கோரி­யுள்­ள­தா­கவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இவ்­வாறு நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் பள்­ளி­வா­சல்­க­ளையும் இஸ்­லா­மிய கொள்கை வேறு­பா­டு­க­ளையும் மையப்­ப­டுத்­திய மோதல்கள் அதி­க­ரித்துச் செல்­கின்­றமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும். இது ஓர் ஆரோக்­கி­ய­மான நகர்­வாக தெரி­ய­வில்லை.
முஸ்­லிம்கள் மத்­தியில் அடிப்­ப­டை­வாதம், தீவி­ர­வாதம் தோற்றம் பெற்­றுள்­ளது என முஸ்லிம் விரோத சக்­திகள் முன்­வைத்து வரும் குற்­றச்­சாட்­டுக்­களை நிரூ­பிப்­ப­தாக எமது செயற்­பா­டுகள் அமையக் கூடாது. உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் இலங்கை முஸ்லிம் சமூ­கத்தின் வர­லாற்றில் ஏற்­பட்ட மிகப் பெரும் கறை­யாகும். இந்தக் கறையைத் துடைத்து சமூகம் மீது கட்­ட­விழ்க்­கப்­பட்ட உண்­மைக்குப் புறம்­பான குற்­றச்­சாட்­டுக்­களை களை­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை ஒரு சமூ­க­மாக நாம் முன்­னெ­டுக்க வேண்­டுமே தவிர, மீண்டும் மீண்டும் எம்­மீது பழி­சு­மத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களில் ஈடு­படக் கூடாது என்­பதை வலி­யு­றுத்த விரும்­பு­கிறோம்.

இவ்­வா­றான முரண்­பா­டுகள் நிலவும் பள்­ளி­வா­சல்கள் தொடர்பில் உரிய நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு உலமா சபை, பள்­ளி­வாசல் சம்­மே­ள­னங்கள், வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய திணைக்­களம் என்­பன இணைந்து நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். சர்ச்­சை­களைத் தோற்­று­விப்போர், வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­வோ­ருக்கு எதி­ராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளிவாசல் நிர்வாகிகளாக வருவோருக்கான தகுதிகளை வரையறை செய்ய வேண்டும். கடந்த காலங்களில் குற்றச் செயல்கள், வன்முறைகள், மோதல்களுடன் சம்பந்தப்பட்டவர்களை நிர்வாகங்களிலிருந்து நீக்க வேண்டும். இவ்வாறான கடுமையான நடவடிக்கைகள் மூலமாகவே பள்ளிவாசல்களை மையப்படுத்திய முரண்பாடுகளை கட்டுப்படுத்த முடியுமாகவிருக்கும். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகள் விரைந்து செயற்பட வேண்டும். இன்றேல் இன்னுமின்னும் சமூகம் தலைகுனிவுகளைச் சந்திப்பதை தவிர்க்க முடியாது போகும்.

Leave A Reply

Your email address will not be published.