உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செலவு ரூ.9 கோடி

0 390

சிங்களத்தில்: ராஹுல் சமந்த ஹெட்டியாரச்சி
தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்

இலங்கை வர­லாற்றில் கரும் புள்­ளி­யாகப் பதி­வா­கி­விட்ட 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலைக் குண்டுத் தாக்­குதல் தொடர்பில் கார­ணங்­களை ஆராய்­வ­தற்கு ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. என்­றாலும் இந்த ஆணைக்­கு­ழு­வினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட பரிந்­து­ரைகள் இன்­று­வரை அமு­லாக்கம் செய்­யப்­ப­ட­வில்லை. ஆனால் இந்த ஆணைக்­கு­ழு­வுக்­காக செல­வி­டப்­பட்ட தொகை 9 கோடி 13 இலட்சம் ரூபா­வுக்கும் (91,369,829.98) அதி­க­மாகும். இந்த விப­ரங்­களை தகவல் அறியும் உரி­மையின் கீழ் (RTI) ஜனா­தி­பதி செய­ல­கத்­தி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட தக­வல்கள் மூலம் வெளிப்­ப­டுத்­திக்­கொள்ள முடிந்­தது.
இவ்­வாறு 9 கோடி ரூபாய்­க­ளுக்கும் அதி­க­மான நிதி ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழு­வினால் எவ்­வாறு, எந்­தெந்த விட­யங்­க­ளுக்­காக செல­வி­டப்­பட்­டுள்­ளது என்ற விப­ரங்­க­ளையும் தகவல் அறியும் உரிமை மூலம் பெற்­றுக்­கொள்ள முடிந்­தது.

இந்த ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­க­ளுக்கு கொடுப்­ப­ன­வாக ஒரு­கோடி 2 கோடி இலட்சம் ரூபா­வுக்கு அதி­க­மாக (10,200,412,00) வும் ஏனைய அதி­கா­ரி­க­ளுக்­கான கொடுப்­ப­ன­வாக மூன்று கோடி 11 இலட்சம் ரூபா­வுக்கும் அதி­க­மான (31,162,101.97) நிதியும் ஆணைக்குழு இயங்கிய கட்டிடத்துக்கான கொடுப்பனவாக 3 கோடி 77 இலட்சம் ருபாவுக்கும் அதிகமான நிதியும்(37,754,151.69)செல­வி­டப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­ப­தி விசா­ரணை ஆணைக்­கு­ழுவை நடத்திச் செல்­வ­தற்கு தேவை­யான உப­க­ர­ணங்­களை வாட­கைக்கு பெற்­றுக்­கொள்­வ­தற்­காக 69 இலட்­சத்­துக்கும் அதி­க­மான (6,905,326.00) நிதி செல­வி­டப்­பட்­டுள்­ளது. இதே வேளை பத்­தி­ரி­கை­களில் விளம்­பரம் செய்­வ­தற்­காக 11 இலட்­சத்­துக்கும் அதி­க­மான (1,1 97,806,00) நிதி வழங்­கப்­பட்­டுள்­ளது. ஏனைய செல­வுகள் 41 இலட்­சத்­துக்கும் அதிகம் (4,150,032.32) என தர­வுகள் வழங்­கப்­பட்­டுள்­ளது.

2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கிறிஸ்­தவ ஆல­யங்கள் மற்றும் ஹோட்டல்களை சில­வற்றை இலக்கு வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட இந்த தாக்­கு­தலில் 45 வெளி­நாட்டுப் பிர­ஜைகள் உட்­பட 270 பேர் பலி­யா­னார்கள். அத்­தோடு 500 க்கும் மேற்­பட்­ட­வர்கள் காயங்­க­ளுக்­குள்­ளா­கி­னர்.

இலங்­கையில் நிய­மிக்­கப்­பட்ட ஏனைய ஆணைக்­கு­ழுக்­களை விட, உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பாக நிய­மிக்­கப்­பட்ட இந்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைகள் தொடர்பில் சர்­வ­தேச சமூகம் மிகவும் கரி­சனை கொண்­டி­ருந்­தது.
பெரும் எண்­ணிக்­கை­யி­லான மக்­களின் உயிர்­களைப் பலி­யெ­டுத்த மற்றும் பாரிய அள­வி­லான மக்­களின் சொத்­துக்­க­ளுக்கு அழி­வினை ஏற்­ப­டுத்­திய இந்தத் தாக்­குதல் தொடர்­பி­லான கார­ணங்­களை ஆராய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்ட இவ் ஆணைக்­குழு 214 நாட்கள் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டது. பாது­காப்பு சேவை­களை சேர்ந்த­வர்கள், அர­சி­யல்­வா­திகள், அரச அதி­கா­ரிகள் மற்றும் தாக்­கு­த­லுக்கு முகம் கொடுத்­த­வர்கள், இவர்­களைச் சார்ந்­த­வர்கள் என 457 பேரின் சாட்­சி­யங்­களை ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு பதிவு செய்­துள்­ளது. இவர்­களில் அப்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, தற்­போ­தைய ஜனா­தி­ப­தியும், தாக்­குதல் இடம் பெற்ற காலத்தில் பிர­த­ம­ராக பதவி வகித்­த­வ­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரும் உள்­ள­டங்­குவர்.

எவ்­வா­றெ­னினும் இவ்­வாறு பெரும் தொகை பணம் செல­விட்டு செயற்­பட்ட இந்த விசா­ரணை ஆணைக்­குழு கோடிக்­க­ணக்­கான ரூபாய் மக்கள் நிதி­யினை விர­ய­மாக்­கிய மற்­று­மொரு ஆணைக்­கு­ழு­வாக வர­லாற்றில் பதி­வா­கி­யுள்­ளது.

தக­வல்­களை வழங்­கு­வதற்கு ஒரு­ வ­ரு­டமும் 8 மாதங்­களும்
உயிர்த்த ஞாயிறு ஆணைக்­குழு செலவு செய்த செல­வுகள் தொடர்பில் அறிந்து கொள்­வ­தற்­காக தக­வல்­களைக் கோரி 2021ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 20 ஆம் திகதி தகவல் அறியும் விண்­ணப்­ப­மொன்று சமர்ப்­பிக்­கப்­பட்­டது. என்­றாலும் இதன்­பின்பு தகவல் அறியும் உரிமை தொடர்­பான சட்­டத்தின் 5 (1) (அ) மற்றும் 5 (1) (ஊ) பிரிவின் விதந்­து­ரை­க­ளுக்­க­மைய தக­வல்­களை வழங்­க­மு­டி­யாது எனத் தெரி­வித்து ஜனா­தி­பதி செய­ல­கத்­தினால் அவ்­விண்­ணப்பம் நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

என்­றாலும் குறிப்­பிட்ட சட்­ட­பி­ரி­வு­களில் அடங்­கி­யுள்ள கார­ணங்­களைக் கவ­னத்தில் கொண்டால் அப்­பி­ரி­வு­களில் பின்­வ­ரு­மாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
5 (1) (அ) பிரிவு தனிப்­பட்ட தக­வல்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வை­யென்றால் மற்றும் தனி நபர் ஒரு­வரின் விட­யத்தில் அனு­ம­தி­யின்றி ஆக்­கி­ர­மிப்பு நடக்­கு­மென்றால் தகவல் வழங்­கு­வதை மறுக்­கலாம் இது­போன்று 5 (1) (ஊ) பிரிவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஏதா­வ­தொரு குற்­றச்­செ­யலை கண்­டு­பி­டிப்­ப­தற்கு அல்­லது குற்­ற­வா­ளி­களை கைது செய்­வ­தற்கு, அவர்­க­ளுக்கு எதி­ராக வழக்­குத்­தாக்கல் செய்­வ­தற்கு பாதகம் ஏற்­ப­டு­மென கரு­தினால் அல்­லது தேசிய பாது­காப்­புக்கு தக­வல்கள் பாதிப்­பாக அமையும் எனக்­க­ருதும் சந்­தர்ப்­பங்­களில் மாத்­த­ரமே தக­வல்­களை வழங்­கு­வதை நிரா­க­ரிக்­கலாம்.

எனினும் ஜனா­தி­பதி செய­ல­கத்தின் தகவல் அதி­கா­ரி­யினால் குறிப்­பிட்ட பிரி­வு­களின் கீழ் உயிர்த்த ஞாயிறு ஆணைக்­கு­ழுவின் செல­வினங்கள் தொடர்­பான தக­வல்கள் மறுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த மறுப்பு தொடர்பில் ஆராய்ந்து நோக்­கிய போது இந்தத் தக­வல்­களை குறிப்­பிட்ட பிரி­வு­க­ளுக்குள் உள்­ள­டக்க முடி­யாது. மறுக்க முடி­யாது என்­ப­தாகும்.
அத்­தோடு உரிய நடை­மு­றையின் ஊடாக தகவல் அறியும் உரிமை தொடர்­பான ஆணைக்­கு­ழு­வினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட மேன்­மு­றை­யீட்­டி­னை­ய­டுத்து பல தட­வைகள் இது தொடர்­பான விசா­ர­ணைகள் நடாத்­தப்­பட்­டன. அதே­வேளை ஒரு தடவை ஜனா­தி­பதி செய­லக காரி­யா­லயம் மேன்­மு­றை­யீட்டு விசா­ர­ணையில் கலந்து கொள்­வ­தி­லி­ருந்தும் தவிர்ந்­தி­ருந்­தது.

எவ்­வா­றா­யினும் மேன்­மு­றை­யீட்டு இல. RTIC Appeal /897/2021 ன் கீழ் 2022.10.06 ஆம் திகதி நடை­பெற்ற மேன்­மு­றை­யீட்டு விசா­ர­ணை­யை­ய­டுத்து குறிப்­பிட்ட தக­வல்­களை விண்­ணப்­ப­தா­ரிக்கு வழங்­கு­மாறு ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்கு தகவல் அறியும் உரிமை தொடர்­பான ஆணைக்­குழு உத்­த­ர­விட்­டது. அதன்­படி 2022.10.20 ஆம் திகதி தக­வல்கள் வழங்­கப்­பட்­டன. தக­வல்கள் வழங்­கு­வ­தற்கு எடுக்­கப்­பட்ட காலம் ஒரு வரு­டமும் 8 மாதங்­க­ளாகும். இக்­கால எல்­லையில் வேலை செய்யும் நாட்கள் 400 ஆகும்.

இவ்­வி­டத்தில் இந்­நாட்டு மக்­க­ளுக்கு குறிப்­பிட்­டுக்­கூ­ற­வேண்­டிய விடயம் ஒன்­றுள்­ளது. அதா­வது அதி­கா­ரி­க­ளுக்குப் பாதகம் ஏற்­படும் வகை­யி­லான தக­வல்­களை வழங்­கு­வதைத் தவிர்த்துக் கொள்­வ­தற்­காக தக­வல்கள் வழங்­கப்­ப­டு­வது மறுக்­கப்­ப­டு­கி­றது. இலங்­கையில் இது சாதா­ர­ண­மாக நடை­பெ­று­கி­றது என்­றாலும் அவ்­வாறு மறுக்­கப்­பட்­டாலும் அரச நிறு­வ­னங்கள் மறுத்­தாலும் நாம் இறு­தி­வரை நாம் இலக்­கினை எய்­து­வ­தற்கு நட­வ­டிக்­கையில் இறங்க வேண்டும்.

பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்­து­வ­தற்­கென நிய­மிக்­கப்­பட்­ட­குழு
உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் தொடர்­பான நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் இறுதி அறிக்கை கோத்­தா­பய ராஜ­பக்ஷ ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த காலத்தில் 2021 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 1 ஆம் திகதி அவ­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

இந்த தாக்­குதல் தொட­ர்பில் ஆராய்ந்து பரிந்­து­ரை­களை சமர்ப்­பிப்­ப­தற்­கென நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை சிபா­ரிசு செய்­வ­தற்­கென அறுவர் கொண்ட குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. 2021 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவின் தீர்­மா­னத்­துக்­க­மைய இக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. இது உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான மேலு­மொரு குழு­வாகும்.

இக்­குழு அப்­போ­தைய அமைச்சர் சமல் ராஜ­ப­க்ஷவின் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்­டது. இக்­கு­ழுவில் ஜோன்ஸ்டன் பர்­ணாந்து, உதய கம்­மன்­பில, ரமேஷ் பத்­தி­ரன, பிர­சன்ன ரண­துங்க மற்றும் ரோஹித அபே­கு­ண­வர்­தன ஆகியோர் அங்கம் பெற்­றி­ருந்­தனர். இந்தக் குழு சட்­ட­ரீ­தி­யா­ன­தல்ல என எதிர்க்­கட்­சியும் குற்றம் சுமத்­தி­யது.
அத்­தோடு பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் ஆண்­ட­கையும் இக்­கு­ழுவின் நிய­ம­னத்தை எதிர்த்து கருத்து வெளி­யிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் தொடர்­பான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்கை 472 பக்­கங்­க­ளையும் 215 இணைப்­பு­க­ளையும் 6 அத்­தி­யா­யங்­க­ளையும் கொண்­ட­தாகும்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்­காத உயிர்த்த ஞாயிறு ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை எமது நாட்டில் இது­வரை நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்­காத ஆணைக்­குழு அறிக்­கை­களில் ஒன்­றாக இடம் பிடித்துள்ளது.

நன்றி: சிலோன் நியூஸ்

– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.