உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் : குற்றம்சாட்டப்பட்டுள்ள இப்ராஹீம் மௌலவி கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதி

0 382

(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் 25 பேருக்கு எதி­ராக சட்ட மா அதிபர் திணைக்­களம் தாக்கல் செய்­துள்ள வழக்கில், 14ஆவது பிர­தி­வா­தி­யாக பெய­ரி­டப்­பட்­டுள்ள மெள­லவி ரஷீத் மொஹம்மட் இப்­ராஹீம் கடும் சுக­யீனம் கார­ண­மாக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

கண்டி – போகம்­பரை சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த அவர், மூச்சுத் திணறல், நெஞ்சு வலி உள்­ளிட்ட பல நோய் நிலை­மை­களால் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே, சிறைச்­சாலை அதி­கா­ரிகள் அவரை நேற்று முன் தினம் (25) கண்டி தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­துள்­ளனர்.

இதற்கு முன்­னரும் அவர் இவ்­வாறு சுக­யீனம் காரணமாக கண்டி வைத்­தி­ய­சா­லையில் சுமார் 18 நாட்கள் வரை தங்­கி­யி­ருந்து சிகிச்சை பெற்­றுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­ளுக்கு முன்னர், கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக் காலப்­ப­கு­தியில் மாவ­னெல்லை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­களில் மாவ­னெல்லை திதுல்­வத்­தை­யிலும் ஏனைய இடங்­க­ளிலும் ஐந்து புத்தர் சிலை­களை சேதப்­ப­டுத்­தி­யமை தொடர்பில் 16 பேருக்கு எதி­ராக, கேகாலை மேல் நீதி­மன்றில் சட்ட மா அதி­பரால் தொட­ரப்­பட்­டுள்ள வழக்கில் ரஷீத் மொஹம்மட் இப்­ராஹீம் அல்­லது இப்­ராஹீம் மெள­லவி அல்­லது இப்­ராஹீம் சேர் மீது குற்றம் சுமத்­த­ப்­பட்­டி­ருந்­தது. எனினும் குறித்த வழக்கில் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழான குற்­றச்­சாட்­டுக்­களை விலக்­கிக்­கொள்ள சட்ட மா அதிபர் இணங்­கிய நிலையில், தண்­டனை சட்டக் கோவையின் கீழ் முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டினை, விரை­வான விடு­தலை கருதி 11 பிர­தி­வா­திகள் ஏற்­றுக்­கொண்ட நிலையில் அவர்கள் 7 வரு­டங்­க­ளுக்கு ஒத்தி வைக்­கப்­பட்ட 3 மாத கால சிறைத் தண்­ட­னையை அளித்து விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­களில் ரஷீத் மொஹம்மட் இப்­ராஹீம் அல்­லது இப்­ராஹீம் மெள­லவி அல்­லது இப்­ராஹீம் சேரும் ஒருவராவார்.

இவ்வாறான நிலையில், கொழும்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன் உள்ள வழக்கு காரணமாக அவர் விளக்கமறியல் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.