சமூகத்துக்கு பாதிப்பான தீர்மானங்களை பள்ளி நிர்வாகிகள் மேற்கொள்ள முடியாது

வக்பு சபைத் தலைவர்

0 348

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பள்­ளி­வாசல் நிர்­வா­கி­களின் கடமை பள்­ளி­வா­ச­லையும், பள்­ளி­வாசல் சொத்­துக்­க­ளையும் பாது­காத்­தலும் அவற்றை நிர்­வ­கிப்­ப­து­வு­மா­கவே இருக்க வேண்டும். மாறாக தாம் நினைத்­த­வாறு சமூ­கத்­துக்குப் பாதிப்­பான தீர்­மா­னங்­களை அவர்­களால் மேற்­கொள்ள முடி­யாது. என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்தார்.

கிந்­தோட்டை அவ்­லியா மலைப் ­பள்­ளி­வா­சலில் இரு தரப்­பி­ன­ருக்­கி­டையில் ஏற்­பட்ட முரண்­பா­டுகள் அப்­பி­ர­தேச துன்­மஹல் பன்­ச­லையின் அதி­பதி வீரக்­கெட்­டிய சஞ்­ச­ய­தே­ர­ரினால் தீர்த்­து­வைக்­கப்­பட்ட விவ­காரம் தொடர்பில் வின­வி­ய­போதே வக்­பு­ச­பையின் தலைவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில், பள்­ளி­வா­சல்­களில் தொடர்ந்து பாரம்­ப­ரி­ய­மாக இடம்­பெற்­று­வரும் சம்­பி­ர­தா­யங்கள் மற்றும் ஓதுதல் போன்­ற­வற்றை பள்­ளி­வாசல் நிர்­வா­கி­களால் அறி­வித்­தல்கள் மூலம் தடை­ செய்ய முடி­யாது. அவ்­லியா மலைப்­பள்­ளி­வா­சலில் இவ்­வாறு நிறுத்­தப்­பட்ட சம்­பி­ர­தா­யங்­க­ளுக்கு வக்பு சபை மீண்டும் அனு­மதி வழங்­கு­மாறு உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

பள்­ளி­வா­சல்­களில் உரு­வாகும் இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கு வக்பு சபை மூலமே பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் தீர்ப்பு பெற்­றுக்­கொள்ள வேண்டும். பள்­ளி­வா­சல்­களின் சம்­பி­ர­தாய செயற்பாடுகளைத் தடைசெய்ய முடியாது என்றார்.
அவ்லியா மலைப்பள்ளி விவகாரம் தொடர்பில் வக்பு சபையில் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.