ஐ.ம.ச.வின் கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராக முஜிபுர் ரஹ்மான்?

0 346

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி சபை தேர்­த­லின்­போது ஐக்­கிய மக்கள் சக்­தியின் கொழும்பு மாந­கர சபை மேயர் வேட்­பா­ள­ராக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் நிய­மிக்­கப்­பட வேண்டும் என குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் பண்­டார தெரி­வித்­துள்ளார்.

கடந்த சனிக்­கி­ழமை ஐக்­கிய மக்கள் சக்­தியின் மத்­திய கொழும்பு தொகுதியின் பொதுக் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

இத­னி­டையே, அவர் மேயர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கும்­போது பாரா­ளு­மன்ற பத­வியை துறந்தால் அந்த வெற்­றி­டத்­திற்கு விருப்பு வாக்குப் பட்­டி­யலில் அடுத்­த­ப­டி­யாக இருக்கும் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி தெரிவு செய்­யப்­ப­டுவார் என்றும் நளின் பண்­டார எம்.பி. சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இது தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்­மானை தொடர்­பு­கொண்டு கேட்ட போது, உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை தொடர்ந்தும் ஒத்தி வைத்து இருக்­கின்ற சபையை மேலும் கால நீடிப்பு செய்ய முடி­யாது. கீழ் மட்ட அர­சியல் அதி­கார பீடத்தின் ஜன­நா­யக உரிமை காக்­கப்­பட வேண்டும். எனவே, உட­ன­டி­யாக உள்­ளூ­ராட்சி தேர்­த­லுக்கு அர­சாங்கம் செல்ல வேண்டும்.

தேர்தல் அறி­விக்­கப்­பட்­டதன் பின்­னரே, கொழும்பு மாந­கர சபை மேயர் வேட்­பாளர் பற்­றிய தீர்­மானம் கட்­சியின் உயர் மட்­டத்தில் எடுக்­கப்­படும். அது­வரை, நாம் பொறுத்­தி­ருந்து பார்க்க வேண்­டி­யுள்­ளது. அத்­தோடு, ஐக்­கிய மக்கள் சக்தி சந்­திக்­க­வி­ருக்கும் முத­லா­வது உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் என்­பதால் பல­மான வேட்­பா­ளர்­களை கள­மி­றக்கும் வியூ­கங்கள் அமைக்­கப்­ப­டலாம். அந்த வகையில் கொழும்பு மாந­கர சபையின் அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொள்ள பல­மான வேட்­பாளர் குறித்து நாம் தீர்­மானம் எடுப்போம்.
நளின் பண்­டார எம்.பி. குறிப்­பிட்­டது போன்ற தீர்­மா­னங்­களும் எடுக்­கப்­ப­டலாம். எனினும், தேர்தல் அறி­விக்­கப்­பட்ட பின்­னரே இறுதி முடி­வுகள் எடுக்­கப்­படும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.