ஏகா­தி­பத்­தி­யத்தின் 3‘ஜீ’ (Gold,God,Glory) க்களும் இஸ்­லாத்தின் மகி­மையும்

0 608

அஷ்ஷைக் பளீல் (நளீமி)

ஏகா­தி­பத்­தி­யத்தின் சின்னம் எலி­சபெத் மகா­ரா­ணியின் இறுதிக்கிரியை நிகழ்­வு­களை நாம் மனக்கண் முன் கொண்டு வருவோம். முழு உல­கமும் தொலைக்­காட்­சியில் அவற்றைப் பார்த்­துக்­கொண்டு பிர­மித்துப் போனது. அதே­வேளை, அவர் தலையில் அணிந்­தி­ருந்த கிரீ­டத்தில் இருந்த மாணிக்கக் கற்கள் இந்­தியா போன்ற நாடு­களில் இருந்து பலாத்­கா­ர­மாக எடுத்­துச்­செல்­லப்­பட்­டவை என்றும் இவ்­வ­ளவு அதி­க­மான பணி­யாட்­களை கொண்ட மிக ஆடம்­ப­ர­மான பகிங்ஹாம் அரண்­ம­னையை நிர்­மா­ணிக்­கவும் நிர்­வ­கிப்­ப­தற்­கா­கவும் பின்­தங்­கிய, ஏழை நாடு­க­ளி­லி­ருந்தே பணம் சுரண்­டப்­பட்­டது என்றும் பேசப்­பட்­டதை யாரால் மறுக்க முடியும்?

பிரித்­தா­னி­யாவின் ஆதிக்கம் (ஏகா­தி­பத்­தியம்) உலகின் பல நாடு­களில் இருந்­த­மையால் சூரியன் மறை­யாத தேசம் என்று அது வர்­ணிக்­கப்­பட்­டது. கால­னித்­து­வ­வாதம் பிரித்­தா­னி­யா­வுக்கு மட்டும் உள்­ள­தாக இருக்­க­வில்லை.

ஏகா­தி­பத்­தியம் அல்­லது பேர­ர­சு­வாதம் (Imperialism) என்­பது, பேர­ரசு ஒன்றை உரு­வாக்கும் அல்­லது அதனைப் பேணும் நோக்­குடன், வெளி நாட்டின் மீது தொடர்ச்­சி­யான கட்­டுப்­பாட்­டையோ மேலா­திக்­கத்­தையோ செலுத்தும் கொள்­கை­யாகும்.

ஒரு காலத்தில் ஐரோப்­பி­யர்கள் அமெ­ரிக்க, ஆபி­ரிக்க மற்றும் ஆசிய நாடு­களை கால­னித்­துவ ஆக்­கி­ர­மிப்பைச் செய்து பிழிந்­தெ­டுத்­தார்கள். இவர்கள் கடைப்­பி­டித்த Imperialism (ஏகா­தி­பத்­தியம், பேர­ரசு வாதம்) Colonization (கால­னித்­துவம்) ஆகிய கொள்­கைகள் மிகக் கொடூ­ர­மா­ன­வை­யாகும். இவை கீழைத்­தேய நாடு­களை அர­சியல் ரீதி­யாக, பொரு­ளா­தார ரீதி­யாக, ஏன் சிந்­தனா ரீதி­யாகக் கூட அடக்­கு­வ­தற்கும் சுரண்­டு­வ­தற்­கு­மான மறு­பெ­யர்­க­ளாகும்.

“ஏகா­தி­பத்­திய காலம்” என்­பது ஐரோப்­பிய நாடுகள், பிற கண்­டங்­களில் குடி­யேற்­றங்­களை ஏற்­ப­டுத்தத் தொடங்­கிய காலத்­தையே குறிக்­கின்­றது. பேர­ர­சு­வாதம் என்­பது, தொடக்­கத்தில், 1500 களின் பிற்­ப­கு­தியில், பிரித்­தா­னியா, பிரான்ஸ் ஆகிய நாடு­களின் ஆ­பி­ரிக்கா, அமெ­ரிக்­காவை நோக்­கிய விரி­வாக்கம் தொடர்­பான கொள்­கை­களைக் குறிக்­கவே பயன்­பட்­டது.

இவ்­வாறு தமக்கு எந்த வகை­யிலும் உரித்துக் கொண்­டாட முடி­யாத பிற நாடு­களை ஆக்­கி­ர­மிப்­ப­தற்­கான உரிமை இவர்­க­ளுக்கு எங்­கி­ருந்து கிடைத்­தது?

கால­னித்­து­வ­வா­திகள் தாம் சென்ற இடங்­க­ளி­லெல்லாம் மக்­களை கொன்று குவித்­தார்கள். அந்த அந்த நாடு­களில் உள்ள வளங்­களை சுரண்டிக் கொண்டு வந்து தமது நாடு­களைப் போஷித்­தார்கள். அதற்கு மேலாக தமது மதத்தை இந்த நாடு­களில் திணித்­தார்கள். இந்த நாடு­களில் இருந்து இந்த சுரண்­டல்­கா­ரர்­களை வெளி­யேற்ற அல்­லது வேறு வார்த்­தை­களில் கூறு­வ­தாயின் அவர்­களை துரத்­தி­ய­டிக்க கீழைத்­தேய நாட்டு மக்கள் அதி­க­ம­திகம் போரா­டி­னார்கள். லட்­சோ­ப­ லட்சம் மக்கள் இப்­போ­ராட்­டங்­களில் உயிர்த்­தி­யாகம் செய்ய நேரிட்­டது.

உதா­ர­ண­மாக, 1954 ஐத் தொடர்ந்த காலப்­பி­ரிவில் அல்­ஜீ­ரி­யா­வி­லி­ருந்து பிரான்­ஸிய கால­னித்­துவவாதி­களைத் துரத்த சுமார் 15 லட்சம் பேர் உயிர் கொடுத்­தனர்.

கால­னித்­து­வத்தின் நோக்கம்
கால­னித்­துவ விரி­வாக்­கத்தின் உந்­து­தல்­களை கடவுள், தங்கம் மற்றும் மகிமை (God, Gold, Glory) என்று சுருக்­க­மாகக் கூறலாம்.

Historians use a standard shorthand, “Gold, God, and Glory,” to describe the motives generating the overseas exploration, expansion, and conquests that allowed various European countries to rise to world power between 1400 and 1750.(https://www.encyclopedia.com/social-sciences/applied-and-social-sciences-magazines/gold-god-and-glory)

‘கடவுள்’ என்று கூறக் காரணம், மிஷ­ன­ரிகள் கிறிஸ்­த­வத்தைப் பரப்­பு­வதை தார்­மீகக் கடமை என்று கரு­தினர், மேலும் கால­னித்­துவ நோக்­கங்­களை காப்­பாற்­று­வ­தற்கு கடவுள் அவர்­க­ளுக்கு வெகு­மதி அளிப்பார் என்று அவர்கள் நம்­பினர்.

‘தங்கம்’ என்று கூறக் காரணம், கால­னித்­து­வ­வா­திகள் தங்கள் சொந்த பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக மற்ற நாடு­களின் வளங்­களை சுரண்­டி­னார்கள்.
‘மகிமை’ என்று கூறக் காரணம், ஐரோப்­பிய நாடுகள் அதிக எண்­ணிக்­கை­யி­லான கால­னி­களை அடை­வதில் பெரு­மை­யுடன் ஒன்­றுடன் ஒன்று போட்­டி­யிட்­டன.

வித்­தி­யாசம் என்ன?
இந்த ஏக­ாதி­பத்­தி­ய­வா­திகள் செய்த போராட்­டங்­க­ளுக்கும் முஸ்லிம் படைகள் செய்த போராட்­டங்­க­ளுக்கும் இடையில் மலைக்கும் மடு­வுக்கும் இடை­யி­லான வேறு­பாடு காணப்­பட்­டது.

முஸ்­லிம்­க­ளது படை­யெ­டுப்­புக்கள் புனி­த­மான இலக்­கு­களைக் கொண்­டி­ருந்­தன என்­ப­தற்கு பின்­வரும் சம்­பவம் நல்ல உதா­ர­ண­மாகும்.

பிரான்ஸில் அப்துர் ரஹ்மான் காபி­கீயின் தலை­மையில் நகர்ந்து கொண்­டி­ருந்த இஸ்­லா­மிய சேனையை தற்­போ­தைய பிரான்ஸின் வட பகு­தியில் இருந்த அகுய்டைன் எனும் பகு­தியில்  கிறிஸ்­தவ வீரர்கள் தடுத்து நிறுத்­தினர். அங்கு இடம்­பெற்ற யுத்தம் Battle of Tours எனப்­பட்­டது. அதில் எதி­ரிப்­ப­டை­யினர் இஸ்­லா­மிய சேனையைச் சேர்ந்த ஆயி­ரக்­க­ணக்­கான வீரர்­களைக் கொலை செய்­தார்கள். கி.பி.732 இல் ரமழான் மாதத்தில் நடந்த இப்­போ­ராட்­டத்தில் ஷஹீ­தாக்­கப்­பட்­ட­வர்­க­ளது ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்­யப்­பட்ட இடத்­துக்கு ’பிலாதுஷ் ஷுஹதா’ (ஷஹீ­து­க­ளது ராஜ­பாட்டை) Battle of the Highway of the Martyrs என்று பெய­ரி­டப்­பட்­டது.

அவர்­க­ளது மண்­ண­றை­க­ளி­லி­ருந்து இரவில் பாங்­கோசை கேட்­ப­தாக அப்­பி­ர­தே­சத்­த­வர்கள் கூறி­ய­தாக இப்னு ஹய்யான் எனும் வர­லாற்­றா­சி­ரியர் கூறு­கிறார்.  ‘அல்லாஹ் மிகப்­பெ­ரி­யவன்’, ‘அல்லாஹ் மிகப்­பெ­ரி­யவ’ என்ற வாச­கங்­களை பாங்கு கொண்­டி­ருக்­கி­றது. “அந்த மண்­ண­றை­களில் இருந்து யுத்­தத்துக்கு அழைக்கும் மேளச் சத்­தங்­க­ளையோ வாள்­வீச்சு சத்­தங்­க­ளையோ யுத்தம் செய்­வோ­ரது கூச்­சல்­க­ளையோ அப்­பி­ர­தே­சத்­த­வர்கள் கேட்­க­வில்லை. ஆனால் அவர்கள் ஏகத்­து­வத்­தி­னதும் ஈமா­னி­னதும் தொழு­கை­யி­னதும்  வாழ்க்­கையில் வெற்­றி­யி­னதும் கோஷத்­தையே காது­களால் கேட்­டார்கள்” என அஷ்ஷைக் கஸ்­ஸாலீ அவர்கள் தனது  ‘மஅல்லாஹ்’ எனும் நூலில் மிகவும் காத்­தி­ர­மான ஒரு கருத்தை சொல்­லு­கி­றார்கள்.

ஆனால், கால­னித்­து­வ­வா­திகள் எந்த எந்த நாடு­க­ளுக்­கெல்லாம் சென்­றார்­களோ அங்கு அவர்கள் போராடி இறந்த பொழுது அவ்­வப்­பி­ர­தே­சங்­களில் அவர்­க­ளது பூதவுடல்கள் அடக்­கப்­பட்­டன. எனவே, “அவர்­க­ளது மயா­னங்­களில் இருந்து ‘தங்கம், தங்கம், பெட்ரோல், பெட்ரோல், சுர­ண்டல், சுரண்டல்’ என்ற கூக்­கு­ரல்கள் தான் வெளி­வரும்” என்று அஷ்ஷைக் கஸ்­ஸாலீ சொல்­லு­கி­றார்கள்.(பக்:163)

பிர­பல எழுத்­தாளர் உஸ்தாத் ஸையாத் அவர்கள் “இஸ்­லா­மிய யுத்த வெற்­றிகள் கால­னித்­து­வத்­துக்­கான அல்­லது வரி அற­வி­டு­வ­தற்­கான வெற்­றி­க­ளாக இருக்­க­வில்லை. மாறாக, சுதந்­தி­ரத்­திற்கும் நேர்­வழி காட்­ட­லுக்­கு­மான வெற்­றி­க­ளா­கவே இருந்­தன”  என்று கூறி­விட்டு ‘பூவு­லகில் அவை சுதந்­திரம், அபி­வி­ருத்தி, ஏகத்­துவம், ஈமான், சத்­தியம், நற்­செ­யல்கள், புதிய கண்­டு­பி­டிப்­புக்கள், நீதி என்­ப­வற்­றுக்­கான வெற்­றி­க­ளாக இருந்­தன’ என்று சொல்­லு­கிறார். (மேற்­படி நூல்:162)

மனி­தனைப் படைத்து பரி­பா­லித்து வரும் சர்வ வல்­ல­மையும் கொண்ட பிர­பஞ்ச நாயகன், ஏக இரட்­ச­க­னையே வணங்கி வழி­பட வேண்டும் என்ற கொள்­கையின் நிழலில் வாழும்­ப­டியே இஸ்­லா­மிய சேனை அழைப்பு விடுத்­தது. எனவே, இஸ்­லா­மிய சேனை போன இடங்­களில் எல்லாம் அல்­லாஹ்­வையே மகத்­து­வப்­ப­டுத்த விரும்­பி­யது.

கால­னித்­து­வவா­திகள் தாம் ஆக்­கி­ர­மித்த நாடு­களை ஏன் ஆக்­கி­ர­மித்­தனர் என்ற கேள்­விக்கு தெளி­வான பதில் அஷ்ஷைக் அல்­கஸ்­ஸாலி அவர்­களால் கூறப்­பட்­டி­ருக்­கி­றது.
இலங்கை, இந்­தியா மற்றும் ஆ­பி­ரிக்க நாடு­க­ளுக்கு படை­யெ­டுத்துச் சென்ற மேற்­கத்­தி­ய­வர்கள் ஏன் சென்­றனர்? அப்­பி­ர­தே­சங்­களில் இருந்த மக்­க­ளு­டைய வாழ்வை வளப்­ப­டுத்த வேண்டும், அடிமைத் தழை­யி­லி­ருந்து விடு­தலை செய்து சுதந்­திரக் காற்றை சுவா­சிக்கச் செய்ய வேண்டும், பொரு­ளா­தார ரீதி­யாக, அவர்­களை வளப்­ப­டுத்த வேண்டும் என்ற நோக்­கிலா? அல்­லது வேறு நோக்­கங்­க­ளிலா என்­ப­தற்கு இக்­கூற்று மிகச்­சி­றந்த ஆதா­ர­மாகும்.

பார­சீகத் தள­பதி ருஸ்­துமின் அர­ச­வைக்குச் சென்ற முஸ்லிம் சேனையின் பிர­தி­நிதி ரிப்யீ இப்னு ஆமி­ரிடம் ருஸ்தும்  ‘நீங்கள் என்ன நோக்­கத்­தோடு இங்கு வந்­தி­ருக்­கி­றீர்கள்?  என்று கேட்ட போது, “படைப்­பி­னங்­களை வணங்­கு­வதை விடுத்து படைத்­த­வனை வணங்­கு­வ­தற்கு அடி­யார்­க­ளுக்கு அழைப்புக் கொடுப்­ப­தற்­காக அல்லாஹ் எங்­களை அனுப்­பி­யி­ருக்­கிறான். உல­கத்தின் நெருக்­க­டி­யி­லி­ருந்து அதன் விசா­லத்தின் பால் அழைக்க நாங்கள் வந்­துள்ளோம். மதங்கள் என்ற பெயரால் இழைக்­கப்­படும் அநீ­தி­க­ளி­லி­ருந்து காத்து இஸ்­லா­மிய நீதத்தின் பால் அழைப்பு விடுக்க நாங்கள் வந்­துள்ளோம்” என்று அவர் கூறினார். (தபரீ: தரீகுர் ருசுல் வல்­முலூக்,7/39, இப்னு கஸீர், அல்­பி­தாயா வன்­னி­ஹாயா,3/520)

யுத்­தங்­க­ளுக்­கான பின்­ன­ணிகள்
உலகில் தொன்­று­தொட்டு பல்­வேறு நோக்­கங்­க­ளுக்­காக போர்கள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன. இனம், மொழி, நிறம், பிர­தேசம் போன்ற வேறு­பா­டு­களின் கார­ண­மாக தோன்றும் வெறியால் தூண்­டப்­பட்டு மக்கள் யுத்­தங்­களில் ஈடு­ப­டு­வ­துண்டு. பல­மான சமூ­கங்கள் பல­வீ­ன­மான சமூ­கங்­களை ஆக்­கி­ர­மித்து, அவற்றின் வளங்­களை சுரண்டி, தம்மை வளர்த்துக் கொள்ள வர­லாற்றில் யுத்­தங்­களைத் தொடுத்­துள்­ளன.
இஸ்லாம் பிர­தேச வெறியை எதிர்த்துப் போரா­டி­யது. நீதியே அர­சாட்சி செய்­ய­வேண்டும் என்­ப­தற்­கா­கவும் மக்­க­ளுக்கு மத்­தியில் அன்பு நிலவ வேண்­டு­மென்­ப­தற்­கா­கவும் இந்த நிலைப்­பாட்டை எடுத்­தது.

நபி (ஸல்) அவர்கள் ‘எமக்கு மத்­தியில் யார் இன, பிர­தே­ச­வா­தத்­தின்பால் அழைப்பு விடுக்­கி­றாரோ அவர் எம்மைச் சார்ந்­த­வ­ரல்லர். யார் இன, பிர­தே­ச­வா­தத்­திற்­காகப் போரா­டு­கி­றாரோ அவரும் எம்மைச் சார்ந்­த­வ­ரல்லர்’ என்­றார்கள். (அபூ­தாவூத், கிதாபுல் அதப் – 112, ஸஹீஹ் முஸ்லிம், கிதாபுல் இமாரா – 57)

கால­னித்­துவ நோக்­கங்­க­ளுக்­கா­கவும் பொரு­ளா­தார நலன்­க­ளுக்­கா­கவும் செய்­யப்­படும் போர்­களை இஸ்லாம் வெறுக்­கி­றது. அவை சந்­தை­க­ளையும் மூலப்­பொ­ருட்­க­ளையும் தேடி செய்­யப்­படும் சுரண்­ட­லுக்­கான போர்­க­ளாகும். அவை பின்­தங்­கிய பல­வீ­ன­மான நிலை­யி­லுள்ள சமூ­கங்­களை அடி­மைப்­ப­டுத்­தவும் தொடர்ந்தும் அவற்றை சுரண்­டல்­வாத கால­னித்­து­வ­வாத ஆட்­சியின் கீழ் வைத்­துக்­கொள்­ளவும் செய்­யப்­படும் போர்­க­ளாகும். அந்­த­வ­கையில், அவை கொள்­ளை­ய­டிப்­ப­தற்­கான, சூறை­யா­டு­வ­தற்­கான, பலாத்­கா­ரத்­துக்­கான போர்­க­ளாகும். அவை சமு­தா­யங்­க­ளது கண்­ணி­யத்­துக்கும் சுயா­தி­பத்­தி­யத்­திற்கும் எதி­ரா­ன­வையே. இத்­த­கைய போர்கள் இஸ்­லாத்தில் முற்­றாகத் தடை­செய்­யப்­பட்­ட­வை­யாகும். இத்­த­கைய போர்­களைத் தூண்­டுவோர் அல்­லாஹ்வின் மிகப் ­பொ­து­வான நீதி உலகில் நிலவி, வாழ்வை வழி­ந­டாத்தத் தடை­போ­டு­கி­றார்கள். சுரண்­ட­லையும் அநீ­தி­யையும் பிற­ரது செல்­வங்­களை அநி­யா­ய­மாக விழுங்­கு­வ­தையும் விரும்­பு­வார்கள். மேலும், அர­சர்கள், வீரர்­க­ளது வரட்டு கௌர­வங்­க­ளுக்­காகச் செய்­யப்­படும் போர்­க­ளையோ, தனிப்­பட்ட இலா­பங்­க­ளுக்­கா­கவும், கொள்­ளைக்­கா­கவும் செய்­யப்­படும் போர்­க­ளையோ இஸ்லாம் நிரா­க­ரிக்­கி­றது’ என ஆய்­வாளர் கலா­நிதி தசூகி எழு­து­கிறார். (அத்­த­சூகி, அத்­தி­ரா­ஸாதுல் இஸ்­லா­மிய்யா – 19 -20, மேல­திக விப­ரத்­திற்குப் பார்க்க – அல்­அ­லாகாத் அத்­தௌ­லிய்யா – 22,23)

உமை­யாக்­க­ளது காலத்தில் மஸ்­லமா இப்னு அப்துல் மலிக் எனும் தள­பதி தனது படைகள் சகிதம் உரோ­மர்­க­ளது பெரும் கோட்­டை­யொன்றை முற்­று­கை­யிட்­டி­ருந்தார். ஆனால், அந்த கோட்­டைக்குள் படை­யி­னரால் நுழைய முடி­ய­வில்லை. எனவே, மஸ்­லமா தனது படையை நோக்கி : “உங்­களில் யாரா­வது ஒரு­வ­ருக்கு இந்த கோட்­டையில் ஒரு துளையை (அரபு மொழியில் துளை ‘நக்ப்’ எனப்­படும்) ஏற்­ப­டுத்தி அத­னூ­டாக நுழைந்து கோட்­டையின் கதவை திறக்க முடி­யுமா?” என்று கேட்டார். அப்­போது இனந்­தெ­ரி­யாத ஒரு­வரால் அக்­கோட்­டையில் ஒரு துளை­யி­டப்­பட்­டு­கி­றது. அந்தத் துளை­யூ­டாக நுழைந்த அவர் பல்­வே­று­பட்ட ஆபத்­துக்­க­ளையும் எதிர்­கொண்ட நிலையில் அந்த கோட்­டையின் கதவை திறந்து விடு­கிறார். எனவே, அக்­க­த­வி­னூ­டாக நுழைந்த முஸ்லிம் படை­யி­னரால் கோட்டை கைப்­பற்­றப்­ப­டு­கி­றது.

இதன் பின்னர் தள­பதி மஸ்­லமா தனது படை­யி­ன­ரி­டத்தில் ‘ஸாஹிபுன் நக்ப் (துளை­வாசி) எங்கே?” என்று கேட்­கிறார். ஆனால், எவரும் முன்­வ­ர­வில்லை. அப்­போது மஸ்­லமா “கட்­டா­ய­மாக என்­னி­டத்தில் அந்த துளை­வாசி வர­வேண்டும்” என்று குறிப்­பி­டு­கிறார்.
சிறிது நேரத்தில் இரவு வேளையில் தன்னை முழு­மை­யாக மூடிய நிலையில் ஒருவர் வந்து “அந்த துளை­வாசி யார் என்று உங்­க­ளுக்கு அறி­விப்பேன். ஆனால், அவர் தன்னை இனம்­காட்­டு­வ­தற்கு மூன்று நிபந்­த­னை­களை இடு­கிறார். அவை­யா­வன;- முத­லா­வது, கலீ­பா­வுக்கு அனுப்பும் கடி­தத்தில் அவ­ரு­டைய பெயர் இடம்­பெறக் கூடாது. இரண்­டா­வது, அவர் செய்த இக்­க­ரு­மத்­திற்கு கைமா­றாக எதுவும் வழங்­கப்­படக் கூடாது. மூன்­றா­வது, அவர் யார் என்று நீங்கள் கேட்கக் கூடாது” என்று சொன்ன பொழுது மஸ்­லமா “அவர் எங்கே?” என்று கேட்­கிறார். அதற்கு அந்த படை­வீரர் பணி­வோடும் வெட்­கத்­தோடும் “தள­பதி அவர்­களே, நான் தான் அந்த துளை­வாசி” என்று கூறி­விட்டு அவ­ச­ர­மாக அந்த இடத்­தி­லி­ருந்து வெளி­யேறிச் சென்றார். அதன் பிறகு மஸ்­லமா அவர்கள் தான் தொழுத ஒவ்­வொரு தொழு­கை­யிலும் “மறு­மையில் யா அல்லாஹ் என்னை ‘ஸாஹிபுன் நக்ப்’ உடன் சேர்த்து விடு­வா­யாக” என்று பிரார்த்­தித்து வந்­தார்கள் என வர­லாறு கூறு­கி­றது. (உயூனுல் அக்பார் 1/265)

இஸ்­லா­மிய சேனையில் இணைந்து போரா­டி­ய­வர்கள் உலக இலா­பங்­க­ளையோ புக­ழையோ அணு­வ­ள­வேனும் எதிர்­பார்க்­காமல் தியா­கத்­தோடு உழைத்­தி­ருக்­கி­றார்கள் என்­பதை இந்த சம்­பவம் காட்­டு­கி­றது.

யுத்­தங்கள் அற்­ப­மான, லோகா­யத நோக்­கங்­க­ளுக்­காகச் செய்­யப்­ப­டு­வ­தனை இஸ்லாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றது. நபி (ஸல்) அவர்­க­ளது காலத்தில் நடந்த யுத்­தங்­களின் போது அவற்றில் கலந்து கொண்ட சில­ரிடம் இத்­த­கைய நோக்­கங்­களை அவ­தா­னித்த நபி­களார்(ஸல்) அவற்­றிற்­காக இறை­வ­னது கூலி கிட்­டா­தென்றும் அவை பிழை­யான நோக்­கங்கள் என்றும் தெரி­வித்­தார்கள்.

அ. ஒருவர், நபி(ஸல்) அவர்­க­ளிடம் வந்து ‘அல்­லாஹ்வின் தூதரே! ஒருவர் அல்­லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்­கிறார். அதே­வேளை, அதன்­மூலம் உலக செல்­வங்­களை ஈட்­டிக்­கொள்­ளவும் விரும்­பு­கிறார். அவர் பற்­றிய அபிப்­பி­ராயம் யாது?’ என வின­வினார். அதற்கு நபி­ய­வர்கள் ‘அவ­ருக்கு நற்­கூ­லியே கிடை­யாது’ என்று மூன்று தடவை மீட்டி மீட்டிக் கூறி­னார்கள். (அபூ­தாவூத், கிதாபுல் ஜிஹாத் – 2516)

ஆ. ஒரு­ த­டவை நபி(ஸல்) அவர்­க­ளிடம் ‘ஒருவர் (மக்­களால்)தான் புக­ழப்­பட வேண்டும் என்­ப­தற்­காகப் போரா­டு­கிறார், மற்­றொ­ருவர் உலக இலா­ப­மொன்­றுக்­காகப் போரா­டு­கிறார். இன்­னொ­ருவர், மக்கள் தன்னைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும் என்­ப­தற்­காகப் போரா­டு­கிறார். இந்த நோக்­கங்­களில் அல்­லாஹ்வின் பாதையில் எனக் கரு­தத்­தக்க நோக்கம் யாது?’ என வின­வப்­பட்ட போது நபி (ஸல்) அவர்கள், ‘யார் அல்­லாஹ்வின் வார்த்தை மட்டும் மேலோங்­கி­ய­தாக இருக்க வேண்டும் என்­ப­தற்­காகப் போரா­டு­கி­றாரோ அவர் மட்­டுமே (அல்­லாஹ்வின் பாதையில் போரா­டி­ய­வ­ராகக் கரு­தப்­ப­டுவார்)’ என்­றார்கள். (அபூ­தாவூத், கிதாபுல் ஜிஹாத் – 2517, அஹ்மத், பாகம் – 01, பக்கம் – 416)
முஸ்­லிம்கள் அல்­லாஹ்வின் பாதையில் போர் புரி­வ­தா­கவும் முஸ்லிம் அல்­லாதோர் ‘தாகூத்’ இன் வழியில் – பிழை­யான வழியில், அத்­து­மீ­று­ப­வர்­களின் பாதையில் யுத்தம் புரி­வ­தா­கவும் அல்­குர்ஆன் தெரி­விக்­கி­றது.(சூரா அல்­ப­கரா – 76)

யுத்தம் தொடுக்கும் போது முஸ்லிம் படை கடைப்­பி­டிக்க வேண்­டிய ஒரு முக்­கி­ய­மான ஒழுக்­கத்தைப் பற்றிக் கூறும் அல்லாஹ், ‘உங்கள் மீது எவரும் அத்­து­மீ­றினால் அவர் அத்­து­மீறும் அள­வுக்கே நீங்­களும் அத்­து­மீ­றுங்கள். அல்­லாஹ்வைப் பயந்து கொள்­ளுங்கள்’ என்று தெரி­விக்­கிறான்.

இது­பற்றி விப­ரிக்கும் அஷ்ஷைக் அல்­கஸ்­ஸாலி, ‘மிகவும் அவ­தா­னத்­தோடும் கவ­னத்­தோடும் போரிட வேண்­டு­மென்று இவ்­வ­சனம் கூறு­கின்­றது. அதா­வது இறை­யச்சம் மூலம் பெற்ற கடு­மை­யான வரை­ய­றை­களால் அப்­போ­ராட்டம் நெறிப்­ப­டுத்­தப்­பட வேண்டும். அந்தத் தக்வா (இறை­யச்­சத்தை) அடை­வ­தற்கே அவர்கள் அன்றும் இன்றும் போரா­டு­கி­றார்கள். துஷ்­டர்­களைத் தடுத்து நிறுத்­தவும் ஆட்­சிக்­க­திரை வரம்­பு­மீ­றாமல் தடுக்­கவும் மேற்­கொள்­ளப்­படும் இந்தப் போராட்­டத்­துக்கு விதிக்­கப்­படும் இத்­த­கைய நெறி­முறை போல் வேறு எங்கும் காண­மு­டி­யாது.”  என்­கிறார். (அல்­கஸ்­ஸாலி, அல்­இஸ்லாம் வல் இஸ்­திப்­தாதுஸ் ஸியாஸி பக்கம் : 99)

‘சமா­தா­னத்­தையும் சௌஜன்­யத்­தையும் அழிக்க சிலர் முயற்­சிக்­கையில் அவற்றைக் காப்­பாற்ற சில­போது பலாத்­காரம் பிர­யோ­கிக்­கப்­ப­டலாம். சமூ­க­வி­ரோதச் செயல்­களில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்­கெ­தி­ராக பொலிஸார் பலாத்­கா­ரத்தை பிர­யோ­கிப்­பதை இதற்கு உதா­ர­ண­மாகக் கூறலாம். அதனால் சட்­டமும் ஒழுங்கும் பாது­காக்­கப்­படும். இஸ்லாம் சமா­தா­னத்தை வலி­யு­றுத்­தி­னாலும் அடக்­கு­மு­றையை ஒழிக்க அதி­கா­ரத்தை பிர­யோ­கிக்­கும்­படி முஸ்­லிம்­க­ளுக்கு ஊக்­க­ம­ளிக்­கி­றது.’ என ஸாகிர் நாயிக் எழு­து­கிறார்.  (Zakir Naik – Religion of Compassion – Hajj Umra, March, 2003, P: 27)

மத­சு­தந்­தி­ரத்தை ஒவ்­வொரு பிர­ஜையும் அனு­ப­விக்க வேண்டும் என்­ப­தற்­காக மட்­டு­மன்றி, அநீ­திக்கும் அடக்­கு­மு­றைக்கும் உள்­ளா­காமல் சுதந்­தி­ர­மாக வாழும் உரி­மையைப் பொது மக்­க­ளுக்குப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கா­கவும் இஸ்லாம் போராட்­டத்தை அனு­ம­தித்­தது. குறிப்­பாக, இஸ்­லா­மிய அரசை அண்டி வாழ்ந்த சமூக அமைப்­புக்­களில் இடம்­பெற்ற அக்­கி­ர­மங்கள் இஸ்­லா­மிய சமூ­கத்தின் கவ­னத்தை ஈர்த்­தன. முஸ்­லி­மல்­லா­த­வர்­க­ளுக்கு சமத்­து­வமும், நீதியும், பொரு­ளா­தார, சமூ­க­வியல் சுபீட்­சமும் கிட்ட வேண்டும் என்­ப­தற்­காக படைப்­பலம் பிர­யோ­கிக்­கப்­பட்­ட­மையை மறுக்க முடி­யாது. ஏற்­க­னவே, சூரதுன் நிஸாவின் 75வது வசனம் இதற்குப் பொருத்­த­மாகும்.

பல­வீ­னர்­க­ளுக்கு உத­வு­வது இரக்­கத்­தி­னதும் நீதி­யி­னதும் அன்­பி­னதும் வெளிப்­பா­டாகும். இஸ்லாம் வானத்து மதம் என்ற வகையில் பல­சா­லிகள் பல­வீ­னர்­க­ளுக்கு அநீ­தி­யி­ழைப்­பதைக் கண்டு வாளா­தி­ருக்­க­மாட்­டாது. அல்லாஹ் குர்­ஆனில், ‘உலகில் பல­வீ­னப்­ப­டுத்­தப்­பட்ட (அடக்­கப்­பட்ட)வர்­க­ளுக்கும் நாம் அருள்­பா­லித்து அவர்­களைத் தலை­வர்­க­ளாக மாற்­றவும் அவர்­களை அனந்­த­ரக்­கா­ரர்­க­ளாக மாற்­றவும் விரும்­பு­கிறோம்’எனக் கூறு­கிறான். (சூரா அல்­கஸஸ் – 05)

தோமஸ் ஆனோல்ட் மேற்­கூ­றப்­பட்ட கருத்­துக்­களைப் பலப்­ப­டுத்தும் வகையில் பல சான்­று­களை தரு­கிறார். ‘இஸ்­லா­மியப் படை ஜோர்தான் சம­வெ­ளியை அடைந்து, அபூ­உ­பைதா ‘பிஹ்ல்’ என்ற இடத்தில் பாளை­ய­மிட்ட போது அந்த பிர­தே­சத்தில் வாழ்ந்து வந்த கிறிஸ்­தவ குடிகள் அற­புக்­களை விழித்து பின்­வ­ரு­மாறு கடிதம் எழு­தி­னார்கள். ‘முஸ்­லிம்­களே! நாம் பைஸாந்­தி­யர்­களை விட உங்­க­ளையே விரும்­பு­கிறோம். அவர்கள் எமது மதத்தைச் சார்ந்­தோ­ராக இருப்­பினும் சரியே. ஏனெனில், நீங்கள் எம்­முடன் மிகவும் விசு­வா­ச­மாக நடக்­கி­றீர்கள். எம்­மோடு மிக­வுமே இரக்­க­மாக இருக்­கி­றீர்கள். எமக்கு அநீ­தி­ய­ழைப்­ப­தி­லி­ருந்து தவிர்ந்து கொள்­கி­றீர்கள். எங்கள் மீதான அவர்­க­ளது ஆட்­சியை விட உங்­க­ளது ஆட்சி மிக­வுமே சிறந்­தது. ஏனெனில், அவர்கள் எமது பொருட்­க­ளையும் இல்­லி­டங்­க­ளையும் சூறை­யா­டி­யி­ருக்­கி­றார்கள்.’ இவ்­வாறு அக்­க­டிதம் எழு­தப்­பட்­டது. (The Preaching of Islam – T.W Arnold, P – 55)

கலா­நிதி அக்­ரம்­ழியா உமரி எழுதும் போது, ‘ரோமம் மற்றும் தெற்கு, மேற்கு, மத்­திய தரைக்­கடல் பிராந்­தி­யங்­களை உள்­ள­டக்­கி­ய­தாக இருந்த பைஸாந்­திய பேர­ரசில் பர்­பர்கள், கிப்­திகள், அர­பிகள், ஆகியோர் குடி­மக்­க­ளா­யி­ருந்­தனர். அங்கு மன்­ன­ராட்­சியே நில­வி­யது. கிறிஸ்­தவ மதம் மனி­த­னுக்கும் கட­வு­ளுக்கும் இடை­யி­லான தொடர்­பு­களை மட்­டுமே நெறிப்­ப­டுத்­தி­யது. அரசன் அர­ச­வைக்கு வந்தால் யாவரும் சிரம்­சாய்த்­தனர்.

வட்டி, பதுக்கல் என்­பன பொரு­ளா­தா­ரத்தின் அடிப்­ப­டை­க­ளாக இருந்­தன. குடி­மக்கள் மீது தாங்­க­மு­டி­யாத வரிப்­பழு சுமத்­தப்­பட்­டது. சக்­க­ர­வர்த்­தியும் படைத்­த­ள­ப­தி­களும் தேவா­லயக் குருக்­களும் சமூ­தா­யத்தின் உயர் மட்­டத்தில் இருக்க, பெரும் விளை­நி­லங்­களில் ஆயிரக்கணக்­கான அடி­மைகள் அடை­பட்டு போசாக்­கின்மை, மோச­மான வாழ்க்கைத் தரம் என்­ப­வற்றில் உழன்று வந்­தனர். இத்­த­கைய ஏழை­வ­குப்­பினர் பல­த­டவை புரட்­சி­களை செய்ய முனைந்தும் அதில் அவர்கள் வெற்றி பெற­வில்லை. இவர்­களை வேலையில் ஈடு­ப­டுத்­தி­வந்த மத்­தி­ய­த­ர ­வர்க்­கத்­தினர் பெரும் எண்­ணிக்­கை­யி­ன­ராக இருந்­தனர். வர்க்­க­பேதம், பிர­புத்­துவ முறை, சமூக அநீதி என்­பன பைஸாந்­திய சமூக அமைப்பைப் பாதித்து வந்­தன. கொடுமை, இம்சை, மத­ வைராக்­கியம், அறி­வீனம், மூட நம்­பிக்கை என்­ப­வற்றால் தனி­ம­னி­தர்கள் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தனர். கிறிஸ்­தவ மதத்தைப் பொறுத்­த­வரை சமூ­கத்தில் அது­பற்­றிய பலத்த வாதப்­பி­ர­தி­வா­தங்கள் நில­வின. ஹிரகல் மன்னன் தனது கொள்­கையை எகிப்­தியர் மீது திணிக்­கப்போய் தோல்வி கண்ட போது அவர்களைக் கொடுமைப்படுத்தி நெருப்பிலிட்டான்.’ என்கின்றார்.(அக்ரம் ழியா உமரி, அஸ்ருல் கிலாபா அர்ராஷிதா,பக்;-334-338, மஜல்லதுல்  அஸ்ஹர், 2003பெப்ரவரி, பக்: -1916, அல்இஸ்லாமு வகுரபாதுஸ் ஸைப்,பக்;-78)
முஸ்லிம்கள் இந்த உலகத்தில் நீதி, நியாயம், பொருளாதார சுபிட்சம், சமத்துவம், கல்வி, பொருளாதார மேம்பாடு என்பவற்றை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் படைகளை நடத்திச் சென்றார்கள். எனவே தான் ‘கோத்’ வர்க்கத்தவர்களது அடக்குமுறைகளில் இருந்து தம்மை விடுவிக்கும்படி  ஸ்பெயின் நாட்டு யூதர்கள் மூஸா பின் நுஸைருக்கு கடிதம் அனுப்பினார்கள். இந்தியாவுக்கு வந்த முகம்மது பின் காசிம் தனது பணியை முடித்துக் கொண்டு திரும்பிய சந்தர்ப்பத்தில் இந்துக்கள் அவரை எவ்வளவு போற்றினார்கள் என்பதிலிருந்து அவர் இந்தியாவில் எத்தகைய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார் என்பதை புரிந்து கொள்ள முடியுமாக இருக்கும்.
இஸ்லாமிய வரலாற்றில் ஒரு சில தளபதிகளும் ஆட்சியாளார்களும் தப்புச் செய்திருக்கிறார்கள். ஆனால், அவற்றைப் பொதுமைப்படுத்தி நோக்கி அவற்றை இஸ்லாத்தின் அங்கீகாரம் பெற்ற நடவடிக்கைகளாகக் கருதக் கூடாது.

இஸ்லாமிய சேனையின் நோக்கம் ரத்தம் குடிப்பதோ, சுரண்டுவதோ, அடிமைப்படுத்துவதோ அல்ல. தமது உயிர் உடமைகளை கூட தியாகம் செய்து, உலக மக்களுக்கு கண்ணியத்தையும் சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுப்பதே அவர்களது நோக்கமாக இருந்தது.

இந்தியாவிலும் ஸ்பெயினிலும் முஸ்லிம்களது ஆட்சி 800 வருடங்கள் நிலைத்து நின்றது. அங்கு அவர்கள் புகழ்பூத்த நாகரீகமொன்றை கட்டியெழுப்பினர். ஸ்பெயின் தான் மேற்குலக அறிவெழுச்சிக்கு வித்திட்டது என ஆய்வாளர்கள் ஏற்கிறார்கள். கோர்டோவா பல்கலைக்கழகத்தில் கற்றவர்கள் தான் ஐரோப்பிய நகரங்களுக்கு அறிவு தீபத்தை ஏந்திச் சென்றார்கள்.

எனவே, உலகில் ஏகா­தி­பத்­தி­யத்­தையும் கால­னித்­து­வத்­தையும் கொள்­கை­யாகக் கொண்டு பல­வீ­ன­மான சமூ­கங்­களை அடக்­கி­யொ­டுக்கி பிழிந்து வாழ்ந்த ஐரோப்­பி­யர்­க­ளுக்கும், நீதி, நியாயம், சமத்­துவம், பொரு­ளா­தார சுபிட்சம், அறிவு மறு­ம­லர்ச்சி என்­பன உலகின் எல்லாப் பகு­தி­க­ளிலும் ஏற்­பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்­கத்தில் உலகின் பல பகு­தி­க­ளிலும் படை­யெ­டுப்பை மேற்­கொண்ட முஸ்­லிம்­க­ளுக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.