மோசடி வலையில் சிக்கி ஏமாறும் வர்த்தகர்கள்

0 478

நாடு பொரு­ளா­தார நெருக்­க­டியில் சிக்கித் தவிக்­கின்ற நிலையில், பல பில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான பணத்தை மோசடி செய்த குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ள திலினி பிரி­ய­மாலி எனும் பெண்ணின் விவ­காரம் பலத்த பேசு­பொ­ரு­ளா­கி­யுள்­ளது.
கொழும்பு உலக வர்த்­தக மையத்தின் 34 ஆவது மாடியில் நிதி நிறு­வ­ன­மொன்றை நடத்திச் சென்ற இவர், பல பிர­ப­லங்­க­ளிடம் முத­லீடு என்ற பெயரில் பணத்தைப் பெற்று ஏமாற்­றி­ய­தாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

அர­சி­யல்­வா­திகள், கலை­ஞர்கள், வர்த்­த­கர்கள் மாத்­தி­ர­மன்றி பௌத்த பிக்­குகள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்தும் இவர் நிதி மோச­டியில் ஈடு­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

இப் பெண், பிரத்­தி­யேக பாது­காப்பு சேவை ஒன்றை தனது பாது­காப்­புக்­கென அமர்த்­தி­யி­ருந்­த­தா­கவும் விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது.

வெளி­நா­டு­களில் நிதி முத­லீடு, வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்கு நிதி முத­லீடு ஆகி­ய­வற்­றுக்­காக பணத்தைப் பெற்று அதற்­காக அதிக வட்­டியை வழங்­கு­வ­தாக கூறியே பிர­பல வர்த்­த­கர்கள், அர­சி­யல்­வா­திகள், மருத்­து­வர்கள் உள்­ளிட்ட தரப்­பி­ன­ரிடம் இவர் நிதி மோச­டியில் ஈடு­பட்­டுள்ளார்.

இதே­வேளை, திலினி பிரி­ய­மா­லியின் மோச­டியில் சிக்­குண்­ட­தாக கூறுப்­படும் தரப்­பினர், குற்றப் புல­னாய்வு திணைக்­க­ளத்தில் கடந்த சில தினங்­க­ளாக முறைப்­பா­டு­களை பதிவு செய்து வரு­கின்­றனர்.

இவ­ரது மோச­டியில் சிக்­குண்­ட­தாக கூறப்­படும் பல­ரினால் தாக்கல் செய்­யப்­பட்ட முறைப்­பாட்­டிற்கு அமைய, குறித்த பெண்ணும் அவ­ரது கணவர் என அறி­யப்­படும் நபர் ஒரு­வரும் குற்றப் புல­னாய்வு திணைக்­கள அதி­கா­ரி­க­ளினால் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

அத்­துடன் பொது மக்கள் எவ­ரேனும் இந்த நிறு­வ­னத்தில் முத­லீடு செய்­தி­ருக்கும் பட்­சத்தில் அது தொடர்பில் முறைப்­பாட்டை பதிவு செய்­யு­மாறும் பொலிஸார் கோரிக்கை விடுக்­கின்­றனர்.

இருப்­பினும் திலினி பிரி­ய­மா­லிக்குச் சொந்­த­மான ஏழு வர்த்­தக நிறு­வ­னங்­களில் தமது பணத்தை முத­லீடு செய்த பல அர­சி­யல்­வா­தி­களும் பிர­ப­லங்­களும், பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக பொலிஸில் முறைப்­பாடு செய்­வ­தற்கு தயங்­கு­வ­தாக, குற்றப் புல­னாய்வு திணைக்­க­ளத்­தினர் கொழும்பு கோட்டை நீதவான் நீதி­மன்­றத்தில் நேற்று சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

மோச­டி­யான முறையில் பெறப்­பட்ட பணத்தில் வரு­மானம் ஈட்­டாமல், சந்­தே­க­நபர் எவ்­வாறு 41 இலட்சம் ரூபாயை மாதாந்தம் செல­விட்டார் என்­பது குறித்த தகவல் இது­வ­ரையில் வெளி­வ­ர­வில்லை என்றும் சீ.ஐ.டியினர் அறிக்கை சமர்ப்­பித்­துள்­ளனர்.
உண்­மையில் இப் பெண் அர­சியல் பிர­ப­லங்­களின் ஆத­ர­வு­ட­னேயே இந்த மோச­டி­களைச் செய்­துள்­ளார் என்பதை இது­வரை வெளி­வந்­துள்ள தக­வல்கள் மூலம் ஊகிக்க முடி­கி­றது. மாத்­தி­ர­மின்றி, சில மத தலை­வர்­களும் இவ­ரது மோச­டியில் சம்­பந்­தப்­பட்­டுள்­ளனர் அல்­லது அவ­ரிடம் ஏமாந்­துள்­ளனர் என்ற தக­வல்­களும் கசிய ஆரம்­பித்­துள்­ளன.
பிர­பல இளம் அர­சி­யல்­வா­தி­யொ­ருவர் இவ­ரது இந்த மோசடி வர்த்­த­கத்­திற்கு உடந்­தை­யாக இருந்­துள்­ள­தா­கவும் விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது. எனினும் பொலிசார் அவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­பார்கள் என்­பது சந்­தே­கமே.

இலங்­கையைப் பொறுத்­த­வரை சகல வித­மான சட்­ட­வி­ரோத செயற்­பா­டு­களும் அர­சி­யல்­வா­தி­க­ளது அனு­ச­ர­ணை­யு­ட­னேயே இடம்­பெ­று­கின்­றன. இவ்­வா­றான சட்­ட­வி­ரோத செயற்­பா­டுகள் வெளிச்­சத்­துக்கு வரும்­போது யாரேனும் ஒரு­வரை சிக்­க­வைத்­து­விட்டு அவர்கள் தப்பி விடு­கின்­றனர். திலி­னியின் விவ­கா­ரமும் அவ்­வா­றான ஒன்­றா­கவே தெரி­கி­றது.

இதில் கவ­லைக்­கு­ரிய விடயம் என்­ன­வெனில், குறித்த பெண்­ணிடம் அதிக பணத்தை முத­லிட்டு ஏமாந்­த­வர்­களில் பிர­பல முஸ்லிம் அர­சி­யல்­வாதி ஒரு­வரும் மேலும் சில முஸ்லிம் வர்த்­த­கர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். வட்­டியை இஸ்லாம் ஹரா­மாக்­கி­யி­ருக்க, அதிக வட்­டியைப் பெறும் நோக்கில் இவ்­வாறு பல மில்­லியன் கணக்­கான ரூபாய்­களை வழங்கி ஏமாந்­தி­ருக்­கின்­றமை கண்­டிக்­கத்­தக்க செயற்பாடாகும்.

ஆகுமான முதலீடுகளுக்கான எவ்வளவோ வழிகள் இருக்க, இவ்வாறு ஒரு பெண்ணின் வலையில் வீழ்ந்து பணத்தை இழந்துள்ளமை வெட்கக் கேடானதாகும். இந்த விவகாரத்தை முன்னிறுத்தி முஸ்லிம் வர்த்தகர்கள் மத்தியில் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும். பண வசதிபடைத்தோர் ஏழை எளியவர்களுக்கு வாரி வழங்குவதை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறான மோசடிக்காரர்களின் வலையில் சிக்காதிருக்குமாறு அறிவூட்டப்பட வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.