இஸ்லாம் ஒரு புற்றுநோய் என வெளியிட்ட கருத்து தொடர்பான வழக்கு: ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துங்கள்

கொழும்பு மேலதிக நீதிவான் சிலினி பெரேரா உத்தரவு

0 349

(எம்.எப்.எம்.பஸீர்)
இஸ்லாம் ஒரு புற்று நோய் என ஞான­சார தேரர் வெளி­யிட்ட கருத்­துக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கில், தொடர்ச்­சி­யாக மன்றில் ஆஜ­ரா­காத பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை உட­ன­டி­யாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்­யு­மாறு கொழும்பு நீதிவான் நீதி­மன்றம் கடந்த வெள்ளிக்கிழமை பிடி­யாணை பிறப்­பித்­தது. கொழும்பு மேல­திக நீதிவான் சிலினி பெரேரா இதற்­கான உத்­த­ரவைப் பிறப்­பித்தார்.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் பொரளை ஜும் ஆ பள்­ளி­வா­சலின் நிர்­வாக சபை உறுப்­பினர் ரிகாஸ் ஹாஜியார் முன்வைத்த முறைப்­பாட்­டுக்கு அமைய, கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் மேல­திக நீதிவான் (3 ஆம் இலக்க அறை) முன்­னி­லையில் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக 58559/3/22 எனும் இலக்­கத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த வழக்கில் கடந்த ஜூன் 8 ஆம் திகதி சாட்சி விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. அதன்­படி முறைப்­பாட்­டாளர் தரப்பின் முதல் சாட்­சி­யாளர் நீதி­மன்றில் சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார்.

இந் நிலையில் இது குறித்த விவ­கார வழக்கு நேற்று மீள விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டது.
இதன்­போது மன்றில் ஞான­சார தேரர் ஆஜ­ரா­கி­யி­ருக்­க­வில்லை.
ஞான­சார தேர­ருக்கு பிணை கையெ­ழுத்­திட்­ட­வர்­களும் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருக்­க­வில்லை. இந் நிலையில், மத அனுஷ்­டானம் ஒன்றில் கலந்­து­கொள்­வதால் ஞான­சார தேரர் நேற்று மன்றில் ஆஜ­ரா­கமாட்டார் என நீதி­மன்றில் அவ­ரது சட்­டத்­த­ர­ணிகள் குறிப்­பிட்­டனர்.

இதன்­போது, பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ருக்­காக மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­க­ளான கஸ்­ஸாலி ஹுசைன் மற்றும் எம்.ஐ.எம். நளீம் ஆகியோர் இது தொடர்பில் தமது கடும் ஆட்­சே­ப­னத்தை முன் வைத்­தனர்.

‘கடந்த தவ­ணையின் போதும் பிர­தி­வா­தி­யான ஞான­சார தேரர் மன்றில் ஆஜ­ரா­க­வில்லை. அப்­போது மத அனுஷ்­டானங்­க­ளுக்­காக ஜப்பான் சென்­றுள்­ள­தாக கூறப்­பட்­டது. எனினும் அப்­போது நாம் ஆட்­சே­பனை முன் வைக்­க­வில்லை.

இன்றும் மத அனுஷ்­டானங்கள் கார­ண­மாக ஆஜ­ராக முடி­யாது என கூற­ப்ப­டு­கின்­றது. வழக்கின் சாட்சி விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில், பிர­தி­வா­தியின் இந் நட­வ­டிக்­கை­களை ஏற்க முடி­யாது. அவரைக் கைது செய்ய பிடி­யாணை பிறப்­பிக்­கவும்.’ என அவர்கள் கோரினர்.

இதனை ஏற்­றுக்­கொண்ட நீதிவான் சிலிசி பெரேரா, ஞான­சார தேரர் மன்றில் தொடர்ச்­சி­யாக ஆஜ­ரா­காமையை கருத்தில் கொண்டு அவரை உட­ன­டி­யாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்­யு­மாறு கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு உத்தரவிட்டார். இதனைவிட ஞானசார தேரரின் பிணையாளர்களுக்கும் மன்றில் ஆஜராக உத்தரவிட்ட நீதிவான் சிலினி பெரேரா, வழக்கை எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.