அஹ்னாப் விவகார வழக்கு: நவம்பர் 16 இல் விளக்க மாநாடு

0 265

(எம்.எப்.ம்.பஸீர்)
“நவரசம்” என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டு, பின்னர் அடிப்படைவாதத்தை போதனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர் தொடர்­பி­லான வழக்கை, ‘முன் விளக்க மாநாட்­டுக்கு’ (pre trial conference) மீள திகதி குறித்து புத்­தளம் மேல் நீதி­மன்றம் எதிர்­வரும் நவம்பர் 16 ஆம் திக­திக்கு ஒத்தி வைத்­தது.

புத்­தளம் மேல் நீதி­மன்ற நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொட இதற்­கான உத்­த­ரவை பிறப்­பித்தார்.

இந்த விவ­காரம் குறித்த வழக்கு விசா­ர­ணைகள் புத்­தளம் மேல் நீதி­மன்றில் கடந்த 10 ஆம் திகதி விசா­ர­ணைக்கு வந்­தி­ருந்­தது.

இதன்­போது அஹ்னாப் ஜஸீம் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணிகள் மற்றும் அரச சட்­ட­வா­தியின் இணக்­கத்­துடன் இந்த திகதி தீர்­மா­னிக்­கப்பட்டுள்­ளது.

அத்­துடன் சுமார் 579 நாட்­களின் பின்னர் கடந்த 2021 டிசம்பர் 16 ஆம் திகதி 5 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான 3 சரீரப் பிணை­களில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்த, இவ்­வ­ழக்கின் பிர­தி­வா­தி­யான அஹ்னாப் ஜஸீமும் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.

இந்த வழக்கில் பிர­தி­வாதி அஹ்னாப் ஜஸீ­முக்­காக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் ஆஜ­ராகும் நிலையில் வழக்குத் தொடுநர் சார்பில் அரச சட்­ட­வாதி உதார கரு­ணா­தி­லக ஆஜ­ரா­கின்றார்.

கடந்த 2020 மே 16 ஆம் திகதி இரவு 8 மணி­ய­ளவில், சிலா­வத்­துறை, பண்­டா­ர­வெ­ளியில் அமைந்­துள்ள வீட்டில் வைத்து அஹ்னாப் ஜஸீம் கைது செய்­யப்பட்­டி­ருந்தார். முதலில் கோட்டை நீதி­மன்றில் உள்ள பீ 13101/19 வழக்கு தொடர்பில் அஹ்னாப் கைது செய்­யப்­பட்­ட­தாக கூறப்­பட்­டாலும், கடந்த 2021 மார்ச் 3 ஆம் திகதி பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் கோட்டை நீதி­மன்றின் குறித்த வழக்கில் அஹ்னாப் சந்­தே­க­ந­ப­ரில்லை என நீதி­மன்றில் அறி­வித்­தி­ருந்தார்.

இந் நிலை­யி­லேயே அவ­ருக்கு எதி­ராக கொழும்பு 8 ஆம் இலக்க நீதிவான் நீதி­மன்றில் பீ. 44230/20 எனும் இலக்­கத்தின் கீழ் விசா­ரணை தக­வல்கள் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. பின்னர் அதனை மையப்­ப­டுத்தி சட்ட மா அதிபர் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக கூறி குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கே தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.