2020 இலங்கை ஹஜ் தூதுக்குழுவுக்கு அரசாங்க நிதி பயன்படுத்தப்படவில்லை

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம்

0 322

(றிப்தி அலி)
இலங்­கையைச் சேர்ந்த ஹஜ் யாத்­தி­ரி­கர்க­ளுக்கு உத­வு­வ­தற்­காக சென்ற 2022 ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் தூதுக்­குழு, அர­சாங்­கத்தின் எந்­த­வொரு நிதி­யி­னையும் பயன்­ப­டுத்­த­வில்லை என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தெரி­வித்­தது.

கடந்த வரு­டங்­களைப் போலல்­லாது, இந்த வருடம் ஹஜ் தூதுக்­கு­ழுவின் உறுப்­பி­னர்கள், அவர்­களின் சொந்தப் பணத்­தி­லேயே ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்ற சென்­ற­தாக திணைக்­க­ளம் தெரி­வித்துள்ளது.

சுமார் இரண்டு வாரங்கள் தங்­கி­யி­ருந்த இந்த தூதுக் குழு­வி­ன­ருக்­கான விமான பயணச் சீட்டு, தங்­கு­மிட செலவு, உணவு உள்­ளிட்ட அனைத்து செல­வு­க­ளையும் அவர்­களே மேற்கொண்­ட­­தாக அவர் கூறினார்.

இந்த வரு­டத்­திற்­கான ஹஜ் கடமைகளுக்கு அர­சாங்­கத்­திற்கு ஏற்­பட்ட செல­வுகள் தொடர்பில் சமர்ப்­பிக்­கப்­பட்ட தக­வ­ல­றியும் விண்­ணப்­பத்­திற்கு வழங்­கப்­பட்ட பதி­லிலேயே முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

புத்­த­சா­சன மற்றும் சமய விவ­கார அமைச்சர் விதுர விக்­ர­ம­நா­யக்­கவின் அங்­கீ­கா­ரத்­துடன் சுற்­றாடல் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மர்ஜான் பழீல், இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் அர்ஹம் உவைஸ், சவூதி அரே­பி­யா­விற்­கான இலங்கை தூதுவர் பீ.எம். அம்சா மற்றும் ஜித்­தா­விற்­கான இலங்கை கொன்­சி­யூலர் ஜெனரல் பலாஹ் மௌலானா ஆகியோர் இந்த வருட ஹஜ் தூதுக்­கு­ழுவில் இடம்­பி­டித்­துள்­ளனர்.

இதே­வேளை, புத்­த­சா­சன மற்றும் சமய விவ­கார அமைச்­ச­ராக முன்னாள் பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ செயற்­பட்ட போது கடந்த 2021ஆம் ஆண்டு நிய­மிக்­கப்­பட்ட ஹஜ் குழுவே இன்று வரை செயற்­ப­டு­வ­தா­கவும், புதிய குழு எதுவும் இது­வரை நிய­மிக்­கப்­ப­ட­வில்லை எனவும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தெரி­வித்­தது.
2021ஆம் ஆண்டு நிய­மிக்­கப்­பட்ட ஹஜ் குழுவே இன்று வரை செயற்­ப­டு­வ­தா­கவும், புதிய குழு எதுவும் இது­வரை நிய­மிக்­கப்­ப­ட­வில்லை எனவும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தெரி­வித்­தது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.