பன்சலையில் தீர்த்துவைக்கப்பட்ட கிந்தோட்டை பள்ளிவாசல் பிணக்கு

வக்பு சபை முறைப்பாடு நிலுவையில்

0 932

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பள்­ளி­வா­சலில் மசூரா மூலம் தீர்த்­துக்­கொள்­ளப்­பட வேண்­டிய கருத்து முரண்­பா­டு­க­ளுடன் கூடிய பிரச்­சி­னை­யொன்று பன்­சலை வரை சென்று தற்­கா­லி­க­மாக சமா­தானம் செய்து வைக்­கப்­பட்­டுள்­ளது.’

இப்­பள்­ளி­வா­சலின் பிரச்­சினை ஏற்­க­னவே வக்பு சபையில் முறை­யி­டப்­பட்டு தற்­போது விசா­ர­ணையின் கீழ் உள்­ளது.

கிந்­தோட்ட கடற்­க­ரைக்கு அண்­மை­யி­லுள்ள அவ்­லியா மலைப்­பள்­ளியின் பிரச்­சி­னையே கிந்­தோட்டை துன்­மஹல் விகாரை வரை சென்­றுள்­ளது. துன்­மஹல் விகாரை அதி­பதி வீர­கெட்­டிய சஞ்­சய தேரர் பள்­ளி­வா­சலில் முரண்­பட்­டுக்­கொண்ட இரு தரப்­பி­ன­ரையும் அழைத்து பிரச்­சினை தொடர்பில் விசா­ரணை நடாத்தி இரு தரப்­பி­ன­ருக்கும் ஆலோ­சனை வழங்­கினார்.

எனினும் இந்த முரண்­பா­டுகள் பள்­ளி­வாசல் சம்­பி­ர­தாய முஸ்­லிம்­க­ளுக்கும் பள்­ளி­வாசல் நிர்­வாக சபையில் அங்கம் வகிக்கும் இளை­ஞர்­க­ளுக்கும் இடை­யி­லான கொள்கை ரீதி­யான பிரச்­சினை அல்ல எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் கிந்­தோட்டை அவ்­லி­யா­மலை பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் முன்னாள் உறுப்­பினர் ஒருவர் தெரி­விக்­கையில்,

‘இப்­பி­ரச்­சி­னைக்கு கார­ண­மா­ன­வர்கள் ஒரு குடும்­பத்­தி­ன­ராவர். இவர்கள் அயல் பிர­தே­சத்­த­வர்­க­ளாவர். இவர்கள் பிர­தேச தக்­கி­யாக்­க­ளி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­வர்கள்.
இவர்கள் அவ்­லியா மலைப் பள்­ளி­வா­ச­லுக்கு வந்து தமது சமய வழி­பா­டு­களை நடாத்­து­வ­தற்கு அனு­மதி கேட்­டார்கள். அவர்­க­ளுக்கு கிழ­மைக்கு ஒரு நாள் அனு­மதி வழங்­கப்­பட்­டது. பின்பு அதனை கிழ­மைக்கு இரண்டு தினங்­க­ளாக அதி­க­ரித்துக் கொண்­டார்கள். ஒவ்­வொரு மாதமும் கொடி­யேற்­று­வார்கள். இதனால் முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன. பிணக்­குகள் பல தட­வைகள் தீர்த்து வைக்­கப்­பட்­டுள்­ளன. காலி­ பொ­லிஸில் பல தட­வைகள் முறைப்­பாடும் செய்­யப்­பட்­டுள்­ளன.

இந்தக் குழுவின் தலைவரது நண்பர் ஒருவர் வீர­கெட்­டிய சஞ்­சய தேர­ருக்கு நெருக்­க­மா­னவர். அவர் மூலமே நாங்கள் பன்­ச­லைக்கு அழைக்­கப்­பட்டோம். குறிப்­பிட்ட குழு­வி­னரும் ஏற்­க­னவே அங்கு அழைக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். சம்­பந்­தப்­பட்ட குழுவின் பெண் அங்­கத்­த­வர்­களும் பன்­ச­லைக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்­தார்கள்.
பன்­ச­லையின் பிர­தம குரு வீர­கெட்­டிய சஞ்­சய தேரர் இரு தரப்­பி­ன­ரி­டமும் விட­யங்­களைக் கேட்­ட­றிந்தார்.

இரு தரப்­பி­னரும் சண்­டை­யிட்டுக் கொள்­வ­தில்லை என்று புனித குர்­ஆனின் முன்­னி­லையில் உறுதி பூணுங்கள் என்று தேரர் சமா­தா­னப்­ப­டுத்­தினார் என்றார்.
இதே­வேளை, அவ்­லியா மலை பள்­ளி­வா­சலில் இரு சாரா­ருக்­கு­மி­டையில் இடம்­பெற்று வரும் முரண்­பா­டுகள் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் ஏற்கனவே வக்பு சபையில் இடம்­பெற்று வரு­கி­றது.

அடுத்த விசா­ரணை எதிர்­வரும் 27ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.