‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணியின் பரிந்­து­ரை­களை ஏற்­பது அரசின் பொறுப்பு

அறிக்கை எந்த மதத்தையும் இலக்காக கொண்டதல்ல என்கிறார் ஞானசாரர்

0 401

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வினால் நிய­மிக்­கப்­பட்ட பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரின் தலை­மை­யி­லான ‘ஒரே நாடு ஒரே சட்டம்’  எனும் ஜனா­தி­பதி செய­ல­ணியின் இறுதி அறிக்­கையின் பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்­து­வ­தில்லை என்று தற்­போ­தைய அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்ள நிலையில் ஒரே நாடு ஒரே சட்டம் செய­ல­ணியின் இறுதி அறிக்­கையில் எந்­தவோர் இனத்­தையும் மதத்­தையும் இலக்­காகக் கொண்ட பரிந்­து­ரைகள் உள்­ள­டங்­கி­யில்லை என அதன் தலைவர் ஞான­சார தேரர் தெரி­வித்­துள்ளார்.

அதனால் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணியின் பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்­து­வது அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும் எனவும் அவர் கூறி­யுள்ளார்.

ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனா­தி­பதி செய­ல­ணியின் பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்­தப்­போ­வ­தில்லை என மறுத்­துள்ள நிலையில் அவரின் தீர்­மா­னத்­துக்கு பதி­ல­ளிக்கும் வகையில் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யிலேயே ஞான­சார தேரர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

செய­ல­ணியின் பரிந்­து­ரை­க­ளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உட்­பட சில அர­சியல் கட்­சிகள் எதிர்ப்புத் தெரி­வித்­துள்­ள­மையால் அரசு இந்தத் தீர்­மா­னத்தை எடுத்­துள்­ளது. என்­றாலும் அறிக்­கையில் தவ­றான பரிந்­து­ரைகள் எதுவும் உள்­ள­டங்­கி­யில்லை. அப்­ப­ரிந்­து­ரைகள் மிகவும் சிறந்­த­வைகள். நல்­லதோர் அறிக்கை. அறிக்கை எந்­தவோர் மதத்­தையோ குறிப்­பிட்ட இனத்­தையோ இலக்கு வைத்து தயா­ரிக்­கப்­ப­ட­தல்ல. அதனால் அறிக்­கையை விமர்­சிப்­ப­வர்கள் முதலில் அறிக்­கையில் உள்­ள­டங்­கி­யுள்­ள­வற்றை வாசித்துப் பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரி­வித்­துள்­ள­தா­வது, ‘அறிக்­கையில் முஸ்லிம் சமூகம் உட்­பட சிறு­பான்­மை­யி­னரின் சில சட்­டங்­களை இல்­லா­தொ­ழிக்கும் வகையில் பரிந்­து­ரைகள் உள்­ள­டங்­கி­யுள்­ள­தாக சில கட்­சிகள் குற்றம் சுமத்­தி­யுள்­ளன. ஆனால் இவ்­வா­றான பரிந்­து­ரைகள் அறிக்­கையில் உள்­ள­டங்­கி­யில்லை. பரிந்­து­ரைகள் அனைத்து மதங்கள் மற்றும் இனங்­க­ளுக்கு பொருந்தும் வகை­யிலே முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. எனவே அர­சாங்கம் இப்­ப­ரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்த வேண்டும்.

சில அர­சியல் கட்­சிகள் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்­டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் என்­பன ஒரே நாடு ஒரே சட்டம் ஜனா­தி­பதி செய­ல­ணியின் இறுதி அறிக்கை தொடர்­பாக அண்­மையில் எதிர்­ம­றை­யான கருத்­து­களை வெளி­யிட்­டி­ருந்­தன. இதே­வேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் இந்த அறிக்­கையை நீக்­கி­வி­டு­மாறு கோரி­யுள்­ளது என்றார்.

இந்­நி­லையில் தற்­போ­தைய நாட்டின் நெருக்­க­டி­யான நிலையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற எண்ணக் கருவை செயற்­ப­டுத்­து­வ­தை­விட அதிக கவனம் செலுத்­தப்­ப­ட­வேண்­டிய பல முக்­கிய பிரச்­சி­னைகள் உள்­ளன. அவை முதலில் தீர்க்­கப்­பட வேண்­டு­மென பொது­வான கருத்து நில­வு­கி­றது.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனா­தி­ப­தி செய­ல­ணியின் இறுதி அறிக்கை கடந்த 2022 ஜூன் மாதம் 29ஆம் திகதி அதன் தலைவர் ஞான­சார தேர­ரினால் அப்­போ­தைய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

8 அத்­தி­யா­யங்­களைக் கொண்ட இவ்­வ­றிக்கை 43 பரிந்­து­ரை­களை உள்­ள­டக்­கி­ய­தாகும். நாட்டின் அனைத்துப் பிர­தே­சங்­க­ளையும் உள்­ள­டக்­கிய வகையில் புத்­தி­ஜீ­விகள், மதக் குழுக்கள், அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்கள், சட்ட வல்­லு­னர்கள், பல்­வேறு சமூக பிர­தி­நி­திகள்,பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக அமைப்புகள், பல்கலைக்கழக பேராசிரியர்களை உள்ளடக்கி 1200 பேரின் சாட்சியங்கள் இதில் உள்ளடங்கியுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.