மாணவர்களுக்கு பெளத்த தர்மம் போதிக்கும் புர்கானியா!

0 369

ஏ.ஆர்.ஏ.பரீல்

நாட்டில் இன­வாதம் கொடி­கட்டிப் பறக்கும் நிலையில் அகிம்சை கருணை, அன்பு, சகோ­த­ரத்­து­வத்தைப் போதிக்க வேண்­டிய பெளத்த குரு­மார்­களில் சிலர் இன­வா­தத்­துக்கு தூப­மிட்டு வரும் நிலையில் கட்­டுக்­கலை புர்­கா­னியா அர­புக்­கல்­லூரி இன்று புதி­யவோர் அத்­தி­யா­யத்தை புரட்­டி­யுள்­ளது.

கட்­டுக்­கலை ஜும்­ஆ­பள்ளிவாச­லுடன் இணைந்து புர்­கா­னியா அர­புக்­கல்­லூரி இன மத நல்­லி­ணக்­கத்­துக்கு இன்று முன்­மா­தி­ரி­யாகத் திகழ்­கி­றது.இக்­கல்­லூ­ரியின் முன்­மா­திரி சமா­தா­னத்தை, நல்­லி­ணக்­கத்தை, நாட்டின் அபி­வி­ருத்­தியை விரும்பும் மக்­களால் பெரிதும் பாராட்­டப்­ப­டு­கி­றது.

இக்­கல்­லூ­ரியில் நாட்டில் நாலா பக்­கங்­க­ளையும் சேர்ந்த சுமார் 100 மாண­வர்கள் கல்வி பயில்­கி­றார்கள். இந்த அர­புக்­கல்­லூ­ரியில் பயிலும் அனைத்து மாண­வர்­க­ளுக்கும் பெளத்த மதம் போதிக்­கப்­ப­டு­கி­றது. அர­புக்­கல்­லூ­ரியின் நிர்­வாக சபை, கட்­டுக்­கலை ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­துடன் இணைந்து மேற்­கொண்ட தீர்­மா­னத்­தி­னை­ய­டுத்தே அங்கு பெளத்த மதம் போதிக்­கப்­ப­டு­கி­றது.

‘‘எங்­க­ளது பிள்­ளை­க­ளுக்கு பெளத்த மதம் போதிப்­பதா? ஏன் நாங்கள் பெளத்த மதத்­தைப்­ப­டிக்­க­வேண்டும். எமது நாட்டில் பெளத்­தர்­களால் முஸ்­லிம்கள் வெறுக்­கப்­பட்­ட­வர்கள். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக,,காதி நீதி­மன்­றங்­க­ளுக்கு எதி­ராக, எமது ஹலால் உணவு மற்றும் வங்கி முறைக்கு எதி­ராக வீதியில் இறங்கி ஆர்ப்­பாட்­டங்கள் செய்­த­வர்கள். அவர்­க­ளது மதத்தை எங்கள் பிள்­ளை­க­ளுக்குப் போதிப்­பதா?’’ என்று எம்மில் பலர் கேள்வி எழுப்­பலாம். ஆனால் முஸ்­லிம்கள் நாம் சகோ­த­ரத்­து­வத்­தையும், நல்­லி­ணக்­கத்­தையும் விரும்­பு­ப­வர்கள், ஏனைய மதங்­களை வெறுப்­ப­தி­லி­ருந்தும் நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்றே புனித குர்­ஆனும் தெரி­விக்­கி­றது.

எமது மாண­வர்கள் பெளத்த தர்­மத்தை மாத்­தி­ர­மல்ல ஏனைய மதங்கள் பற்­றியும் அறிந்து கொள்­வது, தெளிவு பெற்றுக் கொள்­வது இக்­கால சூழ்­நி­லையில் அவ­சி­ய­மாகும். இதனை உணர்ந்து புர்­கா­னியா அர­புக்­கல்­லூரி செயலில் இறங்­கி­யுள்­ளமை வர­வேற்­கத்­தக்­க­தாகும்.

இக்­கல்­லூ­ரியில் திரி­பி­ட­கம் மற்றும் அபிதர்­ம­ம் ஆகி­ய­வற்­றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு பெளத்த தர்மம் ஒரு பாட­மாகப் போதிக்­கப்­ப­டு­வ­தாக அர­புக்­கல்­லூ­ரியின் நிர்­வாக சபை தெரி­விக்­கி­றது.

அத்­தோடு திரி­பி­ட­கம் மற்றும் புனித குர்­ஆ­னுக்­கி­டை­யி­லுள்ள சம­மான போத­னைகள் மற்­றும் இரு சம­யங்­க­ளுக்­கி­டையில் உள்ள ஒற்­றுமை தொடர்­பா­கவும் மாண­வர்கள் தெளி­வூட்­டப்­ப­டு­கின்­றனர்.

அர­புக்­கல்­லூ­ரிக்கு பெளத்த குருமார் விஜயம்
புர்­கா­னியா அர­புக்­கல்­லூ­ரியில் நடை­மு­றை­யி­லுள்ள புதிய கல்விப் போத­னைகள், பாடங்கள் தொடர்பில் அறிந்து கொள்­வ­தற்­காக பெளத்த குரு­மார்கள் கட்­டு­கலை ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாக சபை­யினால் கடந்த மாதம் அழைக்­கப்­பட்­டி­ருந்­தார்கள்.
அழைப்­பி­த­ழுக்கு அமைய உட­ரட்ட அம­ர­புர நிகா­யாவின் அநு­நா­யக்க தேரர் கோன­க­ல­கல உதித தேரர் உட்­பட தேரர்கள் 60 பேர் புர்­கா­னியா அர­புக்­கல்­லூ­ரிக்கும், கட்­டுக்­கலை ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்கும் விஜயம் செய்­தனர்.

அங்கு விஜயம் செய்து கல்­லூ­ரியின் வாசி­க­சாலை, விரி­வுரை மண்­டபம் மற்றும் பள்­ளி­வாசல் வளா­கத்தைப் பார்­வை­யிட்ட கோன­க­ல­கல உதி­த­தேரர் இதே­போன்­று பெளத்த விகா­ரை­களில் மதத்­த­லங்­களில் இடம் பெறும் சமய நிகழ்­வு­களை பார்­வை­யிட்டு தெளி­வுகள் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக மெள­ல­விகள், பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் மற்றும் அர­புக்­கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு அழைப்­பு­வி­டுத்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

முஸ்லிம் மாண­வர்­களும் மெள­ல­வி­களும், கல்­லூரி உஸ்­தாத்­மார்­களும் பெளத்த மதம் மற்றும் வழி­பா­டுகள் தொடர்பில் தெளி­வுகள் பெற்­றுக்­கொள்­வ­தற்கு இது சிறந்த வாய்ப்­பாக அமையும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

முப்­பது வரு­ட­கால யுத்தம் எம்மை நூற்­றாண்­டுகள் பின் தள்­ளி­விட்­டது என்­பதை எவ­ராலும் மறுக்க முடி­யாது. நாட்டில் நடந்து முடிந்­து­விட்ட இன­ரீ­தி­யி­லான கல­வ­ரங்கள் எம்மை முன்­னோக்கி நக­ர­வி­ட­வில்லை. எம்மால் தொடர்ந்தும் இவ்­வாறு பிள­வு­பட்டு வாழ முடி­யாது. நாம் முன்­னோக்கி நகர வேண்டும். இதற்கு நாட்டில் மத நல்­லி­ணக்கம் மற்றும் இன­ நல்­லி­ணக்கம் பூத்­துக்­கு­லுங்க வேண்டும்.

இதற்­கான ஓர் ஆரோக்­கிய நகர்­வா­கவே புர்­கா­னியா அர­புக்­கல்­லூரியின் இந்­தத் திட்டம் அமைந்­துள்­ள­து.

இக்­கல்­லூ­ரியில் பெளத்த மதம் மாத்­தி­ர­மல்ல இந்து மற்றும் கிறிஸ்­தவ மதங்­களும் போதிக்­கப்­ப­டு­வ­தாக கல்­லூரி நிர்­வாகம் தெரி­விக்­கி­றது.

கல்­லூ­ரியின் வர­லாறு
கண்டி கட்­டுக்­க­லையில் அமைந்­துள்ள மத நல்­லி­ணக்­கத்தின் சின்­ன­மாகத் திகழும் புர்­கா­னியா அர­புக்­கல்­லூரி 1989 ஆம் ஆண்டு ஒக்­டோபர் 14 ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்­டது. கட்­டுக்­கலை வை.எம்.எம்.ஏ. அமைப்பின் முயற்­சி­யினால் இக்­கல்­லூரி நிறு­வப்­பட்­டது. இன்­று­வரை கல்­லூ­ரியை இயங்கச் செய்து கொண்­டி­ருப்­பதும் இவ்­வ­மைப்பே.

அன்­ப­ளிப்­புகள் மூலம் கிடைக்கும் உத­விகள் மூலம் இக்­கல்­லூரி இயங்கி­ வ­ரு­கி­றது. உள்­நாட்டு உத­விகள் மாத்­தி­ரமே பெற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. அரசர் காலத்தில் கட்­டுக்­கலை ஜும்ஆ பள்ளி வாச­லுக்கு வழங்­கப்­பட்ட காணி­யிலேயே கல்­லூரி அமைந்­துள்­ளது.
நாட்டின் பல பகு­தி­க­ளி­லி­ருந்தும் சுமார் 100 மாண­வர்கள் இங்கு பயில்­கி­றார்கள். ஒவ்­வொரு வரு­டமும் ரமழான் மாதத்­துக்கு முன்பு நேர்­மு­கப்­ப­ரீட்­சை நடாத்­தப்­பட்­டு கல்­லூ­ரிக்கு மாண­வர்கள் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டு­வ­தாக பிரதி அதிபர் ஏ.ஏ.எம்.ரயீஸ் முப்தி தெரி­விக்­கிறார்.

மேலும் அவர் தெரி­விக்­கையில், 17 உஸ்­தாத்­மார்கள் இங்கு கட­மை­யாற்­று­கி­றார்கள். குர்ஆன் மன­ன­ப­குதி, ஷரீ­ஆ பகுதி என இரு பிரி­வு­க­ளாக போத­னைகள் இடம் பெறு­கின்­றன. மாண­வர்­க­ளுக்கு சிங்­கள மொழியும் போதிக்­கப்­ப­டு­கின்­றது.

இங்கு கடந்த 20 வருட கால­மாக க.பொ.த. சாதா­ரண பரீட்சை மற்றும் உயர்­தர பரீட்­சைக்கு மாண­வர்கள் தயார்­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்கள். இங்கு படித்த மாண­வர்­க­ளுக்கு தென் கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தில் அனு­மதி கிடைத்து அவர்கள் பட்­ட­தா­ரி­க­ளாக வெளி­யே­றி­யி­ருக்­கி­றார்கள். இப்­போதும் இங்கு படித்துக் கொடுத்த ஓர் ஆசி­ரியர் தென் கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் படித்துக் கொண்­டி­ருக்­கிறார்.

இங்கு படித்த மாண­வர்கள் எகிப்து மற்றும் மதீ­னா பல்­க­லை­க்­க­ழ­கங்­களில் படித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

அர­புக்­கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு நாட்டின் ஏனைய மதங்கள் பற்றி அறி­வூட்­டு­வதன் மூலம் அவர்­க­ளுக்கு மதங்­க­ளுக்­கி­டை­யி­லுள்ள வித்­தி­யா­சங்­களை அறிந்து கொள்ள முடி­கி­றது. மத ­நல்­லி­ணக்­கத்­தின்பால் அவர்கள் ஈர்க்­கப்­ப­டு­வ­தற்கு வாய்ப்பு ஏற்­ப­டு­கி­றது.

மாண­வர்கள் ஏனைய மதங்­க­ளைப்­ப­யில்­வதில் ஆர்வம் காட்­டு­கி­றார்கள். இந்த முன்­மா­தி­ரித்­திட்டம் நாட்டின் ஏனைய அர­புக்­கல்­லூ­ரி­க­ளிலும் ஆரம்­பிக்­கப்­ப­ட­வேண்டும் என்றார்.

கட்­டு­கலை ஜும்ஆ பள்­ளி­வாசல் செய­லாளர்
புர்­கா­னியா அர­புக்­கல்­லூ­ரியில் போன்று நாட்­டி­லுள்ள ஏனைய அர­புக்­கல்­லூ­ரி­க­ளிலும் ஏனைய மத­பா­டங்கள் அடங்­கிய பாடத்­திட்டம் போதிக்­கப்­ப­ட­வேண்டும். சிங்­கள மொழி போதிக்­கப்­ப­ட­வேண்டும். பள்­ளி­வா­சல்­களின் இமாம்­களில் பலர் சிங்­க­ள­மொழி பேச­மு­டி­யா­த­வர்­க­ளாக இருப்­பது பெரும் குறை­பா­டாகும் என கட்­டு­கலை ஜும்ஆ பள்­ளி­வா­சலின் செய­லா­ளரும்,கண்டி மாவட்ட மஸ்­ஜி­துகள் சம்­மே­ள­னத்தின் தலை­வ­ரு­மான கே.ஆர்.ஏ.சித்திக் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில், கட்­டு­கலை ஜும்ஆ பள்ளி வாசல் கட்­டி­டத்தின் கீழ் மாடியில் நல்­லி­ணக்க மையம் ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. இம்­மை­யத்­துக்கு ஏனைய மதத்­த­வர்­களும் வருகை தந்து இஸ்லாம் மதம் தொடர்­பான தெளி­வு­களைப் பெற்றுச் செல்­கி­றார்கள். கடந்த மாதம் கோன­க­ல­கல உதி­த­தே­ரரின் தலை­மையில் வருகை தந்த 60 பெளத்த குருமார் அன்­றைய ஜும்ஆ தொழு­கையை நேரில் பார்­வை­யிட்­டார்கள். ஜும்ஆ பயான் அன்­றைய தினம் சிங்­கள மொழி­யிலேயே நடத்­தப்­பட்­டது.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு கண்டி நகர் பள்­ளி­வா­சல்­களில் கட­மை­பு­ரியும் இமாம்­க­ளுக்கு சிங்­க­ள­மொழி போதிக்­கப்­பட்­டது. இத்­திட்­டத்தை கட்­டு­கலை ஜும்ஆ பள்­ளியில் இயங்கும் நல்­லி­ணக்க மையம் ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.
அர­புக் ­கல்­லூ­ரி­களில் அடிப்­ப­டை­வாதம் போதிக்­கப்­ப­டு­வ­தாக சில பெளத்த இயக்­கங்கள் குற்றம் சுமத்­தி­வரும் நிலையில் இந்த வாதம் தவ­றா­னது என்பதை நிரூபிப்பதற்காகவும், நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதற்காகவும் இங்கு பெளத்த தர்மம் மற்றும் சிங்கள மொழியினைப் போதிக்கிறோம் என்றார்.

எந்­தவோர் மதமும் மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­து­வ­தற்­கான போத­னை­க­ளையே கொண்­டி­ருக்­கின்­றன.என்­றாலும் கொள்­கை­வா­திகள், இன­வா­திகள், மத­வா­திகள் தங்கள் இலக்­கினை எய்­து­வ­தற்­காக மதத்­தையும், இனத்­தையும் ஆயு­த­மாகக் கொள்­கின்­றனர்.
கட்­டுக்­கலை புர்­கா­னியா அர­புக்­கல்­லூ­ரியும், ஜும்ஆ பள்­ளி­வா­சலும் மாண­வர்­க­ளுக்கு பெளத்த மற்றும் ஏனைய மதங்­களைப் போதித்து வரு­கின்­றமை மத நல்­லி­ணக்கத்தி­­ற்­கு மாத்­தி­ர­மன்றி தேசிய நல்­லி­ணக்­கத்துக்கும் பாரிய பங்­க­ளிப்­புச் செய்யும் என்­பதில் மாற்றுக் கருத்­தி­ருக்க முடி­யாது. இவ்வாறான முயற்சிகள் ஏனைய அரபுக் கல்­லூ­ரி­க­ளிலும் பெளத்த விகா­ரை­க­ளிலும் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதன்மூலமே எதிர்­பார்க்­கப்­படும் மாற்­றங்­களை எம்மால் அடையக் கூடி­ய­தாக இருக்கும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.