ஹஜ் விண்ணப்பதாரிகள் மரணித்திருப்பின் பதிவு கட்டணத்தை மீள வழங்க திணைக்களம் நடவடிக்கை

0 292

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஹஜ் யாத்­தி­ரைக்குச் செல்­வ­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் 25 ஆயிரம் ரூபா பதி­வுக்­கட்­டணம் செலுத்தி பதிவு செய்து கொண்­டுள்­ள­வர்­களில் ஹஜ் கடமை மேற்­கொள்ள வாய்ப்புக் கிடைக்­காத நிலையில் மரணித்துவிட்­ட­வர்­க­ளது பதி­வுக்­கட்­ட­ணத்தை அவர்­க­ளது குடும்­பத்­தி­னர்­களால் மீளப் பெற்­றுக்­கொள்ள முடி­யு­மென்று அரச ஹஜ்­குழு அறி­வித்­துள்­ளது.

ஹஜ் கட­மையை மேற்­கொள்ள வாய்ப்­புக்­கி­டைக்­காத நிலையில் மரணித்துவிட்ட விண்­ணப்­ப­தா­ரிகள் திணைக்­க­ளத்­துக்கு செலுத்­தி­யுள்ள பதி­வுக்­கட்­ட­ணத்தை மீள செலுத்­து­வ­தற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தீர்­மா­னித்­துள்­ளது.

மரணித்த விண்­ணப்­ப­தா­ரி­களின் மரண அத்­தாட்­சிப்­பத்­திரம் மற்றும் பிர­தேச கிராம சேவை­யா­ளரின் கடிதம் எனும் ஆவ­ணங்­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் சமர்ப்­பித்து குடும்­பத்­தி­ன­ருக்கு பதி­வுக்­கட்­ட­ணத்தை மீளப்­பெற்­றுக்­கொள்ள முடி­யு­மென அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் தெரி­வித்தார்.
இதே­வேளை ஹஜ் கட­மைக்­காக திணைக்­க­ளத்­துக்கு ஏற்­க­னவே விண்­ணப்­பித்­துள்ள 65 வய­துக்கு மேற்­பட்ட விண்­ணப்­ப­தா­ரி­களின் பதி­வுக்­கட்­ட­ணமும் தற்­போது திணைக்­க­ளத்­தினால் மீள கைய­ளிக்­கப்­பட்டு வரு­கின்­றமை குறிப்பிடத்தக்கதாகும்.

சவூதி அரேபியாவின் ஹஜ் உம்ரா அமைச்சு ஹஜ் கடமைக்கான வயதெல்லயை 65 ஆக நிர்ணயித்துள்ளமையே இதற்கான காரணமாகும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.