மாஷா அமீனியின் மரணம்: ஈரான் ஒழுக்கக் காவல் துறையின் தொடர் அடக்குமுறையின் ஓர் அங்கம்

0 370

பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ்

தெஹ்ரான் தலை­ந­க­ரிலும் இன்னும் பல நக­ரங்­க­ளிலும் ஆயி­ரக்­க­ணக்­கானோர் ஆர்ப்­பாட்­டங்­க­ளிலும் வீதிப்­போ­ராட்­டங்­க­ளிலும் ஈடு­பட்டு வரு­கின்­றனர். மாஷா அமீ­னி எனும் பெண்ணின் மர­ணத்தைக் கண்­டித்து எழுச்சி பெற்­றுள்ள இப்­போ­ராட்­டங்­களில் பெண்­களும் நடுத்­த­ர­வ­குப்பு மக்­களும் அதிகம் பங்­கேற்று வரு­கின்­றனர்.

ஈரானின் வட­மேற்­குப்­பி­ராந்­திய குர்திஷ் மாநி­லத்தைச் சேர்ந்த 22 வயது குர்திஷ் பெண் மாஷா அமீனி ஈரா­னிய ஒழுக்கக் காவல்­ பி­ரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டு சில மணித்­தி­யா­லங்­களில் இறந்­துள்ளார். சுய­நி­னைவு இழந்த நிலை­யி­லேயே காவல் பிரி­வினர் அவரை தெஹ்ரான் காஸ்கர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­துள்­ளனர் என்று வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

ஹிஜாப் ஆடையை முறை­யாக அணி­ய­வில்லை என்ற குற்­றச்­சாட்டின் கீழ் மாஷா அமீனி கைது செய்­யப்­பட்டு ஒழுக்க பொலி­ஸினால் விசா­ரணை நிலை­யத்­திற்கு அழைத்துச் செல்­லப்­பட்­டுள்ளார். இரண்டு மணித்­தி­யா­லங்­களில் அங்­கி­ருந்து அமீனி மருத்­து­வ­ம­னையில் சேர்க்­கப்­பட்­டதைத் தொடர்ந்து பிரச்­சி­னைகள் ஆரம்­ப­மா­கி­யுள்­ளன. இச்­செய்தி பர­வி­யதைத் தொடர்ந்து மக்கள் மருத்­துவ­மனை வட்­டா­ரத்தில் ஒன்று கூடினர். இரு நாட்கள் நினை­வி­ழந்த நிலையில் இருந்த அமீனி, செப்­டெம்பர் 16 அன்று உயி­ரி­ழந்தார் என்று அறி­விக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து அமை­தி­யின்மை ஆரம்­ப­மா­கி­யது.
மாஷா அமீனி குர்திஷ் மாநி­லத்­தி­லி­ருந்து தெஹ்­ரா­னுக்குத் தனது சகோ­த­ர­னோடு வந்­தி­ருந்த போது ஒழுக்க பொலிஸார் அவளைக் கைது செய்­துள்­ளனர். அடக்­க­மான ஆடை ஒன்றை அமீனி அணிந்­தி­ருந்த போதும் ஈரானின் அர­சாங்க ஆடை ஒழுக்­க­வி­தி­களை முறை­யாக அவள் கடை­ப்பி­டிக்­க­வில்லை என பொலிஸ் அவள்­மீது குற்றம் சுமத்­தி­யுள்­ளது. காவல் நிலை­யத்தில் விசா­ர­ணையின் போது மார­டைப்­பினால் மயங்­கி­ வி­ழுந்­த­தாகப் பொலிஸ் தரப்புக் கூறி­யது. காவல் நிலை­யத்­துக்கு விசா­ர­ணைக்­காகத் தடுத்து வைத்­தி­ருந்த போது அவ­ளது சகோ­தரன் அங்கு நின்­றி­ருக்­கிறான். அம்­புலன்ஸ் வண்­டியில் அவள் ஏற்றிச் செல்­லப்­ப­டு­வ­தையும் அவன் பார்த்­தி­ருக்­கிறான்.

தமது மகள் மார­டைப்­பினால் இறந்தாள் என்­பதை பெற்றோர் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.
‘தேக ஆரோக்­கி­யத்­து­டனும் நல்ல நிலை­யிலும் அவள் இருந்தாள்’ என்று பெற்றோர் கூறியுள்­ளனர். மனித உரிமை உதவி உயர் ஸ்தானிகர் நாதா அல் நாஸிப் கடும் வார்த்­தை­களால் இப்­பி­ரச்­சி­னையை அணு­கி­யுள்ளார்.

‘மாஷா அமீனி உடைய பரி­தா­ப­மான மர­ணத்தைப் பற்­றியும் அவள்­மீது நடத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் சித்­தி­ர­வ­தையைப் ­பற்­றியும் பார­பட்­ச­மற்ற முறையில் சுதந்­தி­ர­மான அறிக்­கை­யொன்றை விரைவில் தகு­தி­வாய்ந்த அதி­கா­ரிகள் வெளி­யிட வேண்டும்’ என்று திரு­மதி நாஸிப் அர­சிடம் கேட்­டுள்ளார்.

கடந்த சில மாதங்­க­ளாக ஹிஜாப் தொடர்பில் ஒழுக்கக் காவ­லர்கள் நடத்­தி­வரும் வரம்பு கடந்த செயல்கள் பற்­றிய காணொ­ளி­களை ஐ.நா. பெற்­றுள்­ள­தென்றும் துன்­பு­றுத்­தல்கள் நடந்­து­ வ­ரு­வ­தா­கவும் மேலும் அவர் கூறி­யி­ருந்தார்.

அமீனி தாக்­கப்­பட்டு துன்­பு­றுத்­த­லுக்­குள்­ளா­கியே இறந்தாள் என்­பதே இன்று பர­வி­யுள்ள கவலை தரும் செய்­தி­யாகும். மார­டைப்­பினால் அல்ல தலையில் தாக்­கி­யதால் ஏற்­பட்ட மரணம் என்று டாக்டர் ஹுஸைன் கரும்பூர் உள்­ளிட்ட சில மருத்­துவ வட்­டா­ரங்கள் தமது கருத்­துக்­களை வெளி­யிட்­டுள்­ளன. அமீ­னியின் மர­ணத்தில் ஈரா­னிய வைத்­தியர் சங்கம் நேர்­மை­யாக நடக்க வேண்டும் என்று டாக்டர் ஹுஸைன் கூறி­யுள்ளார்.

ஈரானில் இஸ்­லா­மியப் புரட்­சி­யினால் 1979 இல் அமைக்­கப்­பட்ட அர­சாங்கம் பெண்­க­ளுக்­கான (9 வய­தி­லி­ருந்து) கட்­டாய ஹிஜாப் ஆடை­வி­தி­களை அமுல் செய்­தது. அடுத்த சில வரு­டங்­களில் அமைக்­கப்­பட்ட ஒழுக்க பொலி­ஸிடம் ஹிஜாப் கண்­கா­ணிப்பு ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. சட்டம் தீவி­ர­மாகச் செயற்­ப­டுத்­தப்­பட்­டது. ‘ஒழுக்க விதி மீறல்’ என்று வரு­டந்­தோறும் ஆயி­ரக்­க­ணக்­கான பெண்கள் கைது செய்­யப்­பட்­டனர். விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்டு வந்­தனர். ஆனால் அநேக ஈரா­னியப் பெண் அமைப்­புக்கள் 2010 இல் இருந்தே அவ்­வப்­போது எதிர்ப்­புக்­களை வெளிப்­ப­டுத்தி வந்­துள்­ளன. இவ்­வாறு போரா­டிய சில பெண்கள் சிறையில் அடைக்­கப்­பட்­டனர்.

‘உங்­க­ளது செயலால் ஈரான் களங்­கப்­பட்­டுள்­ளது’ என்று மூத்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜலா ரஷீதி கூச்சி ஒழுக்க காவல் துறையைக் கண்­டித்­துள்ளார். மூத்த ஆயத்­துல்­லாக்­களில் சிலரும் தமது கண்­ட­னத்தை வெளி­யிட்­டுள்­ளனர்.

‘ஒழுக்கப் பாது­காவல்’ என்­பது சட்ட ரீதி­யற்­றது மட்­டு­மல்ல இஸ்­லாத்­திற்கு முர­ணா­னது என்று ஆயத்­துல்லா பயாத் ஸன்­ஜானி 17 செப்­டெம்பர் அன்று வெளி­யிட்ட செய்திக் குறிப்பில் கூறி­யுள்ளார்.

ஒழுக்­கத்தைப் பாது­காக்­கவும் தீய செயல்­களைக் கட்­டுப்­ப­டுத்­தவும் காவல் துறைகள் அமைக்­கப்­ப­டு­வது இஸ்­லா­மியப் போத­னை­க­ளுக்கு ஏற்­பு­டை­ய­தல்ல என்று ஆயத்­துல்லா மொஹாகெக் தமாத் கூறி­யுள்ளார். ஊழல் புரியும் அர­சி­யல்­வா­திகள் தான் கண்காணிக்­கப்­பட வேண்டும், பிர­ஜை­களின் சுதந்­திரம் தடுக்­கப்­ப­டக்­கூ­டாது என்றும் அவர் கூறி­யுள்ளார்.

‘இந்த ஒழுக்­கப்­படை ஒழிக்­கப்­பட வேண்டும். அதைத்தான் மாஷா அமீ­னியின் குரூ­ர ­ம­ரணம் எமக்குக் கூறு­கி­றது’ என்று கோஷம் எழுப்­பி­யுள்ளார்.

செப்­டெம்பர் 17இல் தெஹ­ரானில் சில பகு­தி­க­ளிலும் அமீ­னியின் சொந்த குர்திஷ் பிர­தே­சத்­திலும் ஆர்ப்­பாட்­டங்கள் ஆரம்­ப­மா­கின. ஆர்ப்­பாட்­டங்­களின் போது சில நக­ரங்­களில் ஹிஜாபைக் கழற்­றி­ய­தோடு சிலர் கூந்­தல்­க­ளையும் அறுத்­தெ­றிந்­தனர். ஹிஜாப் உடைக் கண்­கா­ணிப்­பா­ளர்­க­ளாகச் செயற்­படும் ஒழுக்கக் காவல்­ப­டையைக் கண்­டித்து கோஷங்கள் எழுப்­பப்­பட்­டன. ஹிஜாப் உடையை அரசு கட்­டா­யப்­ப­டுத்தித் தம்­மீது திணிப்­ப­தா­கவும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் அரசைக் குற்றம் சுமத்­தினர். தற்­போ­தைய அதி­உயர் ஆன்­மீகத் தலை­வ­ரான ஆயத்­துல்லா கமெய்னி ஒரு சர்­வா­தி­காரி என்று பல பதா­கை­க­ளையும் ஊர்­வ­லங்­களில் மக்கள் தூக்கிச் சென்­றனர். ஆத்­தி­ர­ம­டைந்த ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் பாதை­களில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த ஆய­துல்லா கமெய்­னியின் பதா­கை­க­ளையும் உடைத்து எறிந்­தனர். வீதி­களில் ஆர்ப்­பாட்டக்காரர்­க­ளுக்கும் பொலி­ஸா­ருக்கும் இடையில் கடும் வாக்­கு­வா­தங்­களும் தாக்­கு­தல்­களும் இடம்­பெற்று வரு­கின்­றன.

ஹிஜாப் பற்­றிய அர­சாங்க உடை ஒழுக்­க­விதி எவ்­வா­றி­ருந்­தாலும் மாஷா அமீனி மித­மான அல்­லது அடக்­க­மான ஆடை­யுடன் இருந்­ததைப் பலர் சுட்­டிக்­காட்டியுள்­ளனர்.
தலை முழு­மை­யாக மறைக்­கப்­ப­ட­வில்லை, சட்­டப்­படி தளர்­வான ஆடை அணி­ய­வில்லை என்­பதே அமீ­னியின் கைதுக்குக் காரணம் என கூறப்­ப­டு­கின்­ற­னது. அவள் காது­களில் இருந்து இரத்தம் வழிய கண்கள் சிராய்ப்­புக்­க­ளினால் பழு­த­டைய என்ன காரணம் என்­பதை ஈரானின் சில வைத்­தி­யர்கள் ஒழுக்­கப்­ப­டை­யி­னரின் அடா­வ­டித்­தனம் இதில் வெளிப்படுவதாக மறைமுகமாக கூறியுள்ளனர். ஒரு சொந்த நாடு அதன் குடிமக்களை எப்படி இவ்வாறு நடத்தமுடியும்?

பெயர் சொல்ல விரும்பாத இளம்பெண் ஒருவர், ‘பொருத்தமற்ற ஹிஜாப் ஆடை’ குற்றத்தின் கீழ் தான் இரண்டு முறை கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகவும் இவ்வாறு வருடத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்படுவதாகவும் கூறுகிறார். சொல்லப்போனால் கடலுள் அமிழ்ந்து கிடக்கும் பனிமலை போன்ற விடயம் இது. ‘அவளது இறுதி வாசகங்கள் அதைத் தான் கூறுகின்றன. ‘ஒரு பயம், விரக்தி, வெட்கம், நம்பிக்கை, இழப்பு, மன அழுத்தம் எம்மைத்தாக்கி வருகின்றன’– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.