உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள்:நவம்பர் 24 இல் பிணை தொடர்பிலான தீர்மானம்

0 349

(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் 25 பேருக்கு எதி­ராக சட்ட மா அதிபர் திணைக்­களம் தாக்கல் செய்­துள்ள வழக்கின், ‘முன் விளக்க மாநாடு’ (pre trial conference) திங்­க­ளன்று ஆரம்­பிக்­கப்­பட்­டது. கொழும்பு சிறப்பு ட்ரயல் அட் பார் நீதி­மன்றம் முன் அந்நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

இத­னை­விட 25 பிர­தி­வா­தி­க­ளுக்­கா­கவும், அவர்­க­ளது சட்­டத்­த­ர­ணிகள் முன் வைத்­துள்ள பிணைக் கோரிக்கை குறித்த எழுத்து மூல சமர்ப்­ப­ணங்­க­ளுக்கு, சட்ட மா அதிபர் எழுத்து மூலம் ஆட்­சே­ப­னை­களை நேற்று முன் வைத்தார். மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் ஹரிப்­பி­ரியா ஜய­சுந்­தர பிணைக் கோரிக்­கைக்கு எதி­ரான வாதங்­களை இவ்­வாறு எழுத்து மூலம் முன் வைத்தார்.

எனினும் அந்த எழுத்து மூல சமர்ப்­ப­ணங்­க­ளுக்கு மேல­திக எதிர்­வா­தங்­களை அல்­லது விளக்­கங்­களை முன் வைக்க சந்­தர்ப்­ப­ம­ளிக்க வேண்டும் என பிர­தி­வா­தி­க­ளுக்­காக ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­களான ருஷ்தி ஹபீப், என்.எம். சஹீட் உள்­ளிட்டோர் முன் வைத்த கோரிக்­கையை சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் ஏற்­றுக்­கொண்­டது. அதன்­படி அதற்­கான சந்­தர்ப்­ப­த்­தையும் அளித்து, பிர­தி­வா­திகள் சார்பில் முன் வைக்­கப்­பட்­டுள்ள பிணைக் கோரிக்கை தொடர்பில் நீதி­மன்றின் தீர்­மா­னத்தை எதிர்­வரும் நவம்பர் 24 இல் அறி­விப்­ப­தாக நீதி­மன்றம் அறி­வித்­தது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்பில் பிர­தான பிர­தி­வா­தி­யாக அரச தரப்பால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் அபூ செய்த் எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம் மொஹம்மட் நெளபர் அல்­லது நெளபர் மெள­லவி உட்­பட 25 பேருக்கு எதி­ரா­கவே இவ்­வாறு வழக்குத் தொட­ரப்பட்­டுள்ள நிலையில் திங்­க­ளன்று அவ்­வ­ழக்கு விசா­ர­ணைக்கு வந்­தது.

இந்நிலையில், இந்த விவ­கா­ரத்தில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள 25 பிர­தி­வா­தி­களும் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், மெகஸின், அங்­கு­ண­கொ­ல­பெ­லஸ்ஸ, மஹர, நீர்­கொ­ழும்பு உள்­ளிட்ட பல சிறைச்­சா­லை­களில் அவர்கள் அழைத்து வரப்­பட்­டனர்.

இவ்­வா­றான நிலை­யி­லேயே, வழக்­கா­னது மேல­திக முன் விளக்க மாநாடு மற்றும் பிணை குறித்த தீர்­மா­னத்­துக்­காக எதிர்­வரும் நவம்பர் 24 வரை ஒத்தி வைக்­கப்­பட்­டது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.