இஸ்லாம் பாடநூல் விநியோகம் நிறுத்தம்: முஸ்லிம் மாணவர்களின் உரிமை மீறப்பட்டுள்ளது

மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

0 319

(எம்.வை.எம்.சியாம்)
கல்வி வெளி­யீட்டு ஆணை­யாளர் நாய­கத்தின் பணிப்­பு­ரையின் பேரில் இஸ்லாம் பாட நூல் விநி­யோகம் நிறுத்­தப்­பட்­டமை மற்றும் மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட பாட­நூல்கள் மீளப் பெறப்­பட்­ட­மையால் முஸ்லிம் பாட­சாலை மாண­வர்­களின் மனித உரிமை மீறப்­பட்­டுள்­ள­தாக மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இதனால், 11 மாதங்­க­ளாக மாண­வர்­களின் இஸ்லாம் பாட கல்வி போதித்தல் மற்றும் கற்றல் நட­வ­டிக்கை முற்­றாக பாதிக்­கப்­பட்­டுள்­ளதால் மாண­வர்­களின் கல்வி உரிமை திட்­ட­மி­டப்­பட்டு மறுக்­கப்­பட்­டுள்­ள­தாக குறித்த முறைப்­பாட்டில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

நீதிக்­கான மையத்தின் தலைவர் சட்­டத்­த­ரணி ஷஃபி எச். இஸ்­மாயீல், சட்­டத்­த­ரணி ஜிப்­ரியா இர்ஷாத் ஊடாக இந்த முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் நீதிக்­கான மையத்தின் தலைவர் கருத்து தெரி­விக்­கையில்,
கடந்த வருடம் டிசம்பர் மாதம் இலங்­கையின் கல்வி வெளி­யீட்டு ஆணை­யாளர் நாய­கத்­தினால் தரம் 6,7,10 மற்றும் கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தர மாண­வர்­க­ளு­டைய இஸ்லாம் பாடநூல் விநி­யோ­கத்தை உடன் நிறுத்­து­மாறும், ஏற்­க­னவே விநி­யோ­கிக்­கப்­பட்ட பாட­ப் புத்­த­கங்­களை மீளப்­பெறுமாறும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

அதற்­க­மை­வாக, அனைத்து பாட­சாலை அதி­பர்­க­ளாலும் வழங்­கப்­பட்ட பாட புத்­த­கங்கள் மீளப்­பெ­றப்­பட்­ட­தோடு இஸ்லாம் பாடநூல் விநி­யோ­கமும் நிறுத்­தப்­பட்­டுள்­ளது.
மேலும் ஆணை­யாளர் பாடநூல் விநி­யோகம் தற்­கா­லி­க­மா­கவே நிறுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் பாடப் புத்­தகங்கள் மீளவும் துரி­த­மாக மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­படும் என்றும் தெரி­வித்­தி­ருந்தார்.

இருப்­பினும் 9 மாதங்கள் கடந்­துள்ள நிலையில் பாடப் புத்­த­கங்கள் இன்­னமும் மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. எதிர்­வரும் இரண்டு அல்­லது மூன்று மாதங்­களில் க.பொ.த சாதா­ரண தரப் பரீட்­சைகள் இடம்­பெற உள்­ளது.

கல்விப் பொதுத் தரா­தரப் சாதா­ரண தர மாண­வர்கள் பரீட்­சைக்­காக தரம் 10 மற்றும் 11 பாடப் ­புத்­த­கங்­களைக் கொண்டே பரீட்­சைக்குத் தயா­ராக வேண்டும். மேலும் தரம் 6 மற்றும் 7 மாண­வர்­களும் பாடப் புத்­தகம் இன்­மையால் பெரிதும் பாதிக்­கப்­பட்டிருக்­கி­றார்கள்.

2006 கல்வித் திட்­டத்­திற்கு அமை­வாக பாட­சா­லை­களில் சாதா­ரண தரம் கல்­வி­யிலும் மாண­வர்கள் தமது சமயம் சார்ந்த பாடத்தை தெரிவு செய்­வது என்­பது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்ள நிலையில் தற்­போது சமயப் பாடத்தை கற்­ப­தற்கு பாடநூல் இல்லை.
இந்­நி­லையில், பாடநூல் சம்பந்­த­மாக முன்­வைத்த பணிப்­பு­ரையை வாபஸ் பெற்­றுக்­கொள்ள வேண்டும். மேலும் மாண­வர்­க­ளிடம் இருந்து மீள பெறப்­பட்ட புத்தகங்களை உடனடியாக அவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதோடு மாணவர்களுக்கான இஸ்லாம் பாடநூல் விநியோகத்தை உடன் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கல்வி வெளியீட்டு ஆணையாளருக்கு நாம் கோரிக்கை முன்வைக்கிறோம் என்றார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.