ஹிஜாஸுக்கு எதிரான வழக்கு பொய்யாக புனையப்பட்டது

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடு தொடர்பில் சட்டத்தரணிகள் விசனம்

0 367

(எம்.எப்.எம்.பஸீர்)
சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் உள்­ளிட்ட இரு­வ­ருக்கு எதி­ராக தொட­ரப்பட்­டுள்ள வழக்கு, புனை­யப்­பட்ட முன்­னெ­டுத்து செல்ல முடி­யாத வழக்கு எனவும், அவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே தொடர்ச்­சி­யாக திக­தி­களைப் பெற்று வழக்கை ஒத்­தி­வைக்கும் நட­வ­டிக்­கை­களில் சட்ட மா அதிபர் திணைக்­களம் ஈடு­ப­டு­வ­தா­கவும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நளிந்த இந்­ர­திஸ்ஸ குறிப்­பிட்டார்.

உயிர்த்­த­ ஞா­யிறு தின தொடர் தற்­கொலை தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பின்னர் தற்­போது சதி செய்­தமை, சமூ­கங்­க­ளி­டையே வெறுப்­பு­ணர்வை தூண்­டிய குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் வழக்குத் தொட­ரப்­பட்­டுள்ள சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் மற்றும் சுஹை­ரியா மத்­ரஸா அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் ஆகி­யோ­ருக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கு நேற்று முன் தினம் (4) புத்­தளம் மேல் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போதே சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்­காக மன்றில் ஆஜ­ராகி வாதங்­களை முன் வைக்கையில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நளிந்த இந்­ர­திஸ்ஸ இதனை குறிப்­பிட்டார்.

நேற்று முன் தினம் வழக்கு விசா­ர­ணை­களின் போது ஹிஜாஸ் மற்றும் மெள­லவி சகீல் கான் ஆகிய இரு­வரும் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

வழக்­கா­னது, நேற்று முன் தினம் (4) முற்­பகல் 10.00 மணிக்கு, புத்­தளம் மேல் நீதி­மன்ற நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொட முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது.
முதல் பிர­தி­வா­தி­யான சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் சார்பில், சட்­டத்­த­ர­ணி­க­ளான ஹபீல் பாரிஸ், ஷெஹானி வத்­சலா, சலன பெரேரா, சஞ்­ஜீவ கொடித்­து­வக்கு ஆகி­யோ­ருடன் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நளிந்த இந்­ர­திஸ்ஸ ஆஜ­ரானார். 2 ஆம் பிர­தி­வாதி மெள­லவி சகீல் கான் சார்பில் சட்­டத்­த­ர­ணி­க­ளான வீனாஷ்­வரி ஜய­தி­லக, கிரி­ஷானி வத்­சலா உள்­ளிட்­டோ­ருடன் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சமிந்த அத்­து­கோ­ரள ஆஜ­ரானார். வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்­ட­வாதி நிமேஷா டி அல்விஸ் ஆஜ­ரானார். வழக்கை மேற்­பார்வை செய்யும் இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் சார்பில் சட்­டத்­த­ரணி ரஞ்சன் பெரேரா ஆஜ­ரானார்.

வழக்கு விசா­ரணை ஆரம்­ப­மான போது, அரச சட்­ட­வாதி நிமேஷா டி அல்விஸ்
‘கனம் நீதி­பதி அவர்­களே, இந்த வழக்கு தொடர்பில் வழக்குத் தொடு­ந­ருக்­காக பிரதி சொலி­சிட்டர் ஜென­ரல்­க­ளான சுதர்­ஷன டி சில்வா மற்றும் லக்­மினி கிரி­ஹா­கம ஆகியோர் இதற்கு முன்னர் ஆஜ­ரா­கி­யுள்­ளனர். இவ் வழக்கை பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் லக்­மினி கிரி­ஹா­க­மவே நெறிப்­ப­டுத்தி வந்தார். அவர் ட்ரயல் அட்பார் வழக்­கொன்றில் இன்று (4) ஆஜ­ரா­வாதல் இந்த வழக்­குக்கு சமு­க­ம­ளிக்க முடி­யாது என அறி­வித்­துள்ளார். அந்த வழக்கு செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் தொடர்ச்­சி­யாக நடப்­பதால், அவ்­விரு தினங்கள் தவிர்ந்த வேறு ஒரு தினத்தில் இவ்­வ­ழக்கை விசா­ர­ணைக்கு எடுக்­கு­மாறு கோரு­கின்றேன்.’ என தெரி­வித்தார்.

இதன்­போது மன்றில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நளிந்த இந்­ர­திஸ்ஸ விட­யங்­களை முன் வைத்தார்.

‘கனம் நீதி­பதி அவர்­களே, எனது சேவை பெறுநர் ஒரு சட்­டத்­த­ரணி. அதுவும் அனு­பவம் நிறைந்த சட்­டத்­த­ரணி. அவர் வழக்கில் ஆஜ­ராக நீதி­மன்­றுக்கு வந்­துள்ளார். நாங்­களும் நீதி­மன்­றுக்கு வந்­துள்ளோம். எனினும் சட்ட மா அதிபர் திணைக்­கள உரிய அதி­கா­ரிகள் வரு­வ­தில்லை. இவ்­வாறு நீதி­மன்றின் காலத்தை வீண் விரயம் செய்ய அனு­ம­திக்க முடி­யாது. இந்த வழக்­குடன் தொடர்­பு­டைய சம்­ப­வத்தில், முதல் பிர­தி­வா­தியைக் கைது செய்த பின்­ன­ரேயே, வழக்­குடன் தொடர்­பு­பட்ட முதல் வாக்கு மூலமே பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

கடந்த நீதி­மன்ற விடு­முறைக் காலத்­திலும் இவ்­வ­ழக்கை விரை­வாக விசா­ரிப்­ப­தற்­காக திக­திகள் ஒதுக்­கப்­பட்­டன. எனினும் வழக்கை நெறிப்­ப­டுத்தும் பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் அப்­போதும் மன்­றுக்கு வர­வில்லை. வேலைப் பளு கார­ண­மாக அவரால் மன்றில் ஆஜ­ராக முடி­ய­வில்லை என அறி­விக்­கப்­பட்­டது. நீதி­மன்ற பணியும் அல்­லாத, தனிப்­பட்ட பணியும் அல்­லாத ஒரு நட­வ­டிக்­கையால் நீதி­மன்­றுக்கு வர முடி­யா­தி­ருப்­ப­தாக அப்­போது அவர் அறி­வித்­தி­ருந்தார். அத­னா­லேயே நாமும் வர­வில்லை. எனினும் வழக்­குக்கு நாம் தயா­ரா­கவே இருந்தோம்.

இன்று ட்ரயல் அட்பார் நீதி­மன்ற நட­வ­டிக்­கையை காரணம் காட்டி வர முடி­யாது என கூறி­யி­ருக்­கின்றார். இந்த கார­ணத்தை கடந்த தவ­ணையின் போதே அவர் அறிந்­தி­ருந்தார். பிரதி சொலி­சிட்டர் ஜென­ரா­லுக்கு முடி­யா­விட்டால், சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்­ஷன இருக்­கின்றார் அல்­லவா? இரு­வரில் ஒரு­வ­ரா­வது வந்­தி­ருக்­கலாம்.

பொய்­யாக புனை­யப்­பட்ட, முன்­னெ­டுத்துச் செல்ல முடி­யாத ஒரு வழக்கே எனது சேவை பெறு­ந­ருக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்­ளது. இதற்கு முன்­னரும் இவ்­வா­றான வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள போதும், அவை பின்னர் உண்மை என ஒப்­புக்­கொண்டு மீளப் பெறப்­பட்­டுள்­ளன. எனினும் இப்­போது அப்­ப­டி­யல்ல. திக­தி­களைப் பெற்­றுக்­கொண்டு வழக்­கு­களை தொடர்ச்­சி­யாக ஒத்தி வைக்கும் வகையில் நடந்­து­கொள்­கின்­றனர்.
இது, பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள வழக்கு. இவ்­வா­றான வழக்­குகள், முடி­யு­மான அளவு விரை­வாக நிறை­வு­றுத்­தப்­படல் வேண்டும் என சட்ட ரீதி­யி­லான ஏற்­பா­டுகள் உள்­ளன. எனவே வழக்குத் தொடு­நரின் கோரிக்­கையை ஏற்­காது, முதல் சாட்­சி­யா­ள­ரிடம் 2ஆம் பிர­தி­வா­தியின் சட்­டத்­த­ரணி குறுக்கு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க அனு­ம­திக்­கு­மாறு கோரு­கின்றேன்.’ என வாதிட்டார்.
இத­னை­ய­டுத்து 2ஆம் பிர­தி­வா­தியின் சட்­டத்­த­ரணி சமிந்த அத்­து­கோ­ர­ளவும் மன்றில் வாதங்­களை முன் வைத்தார்.

‘கனம் நீதி­பதி அவர்­களே, இது பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தொட­ரப்­பட்­டுள்ள வழக்கு. அப்­ப­டி­யானால் முன்­னு­ரிமை கொடுத்து இவ்­வ­ழக்கு விசா­ரிக்­கப்­படல் வேண்டும் என சட்­டத்­தி­லேயே சொல்­லப்­பட்­டுள்­ளது. ஆகஸ்ட் 22,23 ஆம் திக­தி­களில், நீதி­மன்ற விடு­முறை காலப்­ப­கு­தி­யிலும் இவ்­வ­ழக்கை விசா­ரிக்க திக­தி­ய­ளிக்­கப்­பட்­டது. அன்று பிர­தி­வாதி தரப்பு ஆயத்­த­மாக இருந்­தது. எனினும் வழக்குத் தொடுநர் வேறு திக­தியை கோரினார். அன்று, தொழிலின் கெள­ரவம் மற்றும் ஒழுக்க விழு­மி­யங்­களை கருத்தில் கொண்டு நாம் ஆட்­சே­பனம் வெளி­யி­ட­வில்லை. இவ்­வ­ழக்கின் முதல் சாட்­சி­யா­ள­ரிடம் சாட்­சியம் பெறும் போது முதல் நாளில், இருவர் வழக்கை நெறிப்­ப­டுத்­தினர். இன்று ஒரு­வ­ரேனும் மன்றில் இல்லை. இதனை கார­ண­மாக கொண்டு இவ்­வ­ழக்கை ஒத்தி வைக்க நான் ஆட்­சே­பனம் தெரி­விக்­கின்றேன். எனது சேவை பெறு­நரை பொலிஸார் கைது கூட செய்­ய­வில்லை. இறுதி நேரத்தில் சட்ட மா அதிபர் கூறியே அவரைக் கைது செய்­தனர். பின்னர் ஒரு­ வ­ருடம் விளக்­க­ம­றி­யலில் இருந்தார். குறுக்கு விசா­ரணை செய்ய நாம் தயார்.’ என தெரி­வித்தார்.

இதன்­போது மன்றில் இருந்த அரச சட்­ட­வாதி நிமேஷா டி அல்விஸ் ‘பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் லக்­மினி கிரி­ஹா­கம நெறிப்படுத்தும் எச்.சி. டி.ஏ.பி.3887/2022 எனும் வழக்கு ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளிலும் நடக்கிறது’ என தெரிவிக்கையில் குறுக்கீடு செய்த நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட, ‘ இவ்வழக்கில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஒருவரும் வழக்கை நெறிப்படுத்தியிருந்தார் அல்லவா?’ என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அரச சட்டவாதி நிமேஷா, ‘அது தொடர்பில் எனக்கு எந்த அறிவுறுத்தலும் கிடைக்கப் பெறவில்லை. பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளின் வாதத்தின் போது கடந்த வழக்குத் தவணையிலும் ஆஜராகவில்லை என கூறப்பட்டது. எனினும் அன்று அவர்கள் ஆட்சேபனை முன் வைத்திருக்கவில்லை.’ என குறிப்பிட்டார்.
இதனிடையே, ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ரதிஸ்ஸ மன்றில் வாதங்களை முன்வைக்கையில் ‘சட்ட மா அதிபர் திணைக்களம் தற்போது தவறான வழியிலேயே தனது வேலைகளை முன்னெடுக்கின்றது. நீதிபதிகளை விலகுமாறு அவர்களது உத்தியோகபூர்வ அறைகளுக்குச் சென்று கூறுகின்றனர். வேறு ஒரு வழக்கில் இது நடந்துள்ளது. அது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் அவதானம் திரும்பியுள்ளது. நான் சட்டத்தரணிகள் சங்கத் தலைவருடன் இது தொடர்பில் கதைத்தேன்.
இவர்களுக்கு நீதிபதியை பிடிக்கவில்லையாயின் விலகுமாறு கூறுகின்றனர். இல்லையெனில் வேறு திகதியை பெற்றுக்கொள்கின்றனர். இவை தவறான முன்னுதாரணங்களாக ஆகிவிடக் கூடாது. அதே போல தான் சி.ஐ.டி.யினர் விசாரணைப் புத்தகங்களை எடுத்துவருவதும் இல்லை.’ என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.