இஸ்­லா­மிய உலகை கவ­லையில் ஆழ்த்­தி­யுள்ள கலா­நிதி யூஃசுப் அல் கர்­ளா­வியின் மறைவு

0 971

பிர­பல இஸ்­லா­மிய அறிஞர் கலா­நிதி யூசுப் அல் கர்­ளாவி கடந்த கடந்த திங்­கட்கிழமை தனது 96 ஆவது வயதில் கட்­டாரில் கால­மா­னார். அன்­னாரின் ஜனாஸா தொழுகை கட்­டா­ரி­லுள்ள முஹம்மத் பின் அப்துல் வஹாப் பள்­ளி­வா­சலில் இடம்­பெ­ற்­றது. இதில் ஆயிரக் கணக்­கான மக்கள் கலந்து கொண்­டனர்.

யூசுஃப் அப்­துல்லாஹ் அல்-­கர்­ளாவி, 1926 செப்­டம்பர் 9 இ-ல் எகிப்தின் நைல் கழி­முக கிராமம் சஃபத் துராபில் ஓர் ஏழை விவ­சாயக் குடும்­பத்தில் பிறந்தார். இரண்டு வயதில் தந்­தையை இழந்து விட்­ட­மையால், தனது சிறி­ய­ தந்­தையின் பரா­ம­ரிப்பில் வளர்ந்து வந்தார். கிரா­மத்தில் இருந்த மக்தப் ஒன்றில் சேர்ந்து, பத்து வய­தி­லேயே குர்­ஆனை மனனம் செய்து முடித்தார். பின், தாண்­டா­வி­லி­ருந்த மார்க்கக் கல்வி நிறு­வ­னத்தில் சேர்ந்து படித்தார். அவ­ரது அஸ்ஹர் கல்­விக்­கான முதல் படி­யாக இது அமைந்­தது.

இக்­கா­லத்தில் தான் இஃக்வான் அல்-­முஸ்­லிமூன் அமைப்­புடன் தொடர்­பேற்­பட்டு, அத­னோ­டி­ணைந்து செயற்­பட ஆரம்­பித்­தி­ருந்தார். ஒன்­பது வரு­டங்கள் பயின்று பட்டம் பெற்ற பின், அல்-­ அஸ்­ஹரில் படிப்­ப­தற்­காக கெய்ரோ சென்றார். உசூலுத்தீன் துறையில் இணைந்து, 1953 இ-ல் வகுப்பில் முதல் மாண­வராய் பட்டம் பெற்றார். 1957 இ-ல் அர­பி­மொழி போதனை தனித்­துறைப் பயிற்­சியில் தேர்வு பெற்றார். இணை­யா­கவே, குர்­ஆன்-­ சுன்னாஹ் துறைப் படிப்­பையும் தொடர்ந்த அவர், 1960- இல் அதற்­கான முன்­ ஆ­யத்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று, பட்­டப்­ப­டிப்பை நிறைவு செய்தார்.

1960 இ-ல் “ஸகாத்தும் சமூகப் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­பதில் அதன் தாக்­கமும்” என்ற தலைப்­பி­லான தனது டாக்டர் பட்­டத்­திற்­கென அவர் தயா­ராகிக் கொண்­டி­ருக்­கையில், இஃக்வான் அமைப்­பினர் மீது அதிபர் நாசரின் ஒடுக்­கு­முறை துவங்­கி­யதால் அது இடை­நின்று போனது. 1973- இல் தான் அவரால் அதனை நிறைவு செய்ய முடிந்­தது. இஃக்வான் அமைப்­புடன் அல்-­கர்­ளா­விக்கு இருந்த தொடர்பு, மும்­முறை அவர் சிறை­படக் கார­ண­மா­யிற்று. 1949- இல் மன்னர் ஃபாரூக்கின் ஆட்­சியில் முத­லா­வ­தா­கவும், பின் 1954 முதல் 1956 வரை அதிபர் ஜமால் அப்துல் நாசர் அர­சாலும், பின்பு 1962 இ-ல் குறு­கி­ய­தொரு காலமும் அவர் எகிப்­தியச் சிறை­களில் அடைக்­கப்­பட்டார்.

யூசுஃப் அல்-­கர்­ளாவி, 1956 முதல் கெய்ரோ பள்­ளி­வா­யில்­களில் உத்­தி­யோ­கபூர்­வ­மாக பிரச்­சாரம் செய்யத் துவங்­கினார். 1959- இல் பிரச்­சாரம் செய்­வ­தி­லி­ருந்து தடை­செய்­யப்­பட்ட அவர், அல்-­ அஸ்ஹர் இஸ்­லா­மியக் கலா­சார துறைக்குப் பணி­மாற்றம் செய்­யப்­பட்டார். இஸ்­லா­மிய வக்ஃப் அமைச்சின் கீழ் இயங்­கிய இமாம்­க­ளுக்­கான நிறு­வ­னத்தின் மேற்­பார்­வை­யா­ள­ரா­கவும் பணி­யாற்­றினார். மார்க்க கல்­விக்­கான கத்தார் உயர்­நிலை நிறு­வ­னத்தின் தலை­வ­ராகப் பணி­யாற்­று­வ­தற்­கென அல்-­ அஸ்ஹர் அவரை அனுப்பி வைத்­தது. 1977 இ-ல் கத்தார் பல்­கலை கழ­கத்தில் இஸ்­லா­மிய ஷரீஆ துறை­யையும் சீறா மற்றும் சுன்­னாஹ்­வுக்­கான ஆய்வு மையத்­தையும் துவக்­கினார். அல்­ஜீ­ரி­யாவில் இஸ்­லா­மிய கற்­கை­க­ளுக்­கான அமீர் அப்துல் காதிர் பல்­க­லை­க்க­ழக கல்­வி­யி­யலாளர் குழுத் தலை­வ­ரா­கவும், இஸ்­லா­மிய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்சின் ஆலோ­ச­க­ரா­கவும் பணி­யாற்­றினார். வறுமை மற்றும் நோயால் அவ­தி­யுறும் உல­க­ளா­விய முஸ்­லிம்­க­ளுக்கு உதவும் பொருட்டு, சர்­வ­தேச இஸ்­லா­மிய நிவா­ரண நிறு­வ­னத்தை நிர்­மா­ணிப்­ப­தற்­கான முதல் அழைப்பு இவ­ரி­ட­மி­ருந்தே வந்­தது. அயர்­லாந்தைத் தலை­மை­ய­க­மாகக் கொண்ட ஃபத்வா மற்றும் இஸ்­லா­மிய ஆய்­வுக்­கான ஐரோப்­பியக் கவுன்­சிலின் தலை­வ­ரா­கவும், முஸ்லிம் அறி­ஞர்­க­ளுக்­கான சர்­வ­தேச ஒன்­றி­யத்தின் தலை­வ­ரா­கவும் மர­ணிக்கும் வரை பதவி வகித்­தார்.

பலஸ்தீன் உள்­ளிட்ட உலகின் பல பகு­தி­க­ளிலும் முஸ்­லிம்கள் நடத்­தி­வரும் சுய­நிர்­ணய உரிமைப் போராட்­டங்­க­ளுக்கு ஆத­ர­வான அவ­ரது பத்­வாக்கள், சர்­வ­தேச அளவில் பல மட்­டங்­களில் பெருந்­தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. அதே­வேளை, முஸ்லிம் குழுக்கள் சில­வற்றின் வரம்பு மீறல்­களைக் கண்­டிக்­கவும் அவர் தவ­றவில்லை. அல்-­ஜ­ஸீரா தொலைக்­காட்­சியில் ஹலால்-­ ஹராம் குறித்த அவ­ரது கேள்­வி-­ பதில் நிகழ்ச்­சிகள் உலகப் புகழ் பெற்­றவை.

டாக்டர் யூசுஃப் அல்-­கர்­ளாவி, இது­வரை சுமார் நூறு நூல்­களை எழு­தி­யி­ருக்­கிறார். கல்­வி­யியல் பாணியும் பார­பட்­ச­மற்ற சிந்­தனைப் போக்கும் அவ­ரது ஆக்­கங்­களின் முக்­கியப் பண்­பு­க­ளாக திகழ்­கின்­றன. ஷரீ­ஆவில் மர­பார்ந்த ஞானம், சம­காலப் பிரச்­சி­னைகள் குறித்த ஆழ்ந்த புரிதல் இரண்­டையும் ஒருங்கே வாய்க்கப் பெற்­றி­ருப்­பது இவ­ரது தனிச்­சி­றப்பு. ஃபிக்ஹுஸ் ஸகாத் எனும் இவ­ரது நூலைப் பற்றி கூறிய சைய்யித் அபுல் அஃலா மௌதூதி, “இஸ்­லா­மிய சட்­ட­வி­யலில் இந்­நூற்­றாண்டின் தலை­சி­றந்த நூல் இதுவே” எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

கலா­நி­தி அல்-­கர்­ளாவி தேர்ந்த ஒரு கவி­ஞரும் கூட. அவ­ரது கவி­தை­களுள் சில, நஃபஹத் வ லஃபஹத் என்ற தலைப்பில் நூல் வடி­விலும் வெளி­வந்­துள்­ளன.
கலா­நிதி யூசுப் அல் கர்­ளா­வி­யின் சிந்­தனை மற்றும் எழுத்­துக்­களால் ஈர்க்­கப்­பட்ட பலரும் அவ­ரது மறைவு தொடர்பில் தமது கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ள­னர்.
மிஷ்காத் ஆய்வு நிலை­ய­த்தின் பணிப்­பா­ளர் உஸ்தாத் எம்.ஏ.எம். மன்சூர் வெளி­யிட்­டுள்ள குறிப்­பில் பின்­வ­ரு­மாறு தெரி­­வித்­துள்­ளார்.

‘‘எழுத்தால் சாத­னைகள் பல­வற்றைப் படைத்த அந்தக் கர்­ளாவிப் பேனா முற்­றாக நின்று போய்­விட்­டது என்­பது மன­திற்கு பெரும் பாரத்­தையும் கவ­லை­யையும் தரு­கி­றது. எனினும் அவ­ரது எழுத்­துக்கள் அனைத்­தையும் 100 பாகங்­க­ளாக வெளி­யிட உள்­ளார்கள் என்ற செய்தி கர்­ளா­வியின் நாம் வாசிக்­காத எழுத்­துக்கள் இன்னும் உள்­ளன என்ற எண்­ணத்தை தந்து ஒரு சின்ன ஆறுதல் பெற வைக்­கி­றது.

நான் கண்ட இமாம் கர்­ளாவி நான்கு வகை­யான அறி­வா­ளுமை. அந்த பின்­ன­ணியில் நின்று அவர் பெரும் பங்­காற்­றினார்.
1. இஸ்­லாத்­திற்கு எதி­ரான சிந்­தனைப் போராட்­டங்­களில் கலந்­து­கொண்டு அது இக்­கால பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வாக அமை­கி­றது என நிறு­விய சிந்­த­னை­யாளன். இஸ்­லா­மியத் தீர்வின் தவிர்க்க முடியாத் தன்மை இறை நம்­பிக்­கையும் வாழ்வும் போன்ற நூல்கள் இதற்கு உதா­ர­ணங்­க­ளாகும்.
2. இஸ்­லா­மிய சட்டம், சட்ட ஆய்வு முறைமை (உஸூல் அல் பிக்ஹ்), ஸுன்னா, இறை நம்­பிக்கை (அகீதா), தஸவ்வுப் போன்ற ஷரீஆ கலை­களில் பல புதிய சிந்­த­னை­களை முன்­வைத்த மிகப்­பெரும் ஷரீஅத் துறை நிபுணர்.
3. இஸ்­லா­மிய எழுச்சி தீவிரம், வன்­மு­றைக்கு சென்று விடக்­கூ­டாது; இறுக்­கமும் கடும் போக்கும் கொண்ட சிந்­த­னை­களில் விழுந்து விடக் கூடாது என்­பதில் கவனம் செலுத்தி எழு­திய இஸ்­லா­மிய எழுச்­சியின் வழி­காட்டி. கோளாறு எங்கே உள்­ளது மறுப்­புக்கும் தீவி­ர­வா­தத்­திற்­கு­மி­டையே இஸ்­லா­மிய எழுச்சி போன்ற பல நூல்கள் இதற்­கான உதா­ர­ணங்­க­ளாகும்.
4. கர்­ளாவி ஆரம்ப காலத்தில் -இளம் வயதில்- கவிஞர் கர்­ளாவி என அழைக்­கப்­பட்டார். அவ்­வாறு -பின்னால் காலப் பிரிவில் அவ­ரிடம் சிந்­தனைப் பகுதி மிகைத்து விட்­டாலும்- ஒரு இலக்­கிய கர்த்­தா­வா­கவும் அவர் இயங்­கினார்.

இவ்­வாறு முஸ்லிம் சமூ­கத்தின் கவ­லை­களைச் சுமந்து கண்­களில் கண்­ணீ­ரோடும் உள்­ளத்தில் ஆழ்ந்த வேத­னை­யோடும் பாசத்­தோடும் வாழ்ந்த, சிந்­த­னை­யோடு மட்டும் நின்று விடாத, எந்த இயக்க கட்­ட­மைப்­புக்­குள்ளும் உட்­ப­டாத சமூக வழி­காட்டி அவர்.
சிறு­பான்மை முஸ்­லிம்­களை அவர் மறக்­க­வில்லை. சிறு­பான்மை ஒரு­போதும் பெரும்­பான்மை போன்று வாழவோ இயங்­கவோ கூடாது என்­பதில் அவர் தெளி­வாக இருந்தார். எனவே அதற்­கான “பிக்ஹ் அல் அகல்­லிய்யாத்” (சிறு­பான்­மைக்­கான சிந்­தனை முறைமை) என்ற கோட்­பாட்டு ஒழுங்­கொன்றை ஆரம்­பித்து வைத்தார்.

இந்த மாபெரும் மனி­தரை என்ன சொல்லி வழி அனுப்­பு­வது என்று எனக்குத் தெரி­ய­வில்லை. அவர் வார்த்­தை­க­ளு­னுள்ளே அடை­ப­டு­கி­றா­ரில்லை. இறைவா இந்த சமூ­கத்­திற்­கான அவ­ரது உழைப்­புக்­கான நற்­கூ­லியை வழங்­கு­வா­யாக. நாம் எல்லாம் உன் சன்­னி­தா­னத்தில் சந்­திக்க அருள் புரி­வா­யாக’’ எனத் தெரி­வித்­துள்­ளார்.
கல­ா­நி­தியின் பல நூல்­களை தமி­ழில் மொழி­பெ­யர்த்து வெளி­யிட்­டுள்ள கலா­நிதி ரவூப் ஸெய்ன் கர்­ளா­வியின் மறைவு தொடர்பில் எழு­தி­­யுள்ள குறிப்பில் பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டு­கி­றார்.

‘‘அறபு உலகைக் கடந்து உலக முஸ்­லிம்­களால் மதிக்­கப்­பட்ட மாணிக்கம் அவர். கர்­ளாவி அவர்கள் இஸ்­லா­மிய உல­குக்கு வெளியே சிறு­பான்­மை­யாக முஸ்­லிம்கள் வாழும் நாடு­க­ளுக்கும் பயணம் செய்­தவர். அவர்கள் எதிர்­நோக்­கிய பிரச்­சி­னை­க­ளுக்கு ஷரீஆ அடிப்­ப­டையில் தீர்­வுத்­திட்­டத்தை முன்­வைத்­தவர். முஸ்­லிம்கள் உலகில் எங்கு வாழ்ந்­தாலும் இஸ்­லா­மிய தனித்­து­வத்­துடன் வாழ வேண்டும் என்­பதில் அவர் காட்­டிய ஆர்­வமும் அக்­க­றையும் தனித்­து­வ­மா­னது.

அத­னால்தான் சிறு­பான்மை வாழ்­வியல் குறித்து அவ­ரது பிரத்­தி­யே­க­மான பிக்­ஹுத்­துறை ஆய்­வுகள் விரி­வ­டைந்­தன. அது தொடர்பில் அவர் விரி­வாக எழு­தினார்.
இத்­துறை சார் பிக்ஹு நூல்கள் அரி­திலும் அரிது. ஆய்­வுக்கும் பத்­வா­வுக்­கு­மான ஐரோப்­பிய சபையின் உரு­வாக்­கத்­திலும் வழி நடாத்­த­லிலும் அல்­லாமா கர்­ழாவி அவர்­க­ளது பங்கு மெச்­சு­த­லுக்­கு­ரி­யது. அம்­மன்றம் ஐரோப்­பிய நாடு­களில் கடந்த மூன்று தசாப்­தங்­க­ளாக நடாத்தி வந்த ஆராய்ச்சி மாநா­டு­களில் உத்­வே­கத்­துடன் பங்­கு­பற்­றிய அல்­லாமா அவர்கள் அம்­மன்­றத்தை வழி­ந­டாத்­து­வ­திலும் முன்­னணிப் பங்­கினை ஆற்­றி­யுள்ளார். இஸ்­லா­மிய அறி­ஞர்­களின் சர்­வ­தேச ஒன்­றி­யத்தின் தலை­வ­ராக இருந்து அன்னார் ஆற்­றிய பங்­க­ளிப்பும் போற்­று­த­லுக்­கு­ரியதாகும்.

இஸ்­லா­மிய சட்டம்,தஃவா, சமு­கக்­களம், இஸ்­லா­மிய கலைகள், வர­லாறு,படைப்­பி­லக்­கியம், ஆன்­மீகம் என அனைத்துத் தளங்­க­ளிலும் மிகுந்த விளை திற­னுடன் இயங்­கிய இமாம் அவர்கள், இந்த ஒவ்­வொரு பரி­மா­ணத்­திலும் எழு­தி­யுள்ள நூல்கள் அவ­ரது ஆழ­மான ஆய்­வு­களின் பிரத்­தி­யட்­ஷ­மான புலப்­பா­டு­க­ளா­கவே உள்­ளன. குர்ஆன்,சுன்னாஹ், முன்­னைய இஸ்­லா­மிய அறி­ஞர்கள்,சட்­ட­வி­ய­லா­ளர்கள், என ஆதா­ரங்­களை அடுக்கும் அவ­ரது எழுத்­துப்­பாங்கு அவ­ருக்­கே­யு­ரிய தனித்­தன்­மை­யாகும். வரை­வி­லக்­க­ணத்­தி­லி­ருந்து தொடங்கி வர­லாற்று வழி­யாக நகர்ந்து ஷரீ­ஆவின் வரை­ய­றை­களை முன்­னி­றுத்தி தர்க்க ரீதி­யாக முடி­வு­றுத்தும் அந்த எழுத்து மிகுந்த சுவா­ரஸ்யம் கொண்­டது. வாசிக்­கும்­போ­துதான் அந்த இன்­பத்தை அனு­ப­விக்­கலாம்’’ எனக் குறிப்­பி­டு­கி­றார்.
கலா­நிதி யூசுப் அல் கர்­ளா­வியின் மறைவு தொடர்பில் ஜாமிஆ நளீ­மியா கலா­பீ­டத்தின் சிரேஷ்ட விரி­வு­­ரை­யாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் எழு­தி­யுள்ள குறிப்பில் பின்­வ­ரு­மாறு குறிப்­பி­ட்டுள்ளார்.

‘‘ யார் ஏற்­றாலும் மறுத்­தாலும் 20, 21 ஆம் நூற்­றாண்­டு­களில் இஸ்­லாத்தை பாது­காக்­கவும் வளர்க்­கவும் அவர் இமா­லயப் பங்­க­ளிப்பை வழங்­கி­யி­ருக்­கிறார். தனது ஏழு பிள்­ளை­க­ளையும் கலா­நி­தி­க­ளாக்­கிய வள­மான குடும்­பத்தின் தகப்பன் அவர். நான்கு பெண்கள் மூன்று ஆண்கள். தனது எழுத்­துக்கள், உரைகள் வாயி­லாக அவர் பின்­வரும் கருத்­தி­யல்­களை ஆழ­மாக வலி­யு­றுத்தி வந்­தி­ருக்­கிறார்:-

முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யி­ன­ராக வாழும் சூழ­லுக்கு மட்­டு­மன்றி சிறு­பான்­மை­யாக வாழும் சூழ­லுக்கும் பொருத்­த­மாகும். கரைந்து போகாமல், தனித்­துவம் பேணிய நிலையில், சமா­தான சக­வாழ்வைப் பேணித் தான் ஒரு முஸ்லிம் சிறு­பான்மை சூழலில் வாழ வேண்டும். மார்க்­கத்தின் எல்லாப் போத­னை­களும் சம­த­ர­மா­னவை அல்ல. அவற்றில் முதன்­மைப்­ப­டுத்த வேண்­டி­யவை, உட­ன­டி­யாக செய்­யப்­பட வேண்­டி­யவை அதி­முக்­கி­யத்­துவம் வாய்ந்­தவை என்ற ஒரு பகுதி இருப்­பது போலவே கால­தா­ம­த­மாக செய்ய முடி­யு­மா­னவை, ஒப்­பீட்டு ரீதியில் முக்­கி­யத்­துவம் குறைந்­தவை என்ற ஒரு பகு­தியும் உள்­ளது.

கடும்­போக்கு, தீவி­ர­வாதம், பிடி­வாதம்,கண்­மூ­டித்­தனம், வெறித்­தனம் என்­ப­வற்றை எதிர்த்து இஸ்­லாத்தின் தாரா­ளத்­தன்மை,நெகிழ்வுத் தன்மை, அர­வ­ணைக்கும் பண்பு, விட்­டு­கொ­டுப்பு, சக­வாழ்வு என்­பன தொடர்­பாக அவர் அதி­க­ம­திகம் பேசியும் எழு­தியும் வந்தார். அப்­ப­டி­யி­ருந்தும் அவர் சிலரால் கார­சார விமர்­சிக்­கப்­பட்­டுள்ளார். தீவி­ர­வா­தத்தை வன்­மு­றையைத் தூண்­டி­யவர், பத்­வாக்­களில் அதி­க­ம­திகம் தாரா­ள­மாக நடந்தார் என்­றெல்லாம் கூறப்­பட்டு குற்­ற­வா­ளி­யாக்­கப்­பட்டார். அவ­ரது வபாத் தொடர்­பாக இரங்கல் செய்­திக்கு பதி­லாக சந்­தோ­ஷத்தை சிலர் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். சில நாடு­க­ளுக்கு அவர் நுழைய அனு­மதி மறுக்­கப்­பட்­டது.

அவரை விமர்­சித்­த­வர்கள் மூன்று சாரார்:- இஸ்­லாத்தின் வளர்ச்­சியைக் கண்டு பொறா­மைப்­பட்டோர், அவ­ரது நூல்­களை வாசிக்­கா­த­வர்கள் அல்­லது நுணிப்புல் மேய்ந்­த­வர்கள், சத்­தி­யத்தை உரிய முறையில் புரிந்து ஹக்கை ஹக்­காக கூற வேண்டும் என்ற ஆர்­வ­முள்­ள­வர்கள்.

மூன்­றா­வது தரப்­பி­ன­ரது விமர்­ச­னங்­களே நியா­ய­மா­னவை. இவர்கள் இமாம் கர்­ளா­வியின் பாரிய பங்­க­ளிப்பை ஏற்றுக் கொள்ளும் அதே­வேளை அவ­ரது பிழை­களை ஆதா­ரங்­க­ளோடு ஆனால், பண்­பா­டாக சுட்­டிக்­காட்டத் தவ­ற­வில்லை.

அவரை நாம் ஓர் பேர­றி­ஞ­ராக பார்க்கும் அதே­வேளை அவரை மனி­த­ரா­கவே பார்க்க வேண்டும். நபி­மார்­களைத் தவிர மற்­றைய அனை­வரும் தவறு செய்யக் கூடி­ய­வர்­களே. அவ­ரது சில நிலைப்­பா­டுகள் மற்றும் பத்­வாக்­களில் பிழைகள் இருக்­கலாம். அவ­ரது சில இஜ்­தி­ஹாத்கள் பிழைத்­தி­ருக்கலாம். இந்தப் பார்வை எல்லா அறி­ஞர்­களைப் பொறுத்­த­வ­ரையில் எமக்கு வர வேண்டும்.

இமாம் யூஸுப் கர்­ளாவீ கூறும் கருத்­துக்கள் அல்­லது வெளி­யிட்ட பத்­து­வாக்கள் எல்லாம் இலங்கைச் சூழ­லுக்கு பொருத்­த­மாக இருக்கும் என்று கூற முடி­யாது. அவற்றில் சில பொருத்­த­மற்­ற­வை­யாக இருக்­கலாம். எனவே அவற்றை நாம் தவிர்க்க வேண்டும். ஆனால், எமது வாசிப்பு விரிந்­தாக இருக்க வேண்டும். எல்லா அறி­ஞர்­க­ளது கருத்­துக்­க­ளையும் திறந்த மன­தோடு வாசிக்கும் சிந்­தனை சுதந்­திரம் இருக்க வேண்டும். ஆனால் அவற்றில் பொருத்­த­மா­ன­வற்­றையே எமது சூழ­லுக்கு நாம் அனு­ம­திக்க வேண்டும்.

இலங்கை என்­பது எகிப்தோ பாகிஸ்­தானோ அல்ல. இலங்கை முஸ்­லிம்­க­ளுக்­கென தனி­யான வாழ்­வொ­ழுங்கு இருக்க வேண்டும். இந்த நாட்டில் நாம் சிறு­பான்­மை­யி­ன­ராக வாழு­கின்றோம். பெரும்­பான்மை சமூ­கங்­க­ளோடு ஒற்­று­மை­யா­கவும் அவர்­க­ளது உணர்­வு­களைப் புரிந்துகொண்டும் சமாதானமாகவுமே வாழ வேண்டும். வன்முறை ஒதுங்கிய வாழ்வு இஸ்லாத்தால் அனுமதிக்கப்பட்டதல்ல. கலாநிதி கர்ளாவி அவர்கள் சிறுபான்மை வாழ்வொழுங்கில் இத்தகைய வரம்புகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கருத்தை பலபோது வலியுறுத்தி வந்திருக்கிறார்’’ எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

2014 ஆம் ஆண்­டு கலா­நிதி யூசுப் அல் கர்­ளா­வியை இல­ங்­கையைச் சேர்ந்த பிர­மு­கர்கள் குழு­வொன்று சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யது. இதன்­போது ‘‘ இலங்கை முஸ்­லிம்கள் தமது தனித்­து­வத்தைப் பாது­காத்து வாழ்­கின்ற அதே­நேரம் பெரும்­பான்மை சமூ­கங்­க­ளுடன் சுமு­க­மான உறவை வளர்த்துக் கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும்’’ என அவர் அறி­வுரை வழங்­கி­யி­ருந்தமை குறிப்­பி­டத்­தக்­கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.