பலதார மணத்திற்கு கடும் நிபந்தனையுடன் அனுமதி வழங்க முடியும்

தனியார் சட்ட திருத்தம் குறித்த குழு பரிந்துரை ஏழு உறுப்பினர்கள் ஆதரவு, இருவர் கடும் எதிர்ப்பு

0 541

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் முஸ்லிம் ஆண்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள பல­தார மணம் செய்து கொள்­வ­தற்­கான அனு­மதி கண்­டிப்­பான நிபந்­த­னை­க­ளுடன் தொடர்ந்தும் அனு­ம­திக்­கப்­பட வேண்டும் என முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் தேவை­யான திருத்­தங்­களைப் பரிந்­து­ரைப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழு தெரி­வித்­துள்­ளது.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைப் பரிந்­து­ரைப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள 9 பேர­டங்­கிய குழுவில் ஏழுபேர் பல­தார மணத்தை கடும் நிபந்­த­னை­க­ளுடன் அனு­ம­திக்க வேண்டும் என தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்­ளனர். இதே வேளை குழுவின் இரு அங்­கத்­த­வர்கள் பல­தார மணம் முழு­மை­யாக இல்­லாமற் செய்­யப்­பட வேண்டும் என மறுப்புத் தெரி­வித்­துள்­ளனர்.

1951 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தின் 24 ஆம் பிரிவின் கீழ் இலங்கை முஸ்லிம் ஆண்­க­ளுக்கு பல­தார மணம் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது.
முஸ்லிம் ஆண்­க­ளுக்கு பல­தார மணம் கடும் நிபந்­த­னை­க­ளுடன் தொடர்ந்தும் அனு­ம­திக்­கப்­ப­ட­வேண்டும் என்ற பரிந்­துரை, சட்­டத்தில் திருத்­தங்­களை பரிந்­து­ரைப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி, சப்­ரி­ ஹ­லீம்­தினின் குழு­வி­னரால் இரு­ வா­ரங்­க­ளுக்குள் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­விடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.
கடந்த அர­சாங்­கத்தின் காலத்தில் முஸ்லிம் ஆண்­க­ளுக்­கான பல­தார மணம் தொடர்­பான அனு­ம­தியை இரத்துச் செய்­ய­வேண்­டு­மென அப்­போ­தைய அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யி­ருந்­தது. அப்­போது இன்­றைய வெளி­வி­வ­கார அமைச்சர் அலி­சப்ரி நீதி­ய­மைச்­ச­ராக பத­வியில் இருந்தார்.

தற்­போ­தைய நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக்ஷ முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைப் பரிந்­து­ரைப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழுவின் பரிந்­து­ரை­களை மீண்டும் தன்­னிடம் சமர்ப்­பிக்­கு­மாறு கோரி­யுள்ளார். அதற்­கி­ணங்­கவே குறிப்­பிட்ட பரிந்­து­ரைகள் இரு­வார காலத்­துக்குள் நீதி­ய­மைச்­ச­ரிடம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.
இவ்­வி­வ­காரம் தொடர்பில் முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்­களைப் பரிந்­து­ரைப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழுவின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்­தீனைத் தொடர்பு கொண்­ட­போது அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார்.

‘‘இச்­சட்­டத்தில் திருத்­தங்­களைச் சமர்ப்­பிப்­ப­தற்­காக ஆரம்­பத்தில் நிய­மிக்­கப்­பட்ட குழு பல­தார மணம் தொடர்பில் எவ்­வித சிபா­ரி­சு­க­ளையும் முன்­வைக்­க­வில்லை.
சட்ட வரைபு ஏனைய திருத்­தங்கள் தொடர்பில் பூர­ணப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. என்­றாலும் பல­தார மணம் தொடர்­பான விவ­கா­ரத்­தினால் அத்­தி­ருத்­தங்கள் இன்னும் அமுல்­ப­டுத்­து­வ­தற்­கான ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

பல­தார மணம் உணர்­வு­பூர்­வ­மான விட­ய­மாகும். இது தொடர்பில் நாம் பல கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தியே தீர்­மா­னத்­துக்கு வந்­துள்ளோம். ஏனென்றால் பல­தார மணத்தை புனித குர்ஆன் அனு­ம­தித்­துள்­ளது இதில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு மக்­களின் கருத்­து­களைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும்.

நாங்கள் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷவைச் சந்­தித்­த­போது பல­தார மணம் தொடர்பில் குழுவின் கருத்­தினை அவர் வின­வினார். பல­தார மணம் கடு­மை­யான நிபந்­த­னை­க­ளுடன் அனு­ம­திக்­கப்­பட வேண்­டு­மென 7 உறுப்­பி­னர்கள் கருத்து தெரி­வித்­தனர். ஏனைய இரு உறுப்­பி­னர்கள் பல­தார மணம் அனு­ம­திக்­கப்­ப­டக்­கூ­டாது என கருத்து தெரி­வித்­தனர். இந்­நி­லையில் அமைச்சர் இதனை எழுத்­து­மூலம் அறி­விக்­கு­மாறு எங்­களை வேண்­டிக்­கொண்டார்.

காதி­நீ­தி­மன்ற முறை­மைக்குப் பதி­லாக சம­ரசம் செய்து வைப்­ப­வர்கள் (Conciliator) நிய­மிக்­கப்­பட வேண்டும். இவர்­க­ளி­ட­மி­ருந்து இரண்­டா­வது அல்­லது அதற்கு மேற்­பட்ட விவா­கங்­க­ளுக்கு அனு­மதி பெற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும் என பரிந்­து­ரைத்­துள்ளோம். Conciliatorகளது தகுதி குறித்து நீதிச்­சேவை ஆணைக்­குழு தீர்­மா­னிக்கும்.

கொன்­சி­லி­யேட்­ட­ராக நிய­மிக்­கப்­ப­டு­ப­வர்கள் சட்ட அறிவும் கவுன்­சிலிங் பற்­றிய அறிவும் உடை­ய­வர்­க­ளாக இருக்க வேண்­டு­மென நாம் பரிந்­து­ரைத்­துள்ளோம். இவர்கள் விசா­ரணை நடாத்தி பல­தார மணத்தை ஒரு­வ­ருக்கு அனு­ம­திப்­பதா எனத் தீர்­மா­னிப்­பார்கள். பல­தார மணம் கடு­மை­யான நிபந்­த­னை­க­ளு­டனே அனு­ம­திக்­கப்­பட வேண்­டு­மென குழு சிபா­ரிசு செய்­துள்­ளது.

கொன்­சி­லி­யேட்டர் பல­தார மணத்­துக்கு அனு­மதி வழங்­கு­வ­தற்கு முன்பு மனை­வி­யர்கள் சம­மாக நடத்­தப்­ப­டு­வார்­களா என்­பது தொடர்பில் ஆராய வேண்டும். பொரு­ளா­தார ரீதியில், உள ரீதியில், உடல் ரீதியில் அவர்கள் சம­மாக நடத்­தப்­பட வேண்டும். ஒருவருக்கு ஒரு மனைவி இருக்கும் போது மேல­தி­க­மாக மனை­வி­யர்­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கு, திரு­மணம் செய்து கொள்­வ­தற்கு, மனை­வி­யர்­க­ளையும் பிள்­ளை­க­ளையும் தாப­ரிப்­ப­தற்கு பொரு­ளா­தார ரீதியில் தகு­தி­யு­டை­ய­வர்­க­ளாக இருக்க வேண்டும்.
ஒருவர் இரண்­டா­வது தட­வை­யாக திரு­மணம் செய்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பு அவர் முத­லா­வது மனை­வி­யையும் தாப­ரிக்கக் கூடிய பொரு­ளா­தார வசதி கொண்­ட­வ­ராக இருக்க வேண்டும்.

ஒருவர் பல­தார மணம் செய்­வ­தற்கு உகந்த கார­ணங்கள் இருக்க வேண்டும். அதா­வது முத­லா­வது மனைவி நீண்ட காலம் நோயினால் பாதிப்­புற்­ற­வ­ளாக இருக்க வேண்டும். அல்­லது சுகப்­ப­டுத்த முடி­யாத நோய்­க­ளுக்­குள்­ளாகி இருக்க வேண்டும் அல்­லது மண வாழ்க்­கையில் ஈடு­பட முடி­யா­த­வ­ளாக இருக்க வேண்டும். இவ்­வா­றான நிலையில் பல­தார மணம் அனு­ம­திக்­கப்­ப­டலாம் என்றார்.

தொடர்ந்தும் சப்­ரி­ ஹலிம்தீன் தெரி­விக்­கையில், முஸ்லிம் பெண்­களின் வய­தெல்லை 18ஆக அதி­க­ரிக்­கப்­ப­டு­வ­தற்கு சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ளது. ஏனைய திரு­மணச் சட்­டங்­க­ளிலும் திரு­மண வய­தெல்லை 18 ஆகவே இருக்­கி­றது. அத்­தோடு திரு­மணப் பதிவில் மணப்­பெண்ணின் கையொப்பம் கட்­டா­ய­மாக பெறப்­பட வேண்டும் எனவும் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

தற்­போது திரு­மணப் பதிவில் மணப்­பெண்ணின் கையொப்பம் பெற்­றுக்­கொள்­ளப்­ப­டு­வ­தில்லை. அதற்குப் பதிலாக மணப்பெண்ணின் ‘வொலி’யே கையொப்பமிடுகிறார். இந்த விடயத்தை நாம் விருப்பத்துக்குரியதாக சிபாரிசு செய்துள்ளோம். மணப்பெண் ‘வொலி’யின் கையொப்பம் தேவையெனக் கருதினால் பெற்றுக்கொள்ளலாம். வொலியின் கையொப்பம் திருமணம் வலிதாக இருப்பதற்கு கட்டாயமாக தேவையாக மாட்டாது. இதற்குப் பதிலாக மணப்பெண் திருமணப் பதிவில் கையொப்பமிட வேண்டும்.

தற்போது மணப்பெண்ணின் தரப்பில் ‘வொலி’ மாத்திரமே கையொப்பமிடுவது அமுலில் உள்ளது. இது தற்போது விருப்பத்துக்குரியதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை பரிந்துரைத்துள்ள குழு ஏனைய முஸ்லிம் நாடுகளில் அமுலிலுள்ள திருமண உடன்படிக்கைகளை உதாரணமாக காட்டியுள்ளது என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.