மாணவர்கள் பசியோடு இருக்க இடமளிக்காதீர்

0 454

இலங்­கையில் பொரு­ளா­தார நெருக்­க­டிகள் கார­ண­மாக 6 மில்­லி­ய­னுக்கும் அதிக மக்கள் உணவு பாது­காப்­பற்ற நிலையில் உள்­ள­தாக உலக உணவுத் திட்டம் அண்மையில் தெரி­வித்­துள்­ளமை கவனிப்புக்குரியதாகும்.

அதா­வது நாட்டில் சுமார் 30 சத­வீத மக்கள் – தற்­போது உணவுப் பாது­காப்­பற்ற நிலையில் உள்­ளனர். அவர்­க­ளுக்கு மனி­தா­பி­மான உதவி தேவைப்­ப­டு­கி­றது. குறை­வ­டைந்­துள்ள உள்­நாட்டு விவ­சாய உற்­பத்தி, அந்­நியச் செலா­வணி இருப்பு பற்­றாக்­குறை மற்றும் ரூபாவின் பெறு­ம­தியில் ஏற்­பட்­டுள்ள வீழ்ச்சி ஆகி­யவை உணவுப் பற்­றாக்­குறை மற்றும் வாழ்க்கைச் செலவில் அதி­க­ரிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இது மக்­களின் ஆரோக்­கி­ய­மான மற்றும் அதிக உண­வுக்­கான அணு­கலைக் கட்­டுப்­ப­டுத்­து­கி­றது. பொரு­ளா­தார நெருக்­க­டி­யா­னது குடும்­பங்­களை பசி மற்றும் வறு­மையில் தள்­ளி­யுள்­ளது. சிலர் முதல் முறை­யாக வறுமைக் கோட்­டிற்குக் கீழ் உள்­ள­டங்­கி­யுள்­ளனர். உலக வங்கி மதிப்­பீ­டு­க­ளுக்­க­மைய இது சுமார் அரை மில்­லியன் மக்­களைக் உள்­ள­டக்­கி­ய­தாகக் காணப்­ப­டு­கி­றது.

உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் சமீ­பத்­திய மதிப்­பீட்­டின்­படி, 86 சத­வீத குடும்­பங்கள் மலி­வான, குறை­வான சத்­துள்ள உணவை வாங்­கு­கின்­றனர், குறை­வாக சாப்­பி­டு­கின்­றனர் மற்றும் சில சம­யங்­களில் உணவை முற்­றி­லு­மாக தவிர்த்து வரு­கின்­றனர். பொரு­ளா­தார நெருக்­கடி மற்றும் தொற்­று­நோய்க்கு முன்னர், இலங்கை முழு­வதும் ஊட்­டச்­சத்து குறை­பாடு விகிதம் ஏற்­க­னவே அதி­க­மாக இருந்­தது.

கொவிட்-19 தொற்­று­நோய்க்கு முன்னர், மற்ற நடுத்­தர வரு­மான நாடு­களை விட இலங்கைப் பெண்­களும் குழந்­தை­களும் ஊட்­டச்­சத்து குறை­பாட்டால் மிகவும் அதி­க­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 5 வய­திற்­குட்­பட்ட குழந்­தை­களில் 17 சத­வீ­த­மானோர் வளர்ச்சி குன்­றி­யதால் மிகவும் குட்­டை­யாக இருந்­தனர் மற்றும் 15 சத­வீ­த­மானோர் உய­ரத்­துடன் ஒப்­பிடும் போது மிகவும் உடல் மெலி­வாகக் காணப்­பட்­டனர். தற்­போ­தைய பொரு­ளா­தார நெருக்­கடி இதை மேலும் மோச­மாக்கும் என்றும் உலக உணவுத் திட்டம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இத­னி­டையே சமீப நாட்களாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட குழந்­தை­களில் பெரும்­பா­லானோர் போஷாக்­கின்­மையால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக வைத்­தி­ய­சா­லை­யினால் மேற்­கொள்­ளப்­பட்ட கணக்­கெ­டுப்பில் தெரி­ய­வந்­துள்­ளது. குழந்­தை­க­ளுக்கு சத்­தான உணவு கிடைக்­கா­மையே இதற்குக் காரணம் என்றும் தெரி­ய­வந்­துள்­ளது.

கடந்த வருடம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட குழந்­தை­களில் சுமார் 100 பேர் நீரி­ழிவு நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் மேலும் 900 சிறு­வர்கள் புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் வைத்­தி­ய­சா­லையின் சிறுவர் சிகிச்சை நிபுணர் வைத்­தியர் தீபால் பெரேரா தெரி­வித்­தி­ருக்­கிறார்.

மேலும், கடந்த இரண்டு, மூன்று ஆண்­டு­க­ளாக பாட­சா­லைகள் மூடப்­பட்­டதால், சரி­யான சத்­தான உணவு கிடைக்­கா­த­துடன், குழந்­தை­களின் உள ஆரோக்கியமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சிறார்­களை இந்த போசாக்­கின்மை நிலை­யி­லி­ருந்து காப்­பாற்­றா­விட்டால் எதிர்­கா­லத்தில் அவர்­களின் மூளை வளர்ச்சி குறைந்து அவர்­களின் புத்­தி­சா­லித்­தனம் குறையும் அபாயம் உள்­ளது எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

பொரு­ளா­தார நெருக்­க­டி­மிக்க இக் காலப்­ப­கு­தியில் வறுமைக் கோட்­டுக்­குட்­பட்ட பிள்­ளைகள் பாட­சா­லை­களில் வழங்­கப்­படும் மதிய உண­வு­க­ளையே நம்­பி­யுள்­ளனர். எனினும் தற்­போது 60 ரூபா பெறு­ம­தி­யான உணவே வழங்­கப்­ப­டு­கி­றது. ஒரு முட்­டையின் விலையே 60 ரூபாவை விட அதி­க­மா­க­வுள்ள இன்­றைய நிலையில், இத் தொகைக்குள் எவ்­வாறு மாண­வர்­க­ளுக்கு ஊட்­டச்­சத்­து­ணவு கொண்ட உணவு வழங்கப்படும் என்பது கேள்விக்குறியே. எனவே இத் தொகையை அதிகரிக்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டின் பல பகுதிகளிலும் பாடசாலை மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டங்களை பொது மக்கள் சுயமாக முன்வந்து மேற்கொள்வதை அவதானிக்க முடிகிறது. சில பிரதேசங்களில் ஆசிரியைகளே தமது வீடுகளில் சமைத்துக் கொண்டு வந்து வறிய மாணவர்களுக்கு வழங்குகின்ற மெச்சத்தக்க சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இவ்வாறான திட்டங்கள் சகல பகுதிகளிலும் விஸ்தரிக்கப்பட வேண்டும். மாணவர்கள் பசியோடு தாகத்தோடு இருப்பதற்கு அனுமதிக்க முடியாது. சமூகத்திலுள்ள அனைவரும் இந்தப் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.