ஹஜ் யாத்திரை விவகாரம்: 65 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரிகள் முற்பதிவு கட்டணத்தை மீளப் பெறலாம்

0 343

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கடந்த காலங்­களில் ஹஜ் யாத்­திரை மேற்­கொள்­வ­தற்­காக 25 ஆயிரம் ரூபா பதி­வுக்­கட்­டணம் செலுத்தி பதிவு செய்து கொண்­டுள்ள 65 வய­துக்கு மேற்­பட்ட விண்­ணப்­ப­தா­ரிகள் தங்­க­ளது பதி­வுக்­கட்­ட­ணத்தை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தி­ட­மி­ருந்து மீளப் பெற்­றுக்­கொள்­ளலாம் என அரச ஹஜ் குழு அறி­வித்­துள்­ளது.

சவூதி அரே­பி­யாவின் ஹஜ் உம்ரா அமைச்சு ஹஜ் யாத்­திரை மேற்­கொள்ளும் பய­ணி­களின் வய­தெல்­லையை 65 வய­தாக கட்­டுப்­ப­டுத்­தி­யுள்­ள­தை­ய­டுத்து அரச ஹஜ் குழு இத்­தீர்­மா­னத்தை மேற்­கொண்­டுள்­ளது.

இது­தொ­டர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் கருத்து தெரி­விக்­கையில் ‘ஹஜ் யாத்­திரை மேற்­கொள்­வ­தற்கு கடந்த காலங்­களில் விண்­ணப்­பித்த ஆயி­ரக்­ க­ணக்­கா­னோரின்  நூற்­றுக்­க­ணக்­கான விண்­ணப்­ப­தா­ரிகள் 65 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள். சவூதி அரே­பிய ஹஜ் அமைச்சின் புதிய நிபந்­த­னை­களின் படி 65 வய­துக்கு மேற்­பட்­டோ­ருக்கு ஹஜ் யாத்­திரை மேற்­கொள்ள முடி­யாது. மேலும் தற்­போ­தைய பொரு­ளா­தார நெருக்­கடி நிலைமை கார­ண­மாக விண்­ணப்­பித்­தோரில் அநேகர் ஹஜ் யாத்­திரை மேற்­கொள்ள இய­லாத நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர். அவ்­வா­றா­ன­வர்கள் தங்­க­ளது விண்­ணப்­பப்­ப­திவுக் கட்­ட­ணத்தை மீளப்­பெற்­றுக்­கொள்ள முடியும் என அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் தெரி­வித்தார்.

ஹஜ் விண்­ணப்ப பதிவுக் கட்டணத்தை மீளப்பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.