முஸ்லிம் கைதிகளை நிர்வாணமாக்கி ஆசனவாயிலில் ஊசியை செருகுவர்

தடுத்து வைக்கப்பட்டிருந்த அஹ்னாப் ஜஸீம் தெரிவிப்பு

0 461

விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருக்கும் கைதி ஒருவர் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் மீண்டும் சிறைக்கு அழைத்து வரப்­படும் போது, விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரால் அவர்கள் பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­வது வழக்கம். குறித்த கைதி முஸ்­லி­மாக இருந்தால், அவர்­க­ளது ஆடை­களை களைந்து நிர்­வா­ண­மாக நிற்கச் சொல்லி, ஆச­ன­வா­யிலில் ஒரு ஊசியைச் செருகி, விளக்கு வெளிச்­சத்தைப் பாய்ச்சி சோதனை செய்வர் என கவிஞர் அஹ்னாப் ஜஸீம் தனது ட்விட்டர் பதி­வொன்றில் தெரி­வித்­துள்ளார்.

மனித உரிமை செயற்­பாட்­டா­ளரும் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் முன்னாள் ஆணை­யா­ளர்­களில் ஒரு­வ­ரு­மான சட்­டத்­த­ரணி அம்­பிகா சற்­கு­ண­நாதன், பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள பெண் கைதி­களை பார்­வை­யிடச் சென்ற உற­வி­னர்­களின் ஆடை­களை அகற்­று­மாறு கோரி பொலிசார் அநா­க­ரி­க­மாக நடந்து கொண்­ட­தாக குறிப்­பிட்டு நீண்ட பதி­வொன்றை தனது ட்விட்­டரில் வெளி­யிட்­டி­ருந்தார். இதற்கு பதி­ல­ளித்து வெளி­யிட்­டுள்ள பதி­வி­லேயே கவிஞர் அஹ்னாப் ஜஸீம் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலைத் தொடர்ந்து பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட கவிஞர் அஹ்னாப் ஜஸீம், சுமார் 19 மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.