திணைக்கள கட்டடம் பறிபோகிறதா?

0 378

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் சமூ­கத்­துக்­கென நிர்­மா­ணிக்­கப்­பட்டு தற்­போது முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் இயங்­கி­வரும் 9 மாடி கட்­டி­டத்தை சுவீ­க­ரிக்கும் நட­வ­டிக்­கை­களை புத்­த­சா­சன மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சு முன்­னெ­டுத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கடந்த வருட ஆரம்­பத்தில் கட்­டி­டத்தை புத்­த­சா­சன அமைச்சு கையேற்­ப­தற்கு அனு­மதி பெறப்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­கி­றது. இந்த 9 மாடி கட்­டி­டத்தை பொறுப்­பேற்று அங்கு இந்து விவ­கார, மற்றும் கிறிஸ்­தவ விவ­கார திணைக்­க­ளங்­களை இட­மாற்றத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இக்­கட்­டித்தில் மூன்று மாடி­களை தற்­போது முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் பயன்­ப­டுத்தி வரும் நிலையில் ஏனைய மாடிகள் பூர­ணப்­ப­டுத்­தப்­ப­டாத நிலையில் காணப்­ப­டு­கின்­றன.

ரயில்வே திணைக்­க­ளத்­துக்கு சொந்­த­மான தற்­போது முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் இயங்­கி­வரும் கட்­டிட காணி நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பை­யினால் கையேற்­கப்­பட்டு வழங்­கப்­பட்­ட­தாகும். இந்தக் கட்­டித்­துக்­கான உறுதி முஸ்லிம் பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு மாற்றம் செய்­வ­தற்­கான இறுதி கட்­டத்தில் உள்ள நிலை­யிலே புத்­த­சா­சன அமைச்­சினால் இந்த அதி­ரடி நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

மூன்று மாடிகள் தவிர்ந்த ஏனைய மாடி­களின் சாவிக் கொத்­து­களை திருப்பி கைய­ளிக்­கு­மாறு கோரப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இக்­கட்­டிடம் முஸ்லிம் சமூ­கத்தின் சொத்தாகும். தற்­போது பூர­ணப்­ப­டுத்­தப்­ப­டா­துள்ள மாடி­களில் தற்­போது இட நெருக்­க­டியில் சிக்­கித்­த­விக்கும் காதிகள் மேன்­மு­றை­யீட்டு சபையை இங்கு இட­மாற்ற முடியும். மற்றும் ஹஜ் முக­வர்கள் சங்­கத்­துக்கும், முஸ்லிம் சமூ­க­நல இயக்­கங்­க­ளுக்கும் வாட­கைக்கு விட­மு­டியும்.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் முஸ்லிம் அமைச்­சர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தலை­யிட்டு கட்­டி­டத்தை பாது­காப்­ப­தற்கு செயலில் இறங்க வேண்டும். தற்போதைய அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க முஸ்லிம் சமூகத்துடன் நெருக்கிய தொடர்புகளைப் பேணுபவர். அவர் இதுவிடயம் தொடர்பில் மீள்பரீசீலனை செய்ய வேண்டுமென முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.